கம்பஹா ஆசிரியர்களுக்கு மூன்று நாள் கருத்தரங்கு

கம்பஹா ஆசிரியர்களுக்கு மூன்று நாள் கருத்தரங்கு
( மினுவாங்கொடை நிருபர் )
   கம்பஹா மாவட்டத்தில் இஸ்லாமிய கற்கைத் துறைகளில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களின் கற்பித்தல் மேம்பாட்டைக் கருத்திற்கொண்டு, மூன்று நாள் இலவச வதிவிடக் கருத்தரங்கொன்றை, கம்பஹா மாவட்ட இஸ்லாமியப் பாடசாலைகளின் சம்மேளனம் ஏற்பாடு செய்துள்ளது.
   இக்கருத்தரங்கு, எதிர்வரும் 9 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு ஆரம்பமாகி, தொடர்ந்தும் 10 ஆம், 11 ஆம் திகதிகளில், கல் - எளிய அலிகார் மகா வித்தியாலயத்தில் நடைபெறும்.
   கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த அரச பாடசாலைகளில் இஸ்லாம் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்கள், அஹதிய்யாப் பாடசாலைகள், குர்ஆன் மத்ரஸாக்களின் ஆசிரியர்கள், மெளலவிமார்கள்,  மெளலவியாக்கள் உட்பட க.பொ.த. (சா/த), (உ/த) ஆகியவற்றில் சித்தியடைந்த மாணவர்கள், இக்கருத்தரங்கில் கலந்துகொள்ள முடியும் என, ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். அத்துடன், இவர்களுக்கு தங்குமிட மற்றும் உணவு வசதிகள் இலவசமாக வழங்கப்படுமெனவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்