பஸ் கட்டணத்தை இரண்டு வீதத்தால் குறைப்பதற்குத் தீர்மானம்


( மினுவாங்கொடை நிருபர் )
   எரிபொருட்களின் விலைகள்  குறைவடைந்துள்ள நிலையில்,  பஸ் கட்டணங்களையும் இரண்டு வீதத்தால் குறைப்பதற்கு,  தனியார் பஸ் தொழிற்சங்க ஒன்றியம் தீர்மானித்துள்ளது.
இதனடிப்படையில், பஸ் கட்டணங்களைக்  குறைப்பதற்குத் தயாராகவுள்ளதாக, இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சம்மேளனத்தின் செயலாளர் அஞ்சன பிரியன்ஜித் தெரிவித்துள்ளார்.
   இதேநேரம், எரிபொருட்களின் விலைகள்  குறைப்பிற்கமைய பஸ் கட்டணங்களைக்  குறைப்பது தொடர்பில், குறித்த  நிர்வாகத்தினருடன் கலந்துரையாடி, தகுந்த  தீர்மானமொன்றை எடுப்பதாக,  இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன குறிப்பிட்டுள்ளார்.
   இதேவேளை, பஸ் கட்டணங்களின் திருத்தம் தொடர்பில்,  எதிர்வரும் நாட்களில் சரியான தீர்மானமொன்றை எடுக்கவுள்ளதாக,  அனைத்து மாகாண தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் விஜித்தகுமார சுட்டிக்காட்டியுள்ளார்.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்