Skip to main content

கல்முனை கிறீன்பீல்ட் சுனாமி வீட்டுத்திட்டத்தில் குடிநீரை நிறுத்தியமைக்காக மக்கள் சட்ட நடவடிக்கை






Farook Sihan
 


கல்முனை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர்  ஹரீஸ் இடைநிறுத்தப்பட்ட குடிநீரை  மக்களுக்கு  தற்காலிகமாக  பெற்றுக் கொடுக்கப்பட்டதாக  வந்துள்ள செய்தியை ஆதாரங்களுடன் மறுத்துள்ளதுடன் பொய்யான செய்திகளை அரசியலுக்காக பரப்பி மக்களை குழப்பமடைய செய்ய வேண்டாம்  கல்முனை கிறீன்பீல்ட் சுனாமி வீட்டுத்திட்ட  தற்காலிக ஆதன முகாமைத்துவக் குழுவினர் கேட்டுள்ளனர்.


 இன்றைய தினம் (21) கல்முனை கிறீன்பீல்ட் சுனாமி வீட்டுத்திட்ட வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட  ஊடக  சந்திப்பில் மேற்கண்டவாறு இக்குழு தெரிவித்தது.


மேலும் கருத்து தெரிவிக்கையில்


கல்முனை கிறீன்பீல்ட் சுனாமி வீட்டுத்திட்டத்தில் 438 குடும்பங்கள் வாழ்கின்ற மக்களின்  அடிப்படை தேவையான குடிநீரை கடந்த 15.11.2018 திகதியில் இருந்து நிறுத்தியமைக்காக மக்கள் எதிர்ப்பு நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள தயாராகி வருகின்றனர்.


குறித்த குடிநீரை அம்மக்கள் பயன்படுத்தியதற்கு அமைய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபைக்கு செலுத்த வேண்டிய ரூபா 921036ஃ- செலுத்தப்படாமையால் நீர்விநியோகம் துண்டிக்கப்பட்டது.


இதனால் கடந்த சில நாட்களுக்கும் மேலாக அங்கு வாழும் மக்கள் குடிநீர் இல்லாமல் பெரும் அசௌகரியத்திற்குள்ளாகினர்.


இதற்கு காரணம்    கல்முனை கிறீன்பீல்ட் சுனாமி வீட்டுத்திட்டத்தின் கடந்த பல வருடங்களுக்கு மேலாக இயங்கி வந்த கல்முனை கிறீன்பீல்ட் கூட்டு ஆதன முகாமைத்துவக் குழுவினர் அங்கு வாழும் மக்கள் குடி நீர் பட்டியலுக்கு செலுத்திய பெருந்தொகை பணத்தை கையாடல் செய்துள்ளமையும் திடிரென அக்குழு செயலிழந்தமையும் ஆகும் என பாதிக்கப்பட்ட  அம்மக்கள் குற்றஞ்சுமத்துவதோடு டீமற்குறித்த  ஆதன முகாமைத்துவக் குழுவினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை ஒன்றை  மேற்கொள்ள தயாராகி வருகின்றனர்.


இதற்காக தற்காலிக ஆதன முகாமைத்துவக் குழுவினர் என மீண்டும்  ஒரு புதிய  அமைப்பினை உருவாக்கி  குறித்த பிரச்சினையை ஆராய்ந்து இன்று(21)  முதல் கட்டமாக மீண்டும்   மக்களுக்கு குடிநீர் பெற்றுக்கொள்வதற்கு  நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபைக்கு வழங்க வேண்டிய ஒன்பது லட்சத்து இருபத்தோராயிரத்து முப்பத்தி ஆறு ரூபாய் பணத்தையும் (ரூபா 921036ஃ- யும்) செலுத்த புதிய  இக்குழு மக்கள் ஆதரவுடன்  தற்போது களமிறங்க முடிவு  செய்துள்ளது.


இதன் படி அவ்வீட்டு திட்டத்தில் உள்ள 430 குடும்பங்களிடம் தலா 2500 ரூபா வீதம் வசுலித்து நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபைக்கு வழங்க வேண்டிய ஒன்பது லட்சத்து இருபத்தோராயிரத்து முப்பத்தி ஆறு ரூபாய் பணத்தையும் (ரூபா 921036ஃ- யும்) உடனடியாக மீள்செலுத்த  குறித்த தற்காலிக  குழு நாளை(22)  இரவு 9 மணிக்கு கால அவகாசம் கொடுத்துள்ளது.


இதன் படி குறித்த பணத்தை அப்பகுதி வீட்டுத்திட்டத்தில் குடியிருக்கும் மக்கள் தமது காரியாலயத்தில் வந்து ஒப்படைத்து துண்டிக்கப்பட்டுள்ள அத்தியவசியமான குடிநீரை மீள பெற முன்வருமாறு அக்குழு கேட்டுள்ளது.


