முன்னாள் அமைச்சர் சுபையிரின் முயற்சிக்கு வெற்றி:


முன்னாள் அமைச்சர் சுபையிரின் முயற்சிக்கு வெற்றி: மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்கு புதிய பணிப்பாளர்

கல்முனை வலயக்கல்வி பணிமனையில் பிரதிக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றிய இலங்கை கல்வி நிருவாக சேவை தரம் 11ஐச் சேர்ந்த எஸ்.எம்.எம்.எஸ். உமர் மௌலானா மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் பதில் வலயக் கல்விப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கிழக்கு மாகாண ஆளுநரின் உத்தரவிற்கமைவாக, கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரினால் 2018.11.13 ஆம் திகதி முதல் செயற்படும் வன்னம் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் பணிப்பாளர் இஸ்ஸடீன் ஓய்வு பெற்றுச் சென்றதனையடுத்து, ஏற்பட்ட வெற்றிடத்திற்கே உமர் மௌலானா நியமிக்கப்பட்டுள்ளார்.

குறிப்பாக மட்டக்களப்பு மத்தி வலயத்திற்கு குறிப்பிட்ட சில மாதங்களில் ஓய்வு பெற்றுச் செல்லக்கூடியவர்களை தற்காலிகமாக வலயக் கல்விப் பணிப்பாளர்களாக நியமிப்பதனால் அவ்வலயத்தின் கல்வி வீழ்ச்சியடைந்து வருவதாக பல தரப்பினராலும் குற்றம் சுமத்தப்பட்டது. இதுதொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட கல்வியலாளர்கள், கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் சுபையிரின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

இவ்விடயத்தினை கருத்திற்கொண்ட கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.சுபையிர் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்கான நிரந்தர வலயக்கல்வி பணிப்பாளர் நியமனம் தாமதமாவதாகவும், இதனால் அவ்வலயத்தின் கல்வி வீழ்ச்சியடைந்து வருவதாகவும் கிழக்கு மாகாண ஆளுநரிடம் சுட்டிக்காட்டினார்.

ஏறாவூர் மாக்கான் மாக்கார் வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கிழக்கு மாகாண ஆளுநர் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட போது, மேற்படி விடயத்தினை மீண்டும் சுட்டிக்காட்டிய முன்னாள் அமைச்சர் சுபையிர்,  குறித்த கல்வி வலயத்திற்கு நிரந்தர வலயக்கல்வி பணிப்பாளர் ஒருவரை நியமித்து தருமாறும் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதற்கினங்கவே, கிழக்கு மாகாண ஆளுநரின் விசேட உத்தரவிற்கமைய, உமர் மௌலானா மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் பதில் வலயக் கல்விப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயமானது அதன் உருவாக்கத்திலிருந்து தேசிய மற்றும் மாகாண ரீதியாக பல சாதனைகளை நிகழ்த்தி வரலாற்றில் பேசப்பட்ட ஒரு வலயமாகும். குறிப்பாக, 2011, 2012, 2013 ஆம் ஆண்டுகளில் க.பொ.த சாதாரண தரப்பரீட்சையில் தேசிய மட்டத்தில் முதலாவது வலயமாகவும் தெரிவானமை குறிப்பிடத்தக்கது.

கல்வித்துறையிலும், இணைப்பாடவிதான செயற்பாடுகளிலும் படிப்படியாக வளர்ச்சியடைந்து சாதனைகளை நிகழ்த்திய இக்கல்வி வலயமானது, தற்போது, கல்வி நடவடிக்கைகளில் வீழ்ச்சியடைந்து பின்தங்கிய நிலையில் காணப்படுவது கவலையான விடயமாகும்.

குறித்த வலயத்தின் கல்வி நிலைமைகளை கருத்திற்கொண்டு, புதிய பணிப்பாளர் ஒருவரை நியமிப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்ட கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் முன்னாள் அமைச்சர் சுபையிருக்கு கல்வியலாளர்கள், பெற்றோர்கள் என பலரும் நன்றி தெரிவிக்கின்றனர்.

Comments

popular posts

Sri Lanka COSMI Founder President appointed to London’s Peace Institute

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி மாணவி சைரீன் இனாம் மெளலானா இந்தோனேசியாவில் தங்கப்பதக்கம் வென்று எம் மண்ணுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

புதிய அரசியல் கூட்டணி – சஜித் தலைவர் – சம்பிக்க பிரதித் தலைவர்