Skip to main content

அரசியலமைப்புக் கருவாடு

அரசியலமைப்புக் கருவாடு
****************************
1
ஜே.ஆர் ஜயவர்த்தன நாடாளுமன்றில் பெற்றிருந்த ஆறில் ஐந்து பெரும்பானமையைக் கொண்டு தனக்கும், மேற்குலகுக்கும் வசதியாக 1978 ஆம் ஆண்டு அரசமைப்பை புதிதாக இயற்றினார். மேற்குலகு ஏனைய நாடுகளைச் சுரண்டுவதற்காக அறிமுகப்படுத்திய திறந்த பொருளாதாரக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கு வசதியாக வழங்கிய Draft தான் புதிய அரசமைப்பானது.

அன்றைய காலத்தில் இரண்டு பெரிய கட்சிகளும் ஐவைந்து ஆண்டுகளில் அல்லது இதைவிடவும் குறைந்த ஆண்டுகளில் மாறி மாறி ஆட்சிக்கு வந்துகொண்டிருந்தன.

மேற்கு, திறந்த பொருளாதாரக் கொள்கையை ஆசியப் பிராந்தியத்தில் அறிமுகப்படுத்துவதற்கு வசதியாக இலங்கையில் பிரித்தானியாவின் முதலாளிய முகவர்கள் நிறைந்திருந்த ஐக்கிய தேசியக் கட்சியைத் தனது முகவராகத் தெரிவு செய்திருந்தது.

இதற்கேற்ப, ஆகக் குறைந்தது 10 வருடங்களாவது தொடர்ந்தேர்ச்சியாக நாட்டை ஆள்வதற்கு நிறைவேற்று அதிகாரத்தைக் கொண்ட தனி அதிபரையும், நாடாளுமன்றில் மிகப் பெரும்பான்மையை ஐ.தே. கட்சி வைத்திருப்பதற்கும் வசதியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

2
ஜே. ஆர்  1906 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 16 ஆம் திகதி பிறந்தவராகும். இவர் 1978 இல் நாட்டின் தலைமை  அதிகாரத்துக்கு வந்த போது அவருக்கு 72 வயதாகியிருந்து. இந்த வயதையும் கணக்கிட்டே புதிய அரசமைப்பின் சரத்துகள் வரையப்பட்டன.ஜயவர்த்தன ஆகக் கூடியது 82 வயதையடையும் 10 வருடங்கள் வரைதான் திடகாத்திரமான உடல் மற்றும் மன அமைப்பில் இருக்க முடியும் என்ற கருதுகோளில்தான் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஒருவர் இரண்டு முறை மாத்திரம் பதவியில் இருக்கலாம் என்ற சரத்தை  அவர் புதிய அரசமைப்பில் உட்புகுத்தினார்.90 வயது வரை தான் உயிருடனும் திடகாத்திரமாகவும் இருக்க முடியும் என்று நம்பியிருந்தால் ஜனாதிபதியாகப் பதவி வகிப்பதற்கான கால எல்லையை யாப்பில் வரையறுத்திருக்கமாட்டார் என்பது நம்பக்கூடிய வாதமாகும்.இதுமட்டுமல்ல தனது கட்சி அடுத்த தேர்தலில் தோற்றுவிடும் என்றும் அவர் நம்பியிருந்தார்.

இதனாலதான், சிங்களச் சாதியமைப்பில் கீழிருந்த அன்றைய பிரதமர் பிரேமதாச தோற்றுவிடுவார் என்று நம்பி ஜனாதிபதி வேட்பாளராக அவரை ஜே. ஆர் அங்கீகரித்தார்.பிரேமதாச தோற்றால் உயர் குலத்தைச் சேர்ந்த லலித் அத்துலத்முதலி அல்லது காமினி திசாநாயக்கா கட்சியின் தலைமைத்துவத்தைக் கைப்பற்றி அடுத்த தேர்தலில் வெற்றியடைய முடியும் என்றும் அவர் நினைத்தார். ஆனால் மக்கள் விடுதலை முன்னணியின் வன்முறையின் துணையோடு பிரேமதாச வெறும் இருபத்தி மூன்று இலட்சம் வாக்குகளைப் பெற்று அன்று வெற்றி பெற முடிந்தது. ஏற்கனவே தனக்கு நிகராக நின்று வெற்றி பெறக் கூடியவரான ஸ்ரீமாவின் குடியுரிமையை ஜே.ஆர் பறித்திருந்தார் என்பதையும் இவ்விடத்தில் கணக்கில் எடுக்க வேண்டும். இதனால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கட்டுமானங்களில் பலவீனம் அடைந்திருந்ததை ஜே. ஆர் கணக்கெடுக்கத் தவறியிருந்தமையும் பிரேமதாசவின் வெற்றிக்குக் காரணமாகும்.

