( ஐ. ஏ. காதிர் கான் )
மஹிந்த ராஜபக்ஷவின் இரங்கல் சோறு சமைக்கத் தயாராகுமாறு,, ஹெல உறுமயவின் மேல் மாகாண சபை உறுப்பினர் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க, மேல் மாகாண சபையில் தெரிவித்த கருத்தினால், மேல் மாகாண சபையில் குழப்ப நிலைமை ஏற்பட்டது.
மேல் மாகாண சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம், நேற்று முன் தினம் சமர்ப்பிக்கப்படவிருந்தது. வரவு செலவுத் திட்ட உரைக்கு முன்னர், இந்த நிலைமை காரணமாக சுமார் அரை மணித்தியாலம் சபை நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாத நிலை உருவானது.
குறித்த உறுப்பினருக்கு எதிராக, ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் கோஷம் எழுப்பியதோடு, அவரின் இக்கூற்றை வாபஸ் பெறுமாறு வற்புறுத்தினார்கள். அத்துடன், முதலமைச்சர் இசுரு தேசப்பிரிய, அமைச்சர் காமினி திலக்கசிறி ஆகியோர் எழுந்து, அவரின் இக்கூற்றுக்கு தமது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
சபையில் ஆளும் தரப்பு உறுப்பினர்களும், அமைச்சர்களும் ஒரே நேரத்தில் உரத்த குரலில் ஒன்றாக, இக்கூற்றுக்கு எதிராகக் குரல் கொடுத்ததுடன், இந்நிலைமையைக் கட்டுப்படுத்த சபைத் தலைவர் சுனில் விஜேரத்ன பெருமுயற்சி எடுத்தார்.
இவ்வேளையில், சபையில் உரையாற்றிய தலைவர், வெற்றிலையில் அரசியலுக்கு வந்து, நாட்டின் தலைவரொருவர் தொடர்பாக இவ்வாறு கூறியது கவலைக்குரிய விடயமென்று தெரிவித்தார்.
தாங்கள் இன்று மோசமாகப் பேசிய மஹிந்த ராஜபக்ஷ, இந்த நாட்டின் தலைவரொருவர். இத்தகைய ஒருவரை இவ்வாறு விமர்சிப்பது நல்லதல்ல. தாங்கள் அவர் பிரதிநிதித்துவம் செய்யும் வெற்றிலை சின்னத்தின் ஊடாக அரசியலுக்கு வந்தவர். இவ்வாறான நிலைமையில், தங்களின் கூற்று என்னை கவலையடையச் செய்துள்ளது என, தலைவர் சுனில் விஜேரத்ன தெரிவித்தார்.
இதேவேளை, எதிர்க் கட்சிக்குச் சென்ற நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்கவுக்கு முன்வரிசையில் ஆசனத்தை எவ்வாறு ஒதுக்க முடியுமென்றும், ஆளும் தரப்பு உறுப்பினர் உபாலி கொடிக்கார கேள்வி எழுப்பினார்.

Post a Comment