ஐக்கிய தேசியக் கட்சியின் இரு முக்கிய தலைகள் மஹிந்தவுடன் இணைய பேச்சு

விசேட செய்தி...!

* ஐக்கிய தேசியக் கட்சியின் இரு முக்கிய தலைகள் மஹிந்தவுடன்  இணைய பேச்சு... தமிழ்க்கூட்டமைப்பின் மூன்று பேர் ஆதரவு வழங்கும் சாத்தியம் ...ஆனால் இறுதி முடிவில்லை... முக்கிய பொறுப்புக்களை கேட்பதால் சிக்கல்...

* தயா கமகே மற்றும் காமினி ஜெயவிக்ரம பெரேரா ஆகியோர் எஸ் . பி நாவின்னவை சந்திக்க ஹெலிகொப்டரில் குருநாகல் சென்றனர்.. அவரோ தரைவழியாக கொழும்பு வந்து அமைச்சுப் பொறுப்பை ஏற்றார் ...

* எஸ் .பி . திசாநாயக்க இல்லத்தில் ஐ தே  க முக்கியஸ்தர்கள் சிலர் ஒன்றுகூடினர்... முக்கிய விடயங்கள் பற்றி பேச்சு...

* நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை மஹிந்த தரப்பால் நிரூபிக்கப்பட்டால் ஐக்கிய தேசியக் கட்சியில் பெரும் மாற்றம்... சஜித் தலைமை பொறுப்பை ஏற்கும் சாத்தியப்பாடு. அரசியலுக்கு ஓய்வு கொடுப்பது பற்றி ரணில் தீவிர ஆலோசனை...

* மலையகத்தின் தமிழ் எம் பி யொருவர் பிரதியமைச்சராக பொறுப்பேற்கிறார்..

* வியாழேந்திரன் பிரதியமைச்சு பொறுப்பை ஏற்றதையடுத்து கிழக்கில் பெரும் அரசியல் மாற்றம்.. அமைச்சரவைக்குள் சென்று முஸ்லிம்களின் இருப்பை உறுதிப்படுத்துமாறு ரவூப் ஹக்கீம் , றிஷார்ட் ஆகியோருக்கு கட்சிக்குள்ளும் ஆதரவாளர்களிடையேயும் கடும் அழுத்தம். தலைவர்கள் தீர்மானம் எடுக்காத பட்சத்தில் சில எம் பிக்கள் தனிவழி செல்ல முடிவு...

* நாடாளுமன்றம் கூடும் தினமன்று சபை அமர்வுகளை நேரடியாக பார்வையிட கொழும்பில் உள்ள வெளிநாட்டு ராஜதந்திரிகள் யோசனை...
R. SIVARAJA

Comments

popular posts

මුස්ලිම් ස්වාධීන කණ්ඩායම්වල අරමුණ වන්නේ මුස්ලිම් ප්‍රජාවගේ ඡන්දය බිඳ දැමීමයි,

அரசாங்கம் இனவாதத்துடன் செயற்படுவதாகக்கூறும் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை

ஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்