Skip to main content

லஹிரு மதுசானின் விடுதலைக்காக களமிறங்கியுள்ள அமைச்சர் பைஸர் முஸ்தபா

லஹிரு மதுசானின் விடுதலைக்காக களமிறங்கியுள்ள அமைச்சர் பைஸர் முஸ்தபா
---------------------------------------------------------

( ஐ. ஏ. காதிர் கான் )

மாலை தீவு  சிறையில் உள்ள லஹிரு மதுசான் என்ற சிங்கள இளைஞரை விடுதலை செய்ய, மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பைஸர் முஸ்தபா உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.
   மாலை தீவின் புதிய ஜனாதிபதியாக இப்றாஹீம் மொஹமட் சோலியின் பதவிப்பிரமாண வைபவத்தில் கலந்து கொள்வதற்காக (16)  வெள்ளிக்கிழமை  மாலைதீவுக்குச்  சென்றவேளையிலேயே அமைச்சர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.
   லஹிரு மதுசான் (27 வயது) எனும் இவ்விளைஞர், மாலைதீவிலுள்ள மாபுசி சிறைச்சாலையில் 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 23 ஆம் திகதி முதல், சுமார் மூன்று வருட காலமாக  சிறைவாசம் அனுபவித்து வருகின்றார்.
   முன்னாள் ஜனாதிபதி அப்துல்லா யாமீன் அப்துல் கையூமை கொலை செய்ய முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே, அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
   மூன்று வருட கால கட்டத்திற்குள்,  இவருக்கு சிறையில் எதுவித  பிணையோ அல்லது அவகாசங்களோ வழங்கப்படாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.
  ஜனாதிபதியின்  விசேட பிரதிநிதியாக,  மாலை தீவு சென்றுள்ள அமைச்சர் இவரை விடுதலை செய்ய வேண்டிய நடவடிக்கைகளில் அவசரமாக இறங்கியுள்ளார்.
   இது தொடர்பில் புதிதாகப் பதவியேற்ற மாலை தீவு ஜனாதிபதி இப்றாஹீம் மொஹமட் சோலியுடனும், முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீத்துடனும் அமைச்சர் மாலைதீவில் வைத்து தீவிர பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார்.
   இவர் ஒரு அப்பாவி என்றும், இவ்வாறான தவறான நடவடிக்கைகளில் இவருக்கு ஈடுபடுவதற்குத் தேவையான எந்தவித அவசியமும் கிடையாது என்றும், அமைச்சர் இதன்போது முன்னாள் மற்றும் இந்நாள் ஜனாதிபதிகளிடம் விபரமாக எடுத்துரைத்தார்.
   அமைச்சர் சிறைச்சாலைக்குச் சென்று லஹிரு மதுசானையும் நேரடியாகச் சந்தித்து,  அவருக்கு ஆறுதல் வார்த்தை  கூறினார். அவரை மிக அவசரமாக விடுதலை செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்வதாகவும் அமைச்சர் இதன்போது லஹிருவிடம் உறுதிபடத் தெரிவித்தார்.
   தான் ஒரு முஸ்லிம் அமை ச்சராக இருந்தாலும் கூட, இலங்கை மக்கள்  எந்த மதமாக இருந்தாலும், "இலங்கையர்" என்ற உரிமையுடன்  அவர்களின் சுக துக்கங்களில் பங்கு கொண்டு,  அவர்களை அனுசரிப்பதே தனது கொள்கையாகும் என்று, அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
   எந்தவித குற்ற உணர்ச்சியுமற்ற லஹிரு மதுசானை, சிறையிலிருந்து விடுவித்து,  அவரை அவரது குடும்பத்தாருடன் மீண்டும் இணைப்பதே தனது நோக்கமெனவும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.
   ஜனாதிபதி அவர்கள் இன, மத, மொழி வேறுபாடுகளின்றி, இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபாடு கொண்டு வருவதையிட்டு, தான் இச்சந்தர்ப்பத்தில் மகிழ்வடைவதாகவும், அவருக்கு நன்றி தெரிவிப்பதாகவும்  அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.  முஸ்லிமான அமைச்சர் ஒருவர், பெளத்த மதத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரின் விடுதலைக்காக, இவ்வாறான  முயற்சிகளை மேற்கொள்வது என்பது, இன்றைய காலகட்டத்தில் மிகவும் வரவேற்கக் கூடிய ஒரு சிறந்த கைங்கரியமாகும். அத்துடன், சமூக ஒற்றுமையை  முன்னுதாரணமாக எடுத்துக்காட்டும் விடயமாகவும் இது  உள்ளதுடன், இது ஒரு வரவேற்கத்தக்க விடயமாகுமெனவும், பல்வேறு அறிவுதுறை சார்ந்தவர்களும், நலன்விரும்பிகளும்  சுட்டிக்காட்டியுள்ளனர்.

