மன்றில் குழப்பங்களை தவிர்க்கும் வகையிலேயே வெளியேறினோம்: சுசில்

மன்றில் குழப்பங்களை தவிர்க்கும் வகையிலேயே வெளியேறினோம்: சுசில்
-----------------------------------------------------------------
நாடாளுமன்றத்திற்குள் மோதல்களும், குழப்பங்களும் தோற்றம் பெருவதை விரும்பாத நிலையிலேயே சபையிலிருந்து வெளியேறினோம் என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

இன்றைய (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்ற அமர்வுகளின்போது, ஆளுந்தரப்பினர் சபையிலிருந்து இடைநடுவே வெளியேறினர். இது தொடர்பாக ஆதவன் செய்தி சேவைக்கு அவர் பிரத்தியேகமாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

ஆதவனுக்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர், ”நாடாளுமன்றத் தெரிவுக் குழுவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலிருந்து 7 பேரின் பெயர் சமர்பிக்கப்பட்டிருந்த நிலையில், ஐ.ம.சு.மு. மற்றும் ஐ.தே.மு. ஆகிய இரு கட்சிகளிலிருந்தும் சமமான எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் தெரிவுக்குழுவில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சபாநாயகரின் தன்னிச்சையான மற்றும் பக்கசார்பான நடவடிக்கையினாலேயே இவ்வாறான நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு நாம் எதிர்ப்பு தெரிவித்தோம். ஆனால், இதனால் நாடாளுமன்றத்திற்குள் குழப்பம் ஏற்படுவதை தவிர்த்துக் கொள்ளும் வகையில் சபையிலிருந்து வெளியேறினோம்.

சபாநாயகரின் தீர்மானங்கள் அனைத்தும் ஐக்கிய தேசிய முன்னணிக்கு பக்கசார்பானவையாகவே அமைந்து வருகின்றன” எனவும் குற்றம் சாட்டினார்.
Noordeen

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்