மாலைத்தீவில் தடுத்து வைக்கப்பட்டடிருந்த லஹிரு மதுஷங்க விடுதலை;


இன்று இரவு அமைச்சர் பைஸருடன் இலங்கை வருகிறார்

( ஐ. ஏ. காதிர் கான் )

   மாலைத்தீவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையரான லஹிரு மதுஷங்கவின் வழக்கு தள்ளுபடியானதையடுத்து, அவர் (21) புதன்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று (22) இரவு  இலங்கை வருகிறார்.
   லஹிரு மதுஷங்க மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்.  இவர், கடந்த மூன்றறை வருடங்களுக்கு முன்னர்,  மாலைத்தீவு அரசாங்கத்தினால் மாலைத்தீவிலுள்ள "மாபூசி" சிறைச்சாலையில்  தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தார்.  அந்நாட்டு முன்னாள் ஜனாதிபதி அப்துல்லாஹ் யமீன் அப்துல் கையூமைக் கொலை செய்யும்  முயற்சியில் சந்தேகத்தின் பேரில் இவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
ஏற்கனவே, இவ்விடயங்களை அறிந்து கொண்ட அமைச்சர் பைஸர் முஸ்தபா,  கடந்த (16) வெள்ளிக்கிழமையன்று, தனது சொந்தச் செலவில் மாலைத்தீவுக்குச் சென்று, நமது நாட்டு இளைஞர் லஹிரு மதுஷங்கவை விடுவிப்பது தொடர்பாக,  மாலைத்தீவின் புதிய ஜனாதிபதி இப்றாஹீம் முஹம்மது சாலிஹ், மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி முஹம்மது நஷீத் உட்பட அரசின் உயர்மட்டப் பிரிதிநிதிகளையும் சந்தித்துப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வந்தமை  குறிப்பிடத்தக்கது.
   குறிப்பிட்ட நபர்,  மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் யமீனைக்  கொலை செய்ய சதி செய்ததாகக் குற்றஞ்சுமத்தப்பட்டே சந்தேகத்தின் பேரில்  கைது செய்யப்பட்டார்.
   இவரின் மனைவி, இவரது மூன்று  பிள்ளைகளுடன் அமைச்சர் பைஸர் முஸ்தபாவைச் சந்தித்து, "தனது கணவர் எந்தக்குற்றமும் செய்யாத நிரபராதி" என்றும், அவர் தொடர்பிலான  வழக்கு விசாரணைகள், மிக  நீண்ட காலமாக இழுத்தடிக்கப்பட்டு வருதாகவும்,  அமைச்சரின் கவனத்திற்குச்  சுட்டிக்காட்டினார்.  அத்துடன், இவரை விடுதலை செய்ய குறித்த வழக்கு விசாரணைகளைத் துரிதப்படுத்த உரிய  நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் இதன்போது கேட்டுக் கொண்டார். இதனையடுத்தே,  அமைச்சர் பைஸர் முஸ்தபா இதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வந்தார்.
   இந்த நிலையில்,  லஹிரு மதுஷங்கவின்  வழக்கு தள்ளுபடியானதால், (21) புதன்கிழமை  விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
   அமைச்சர் பைஸர் முஸ்தபா, அவரது சொந்தச் செலவில் மீண்டும் மாலைத்தீவுக்கு (20) செவ்வாய்க்கிழமை சென்றுள்ள நிலையில், இன்று (22) வியாழக்கிழமை இரவு,  விடுதலைபெற்ற லஹிரு மதுஷங்கவுடன்  அமைச்சர் கட்டுநாயக்க விமான நிலையம் வந்தடைகின்றார்.
   இது தொடர்பில்,  அமைச்சர் பைஸர் முஸ்தபா ஊடகங்களுக்கும் கருத்துத்  தெரிவித்துள்ளார்.

( ஐ. ஏ. காதிர் கான் )

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்