3
ஜே ஆர், சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் தனது கட்சியின் நாடாளுமன்ற அதிகாரத்தை மேலும் ஒரு தவணைக் காலத்துக்கு நீடித்திருந்தார். நிறைவேற்று அதிகாரத்தை மீயுயர் நீதிமன்றம் உட்பட எந்தவொரு நீதிமன்றமும் கேள்வி கேட்க முடியாதபடி அரசமைப்பை வரைந்தார்.பௌத்தத்துக்கு முன்னுரிமை என்பதை வலுப்படுத்தினார். இவ்வாறான அதிகாரங்களைக் கொண்ட 1978 ஆம் ஆண்டைய அரசமைப்பு, இலங்கையின் உன்னத தமிழ்ச் சாதியைச் சேர்ந்த ஐரோப்பாவில் வாழும் வின்சன்ற் என்ற சட்டவல்லுனரின் உதவியோடு எழுத்துருவாக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்த அரசமைப்பு நிறைவேறிய அன்றே நமது நீதித்துறை பலவீனமடைந்ததோடு,அது அரசியல் அதிகாரத்துக்கு அச்சமடையும் நிலையும் தோன்றியது.

19 ஆவது திருத்தத்தின் மூலம் நீதித்துறை இழந்திருந்த சுயாதீனமும், அரசியல் அச்சமும் நீங்கிவிட்டதா என்ற கேள்விக்கு பதில் நேற்று வரை இல்லாதிருந்தது.

ஜனாதிபதி மைத்திரி நாடாளுமன்றைக் கலைத்து வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு மீயுயர் நீதிமன்று கடந்த 13 ஆம் திகதி வழங்கிய இடைக்கால தடை மூலம் நீதித்துறை பலமடைந்து விட்டதா என்பதையும் சரியாக தீர்மானிக்க முடியவில்லை.

4
தான் இரண்டாவது தடவை ஜனாதிபதியாகப் பதவி வகித்த இறுதி 6 மாத காலத்தில் மூன்று  அமைச்சர்கள் மாத்திரமே தன்னைச் சந்திக்க வந்தனர் என்று ஜே.ஆர் எழுதிய புத்தகத்தில் குறிப்பிடுகிறார்.இவரது இந்த அனுபவக் குறிப்புதான் சந்திரிக்காவுக்கும் கிலேசத்தை ஏற்படுத்தியது. இவர், ஒரு வருடத்துக்கு முன்பே இரண்டாவது ஜனாதிபதித் தேர்தலை நடாத்தியதனால், தான் முதல் தவணையில் எஞ்சியிருத்த ஒருவருடத்தையும் சேர்த்து இரண்டாவது தவணையில் இன்னொரு வருடம் கூடுதலாகப் பதவியில் இருக்க முடியுமா என்று மீயுயர் நீதிமன்றத்தைக் கேட்ட போது, அவரே பிரதம நீதியரசராக நியமித்த சரத் என் சில்வா இல்லை, முடியாது என்று தீர்ப்பு வழங்கினார். இத்தீர்ப்பினால் சந்திரிக்கா கவிழ்ந்தார்.

5
நிறைவேற்று அதிகாரத்தின் இறுதிக்கட்ட பலவீன நிலைமை ஜே ஆரின் வாக்கு மூலத்தினால்  வெளிப்பட்டதைத் தொடர்ந்து, சந்திரிகா தடுமாறியதைப் போன்றே மஹிந்தவும் தடுமாறியதன் விளைவே 18 ஆவது அரசமைப்புத் திருத்தமாகும். பிரதம நீதியரசர் சிராணியை நாடாளுமன்றத் தீர்மானம் மூலமும்- பலாத்காரமாகவும் வெளியேற்றுவதற்கு மஹிந்த எடுத்த நடவடிக்கைக்கு அன்றைய அரசியல்,நீதித்துறைக் கள நிலைமைகள் காரணமாகும்.

6
ஜே ஆர் ஜயவர்த்தன, ஸ்ரீமாவோவின் குடியுரிமையைப் பறித்தமை தனக்கு நிகரான ஒருவர் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்ககுவதைத் தடுப்பதற்கான ஜனநாயகத்தை மீறிய அரசமைப்புச் செயற்பாடாகும். இவ்வாறே, மஹிந்த தான் மூன்றாவது தடவையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு சட்டத் தடையாக நின்ற சிராணியைப் பதவி நீக்கினார். 18 ஆவது திருத்தத்தை நிறைவேற்றினார்.இவை எல்லாம் ஜனநாயகம் என அழைக்கப்படும்( So-called Democracy)  ஜனநாயகத்தை மீறிய அரசமைப்புத் திருத்த செயற்பாடுகளாகும்.

