ரணிலை மீண்டும் பிரதமராக நியமிக்க மாட்டேன்.. அந்த கொள்கையில் நான் உறுதியாக உள்ளேன்..“ரணிலை மீண்டும் பிரதமராக நியமிக்க மாட்டேன்.. அந்த கொள்கையில் நான் உறுதியாக உள்ளேன்.. மஹிந்த ராஜபக்சவுக்கு பார்லிமென்ட்டில் பெரும்பான்மை இருந்தால் அவர் ஆட்சியை தொடரலாம். அப்படி இல்லை என நிரூபிக்கப்பட்டால் அது தொடர்பில் அவர் தீர்மானம் ஒன்றை எடுக்க  வேண்டும்.. ரணில் கூடுதல் அதிகாரங்களை கையில் எடுத்து ஜனாதிபதி போல செயற்பட முனைந்தார்..  நான் சொன்ன நல்ல ஆலோசனைகள் எதையும் கேட்கவில்லை...இந்த அரசியல் நெருக்கடிக்கு விரைவில் முடிவு கட்டப்படும். என் மீதான கொலை சதி முயற்சி குறித்தான விசாரணைகள் புதிய கோணத்தில் நடைபெறவுள்ளன.

உயர்நீதிமன்றம் தேர்தல் விடயத்தில் என்ன தீர்ப்பை கொடுக்கிறதோ அதை ஏற்போம்.. பாராளுமன்ற கலைப்பு பற்றியே நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது... பிரதமர் நியமனம் தவறென யாரும் நீதிமன்றம் செல்லவில்லை.எல்லாமே அரசியலமைப்பின்படியே நடந்துள்ளது..”

சண்டே டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் ஜனாதிபதி மைத்ரி தெரிவிப்பு..

Comments

popular posts

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் அனுப்பியுள்ள செய்தி

சற்றுமுன் தம்புள்ளையில் விபத்து

ACMC + SLMC இணைந்து பணியாற்ற தீர்மானம்