அத்துடன் குறித்த குழு ஊடக இன்றைய ஊடக  சந்திப்பில்  கல்முனை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர்  ஹரீஸ் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட குடிநீரை  மக்களுக்கு  பெற்றுக் கொடுக்கப்பட்டதாக  வந்துள்ள செய்தியை ஆதாரங்களுடன் மறுத்துள்ளதுடன் பொய்யான செய்திகளை அரசியலுக்காக பரப்பி மக்களை குழப்பமடைய செய்ய வேண்டாம் என கேட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

அதாவுல்லாவை புக‌ழும் ஹ‌ரீஸ்

ஒவ்வொரு நிமிடமும் நம்மை நோக்கி எறிகணைகள் வந்த வண்ணமே இருக்கிறது. நாங்கள் ஒற்றுமைப்பட்டு இனி செயலாற்ற முன்வர வேண்டும். அம்பாறை மாவட்டத்தில் உள்ள சகல அரசியல் கட்சி முக்கியஸ்தர்களும் ஒன்றிணைந்து எதிர்வரும் பொதுத்தேர்தலை சந்தித்து நாங்கள் ஒற்றுமையாக வாக்களித்தால் அம்பாறை மாவட்டத்தில் இருந்து ஐந்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாவார்கள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி  எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.  தொடர்ந்தும் அங்கு பேசும் போது, கல்முனை பிரதேச விவகாரம் பற்றிய பிரதமருடனான கலந்துரையாடலுக்கு குறித்த தொகுதியின் மக்கள் பிரதிநிதியாகிய எனக்கு எவ்வித அழைப்புக்களும் விடுக்கப்பட்டிருக்க வில்லை. நான் நேரடியாக பிரதமர் மஹிந்தவை சந்தித்து மக்களின் பிரச்சினையை பற்றி தெளிவாக விளக்கியவுடன் அன்று மாலை என்னையும் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறும் அதற்கான ஏற்பாடுகளை தான் செய்வதாகவும் வாக்குறுதியளித்தார். அதன் பிரகாரமே நான் அக்கூட்டத்திற்க்கு சென்று வரவேற்பறையில் காத்திருந்தேன். அங்கு கலந்து கொண்டிருந்த முக்கிய பிரமுகர்கள் பலரும் அதிருப்

Sri Lanka COSMI Founder President appointed to London’s Peace Institute

The Founder President of Sri Lanka’s  Confederation of Micro, Small and Medium Industries (COSMI) has been appointed as the Co-Chairperson of the   London based Global Peace Institute (GPI)   which conducts interdisciplinary research in several thematic fields including international relations and politics. By this high profile appointment made on 15 January, GPI seeks COSMI  Founder President Nawaz Rajabdeen’s  contributions to improve its training and research efforts. GPI is a think tank run by the UK based Global Peace Ins. (GPI) CIC, an independent non-profit, non-governmental organization. GPI works for global peace and resilience through peace education, dialogue, training, creating awareness and research. COSMI  Founder President Rajabdeen, as an honorary member, is also tasked by GPI to  promote its programs, add value to research work, and also will be required to attend various GPI events. “I am thankful to GPI for enlisting me for their ongoing and vast efforts” sa

மைத்திரிபால ஒரு புத்திஜீவியாகவோ, அறிஞராகவோ அவருடைய ஆட்சிக் காலத்தில் செயற்படவில்லை.

சிறுபான்மையினரின் வாக்குகளே பிரதமர் யார் என்பதை தீர்மானிக்கும் ! சஜீத் − ரணில் பிரச்சினை கூட்டனிக்கு பாதிப்பில்லை !! நான் நிரபராதி என்பதை சிங்கள மக்கள் உணர்வர் !!! ஆட்சியில் இணையுமாறு அழைப்பு வந்தால் தீர்மானிக்கலாம் !!!! அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத் தலைவர் ரிஷாத் பதியுதீன் பி.பி.சிக்கு பரபரப்பு பேட்டி.... அப் பேட்டியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது...; கேள்வி: தற்போது நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் தலைவர்களை தமது அரசாங்கத்தில் சேர்த்துக் கொள்வதில்லை என்றுகூறி ஆளுந்தரப்பு நிராகரித்திருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? பதில்: ஆளுங்கட்சியில்தான் இருக்க வேண்டும் என்கிற நிலைப்பாட்டுடன் நாம் அரசியல் செய்யவில்லை. கடந்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கிடைத்த 69 லட்சம் வாக்குகளை எதிர்வரும் பொதுத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ அணியினர் ஒட்டுமொத்தமாகப் பெற்றாலும், அவற்றினைக் கொண்டு நாடாளுமன்றத்திலுள்ள 225 ஆசனங்களில் 105 ஆசனங்களை மட்டுமே கைப்பற்ற முடியும். அதேவேளை, எதிர்த்தரப்பினருக்கு 119 ஆசனங்கள் கிடைக்கும். எனவே, எதிர்வரும் பொதுத் தேர்தல் சவ