( ஐ. ஏ. காதிர் கான் )

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

  பெட்ரோலுக்கு விலை கூடுகிற‌தா?  பொருட்க‌ளுக்கு விலை கூடுகிற‌தா? இது ப‌ற்றி முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌த்தேவையில்லை. ஏனென்றால் இந்த‌ நாட்டின் 2 கோடி ம‌க்க‌ளில் ஒன்ன‌ரைக்கோடி ம‌க்க‌ள் சிங்க‌ள‌ ம‌க்க‌ள். பெற்றோலுக்கு விலை கூடினால் , பொருள்க‌ளுக்கு விலை கூடினால்  அது தாக்க‌ம் முத‌லில் சிங்க‌ள‌ ம‌க்க‌ளுக்குத்தான்.  அத‌ற்கு அடுத்துதான் சிறுபான்மை ம‌க்க‌ளைத்தாக்கும். ஒன்ன‌ரைக்கோடி பெரிதா? 50 ல‌ட்ச‌ம் பெரிதா? இந்த‌ அர‌சாங்க‌ம் 100க்கு 99.5 சிங்க‌ள‌ ம‌க்க‌ளால் கொண்டு வ‌ர‌ப்ப‌ட்ட‌ அர‌சாங்க‌ம். பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரித்தால் அவ‌ர்க‌ள் பார்த்துக்கொள்வார்க‌ள். நாம் த‌லையை ஓட்டுவ‌தால் எந்த‌ ந‌ன்மையும் கிடைக்க‌ப்போவதில்லை. முடியுமாயின் பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்பு ப‌ற்றி முஸ்லிம்க‌ள் ஓட்டுப்போட்ட‌ முஸ்லிம் க‌ட்சிக‌ளின் உறுப்பின‌ர்க‌ளை பாராளும‌ன்ற‌த்தில், ஊட‌க‌ங்க‌ளில் பேச‌ சொல்லுங்க‌ள்.  அவ‌ர்க‌ளே பேசாம‌டந்தையாக‌ இருக்கும் போது முஸ்லிம்க‌ள் ஏன் அல‌ட்டிக்கொள்ள‌ வேண்டும்? பொருட்க‌ள் விலை கூடுத‌ல் பெரிய‌ விட‌ய‌மா? த‌ம‌க்கென்ற‌ நாட்டை பாதுகாப்ப‌து முக்கிய‌மா என்ப‌து பெரும்பாலான‌ சிங்க

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

 றிசாத் எம்.பி கைதுக்கு முன்னராக வெளியிட்ட ஒளிப்பதிவை பார்க்கும் போது அழுகையே வந்து விட்டது :  அ.இ.ம.கா அம்பாறை செயற்குழு நூருல் ஹுதா உமர்  அண்மையில் கைது செய்யப்பட்டு விசாரணை காவலில் வைக்கப்பட்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கைதை கண்டித்து தமது எதிர்ப்பை காட்டும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட செயற்குழு இன்று வெள்ளிக்கிழமை கல்முனையில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு  நூற்றுக்கணக்கானவர்களை கொலைசெய்த கொலையாளிகள், பாரிய மோசடியில் ஈடுபட்ட கொள்ளையர்களை கைது தேய்வது போன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரை கைது செய்ததன் மூலம் இந்த நாட்டின் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துள்ளார்கள். இவர்களின் இந்த செயல்கள் இந்த நாட்டில் சிறுபான்மை மக்கள் வாழ்வதையே கேள்விக்குறியாக்குகிறது. முஸ்லிங்களை தீவிரவாதிகளாக காட்டி இந்த நாட்டின் ஆட்சியை கைப்பற்றிய இவர்கள் ஆட்சியை கொண்டு செல்ல முடியாமல் திணறிக்கொண்டு தக்கவைக்க  வேண்டிய சூழ்நி

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்

-முபாறக் அப்துல் மஜீத் மௌலவி – - பிறை பார்த்து நோன்பு பிடித்தல், பிறை கண்டு நோன்புப் பெருநாளை எடுத்தல், ஹஜ் பிறையின் ஆரம்பம், அரபா நாள் என்பன சமீப காலத்தில் ஏற்பட்டுள்ள நவீன பிரச்சினைகளாகும். வானொலி, தொலைபேசி, சட்டலைட் போன்றவை இல்லாத ஒரு காலத்தில் இது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. மாறாக இது பரவலாக்கப்பட்டு உலகம் ஒரு குறுகிய, சிறிய கிராமமாக உருவெடுத்துள்ள நிலையிலேயே இப்பிரச்சினைகள் எழுந்துள்ளன. இன்றைய உலகம் என்பது ஒரு மனிதனின் உள்ளங்கைக்குள் அடங்குமளவு சுருங்கிவிட்ட நிலையில் முஸ்லிம் சமூகம் மத்தியில் இந்தக்கருத்துக்கள் பற்றிய விழிப்புணர்வும், அவை பற்றிய தெளிவையும் எதிர் பார்ப்பதில் அர்த்தமுண்டு. இது விடயம் ஒரு பிரச்சினையாக உருவெடுத்தமைக்கு பல நியாயமான காரணங்களும் உள்ளன. அத்தகைய நியாயங்களை நாம் குர்ஆன், ஹதீத் நிலைமையில் நின்று ஆராயும் போது பல தெளிவுகள் நமக்கு ஏற்படும். ஆகவே, பிறை விடயத்தை நாம் ஆராயும் போது குர்ஆன், ஹதீத் ஆதாரங்கள், சூழல், நவீன தொழில் நுட்பம் என்பனலற்றை கருத்திற் கொள்ள வேண்டியது அவசியமானதாகும். இந்த வகையிலேயே நாம் பிறைக்குரிய சர்சையை அணுக வேண்டும். அந்த வகைய