7
ஜே ஆர் தனது அரச பதவியை நிலை நிறுத்தும் நலனுக்காக அரசமைப்பு ஆக்கம் மற்றும் திருத்தம் மூலம் எதனைச் செய்தாரோ, சந்திரிக்கா எதனைச் செய்ய முயன்றாரோ, மஹிந்த எதனைச் செய்தாரோ அதனைத்தான் ரணிலும் 19 ஆவது அரசமைப்புத் திருத்தத்தின் மூலம் செய்தார். இதனைத்தான் மைத்திரியும் இப்போது செய்கிறார்.

அடுத்து வரும் ஜனாதிபதித் தேர்தலில் பலவீனமான வேட்பாளரான ரணில் தன்னை விஞ்சும் வேட்பாளராக வரக்கூடிய அவர் நினைத்த அனைவரையும் 19 ஆவது திருத்தம் மூலமாக வேட்பாளராக வர முடியாதவர்களாக்கியுள்ளார். 36 வருடங்களுக்கு முன்பு ரணிலின் மாமாவான ஜே ஆர் அன்று ஒருவரை மட்டும் எதிர்கொள்ளத் தயங்கினார், இன்றோ மருமகன் ரணில் மூன்று பேரை எதிர்கொள்ளத் தயங்குகிறார்.

மஹிந்த வேட்பாளராவதைத் தடுப்பதற்காக மூன்றாவது முறை ஒருவர் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக முடியாது என்றும், கோட்டபாய வேட்பாளராவதைத் தடுப்பதற்காக இரட்டைப் பிரஜாவுரிமையுடைவர் தேர்தல்கள் எதிலும் வேட்பாளராக இருக்க முடியாது என்றும், நாமல் ராஜபக்ச எதிர் வரும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராவதைத் தடுக்கும் வகையில் 35 வயதையடையாத ஒருவர் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக முடியாது என்றும் 19 ஆவது திருத்தத்தில் ரணில் எழுதி வைத்துள்ளார். மேலும், இன்றைய ஜனாதிபதியின் அதிகாரச் சிறகுகளையும் 19 இன் மூலம் கத்தரித்து வைத்துள்ளார்.

ரணில் இன்றும் நாளையும் ஜனாதிபதியாக இருக்க விரும்பியதன் விளைவே 19 ஆவது அரசமைப்புத் திருத்தமாகும்.

8
இந்த அடிப்படையிலமைந்த சிங்களப் பெரும்பான்மை அரசியல் முதலாளிகளின் அதிகாரப் போட்டி எனும் தொட்டிலின் மேலே கட்டியிருக்கும் சுத்துமாத்துக் கிலுகிலுப்பையின் சத்தத்துக்கு ஆடும் குழந்தைகளாக நமது சிறுபான்மை அரசியல்வாதிகள் ஏன் தமது கால் கைகளை அசைத்து ஆடியபடிக்கு கெக்கலிக்கிறார்கள்?

ஓஹ்.. அவர்களும் முதலாளிகள்தானே அதனால்தானே அதனால்தானோ?

சிறுபான்மையினரான நாம் கிலுகிலுப்பைக்கு குதிக்கவோ- கிழுகிழுப்பை அடையவோ நிகழ் அரசியலில் எதுவுமில்லை. அமைதி காப்போம்! பாதுகாப்பாய் இருப்போம்!!
Bad here Segudavood

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

  பெட்ரோலுக்கு விலை கூடுகிற‌தா?  பொருட்க‌ளுக்கு விலை கூடுகிற‌தா? இது ப‌ற்றி முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌த்தேவையில்லை. ஏனென்றால் இந்த‌ நாட்டின் 2 கோடி ம‌க்க‌ளில் ஒன்ன‌ரைக்கோடி ம‌க்க‌ள் சிங்க‌ள‌ ம‌க்க‌ள். பெற்றோலுக்கு விலை கூடினால் , பொருள்க‌ளுக்கு விலை கூடினால்  அது தாக்க‌ம் முத‌லில் சிங்க‌ள‌ ம‌க்க‌ளுக்குத்தான்.  அத‌ற்கு அடுத்துதான் சிறுபான்மை ம‌க்க‌ளைத்தாக்கும். ஒன்ன‌ரைக்கோடி பெரிதா? 50 ல‌ட்ச‌ம் பெரிதா? இந்த‌ அர‌சாங்க‌ம் 100க்கு 99.5 சிங்க‌ள‌ ம‌க்க‌ளால் கொண்டு வ‌ர‌ப்ப‌ட்ட‌ அர‌சாங்க‌ம். பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரித்தால் அவ‌ர்க‌ள் பார்த்துக்கொள்வார்க‌ள். நாம் த‌லையை ஓட்டுவ‌தால் எந்த‌ ந‌ன்மையும் கிடைக்க‌ப்போவதில்லை. முடியுமாயின் பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்பு ப‌ற்றி முஸ்லிம்க‌ள் ஓட்டுப்போட்ட‌ முஸ்லிம் க‌ட்சிக‌ளின் உறுப்பின‌ர்க‌ளை பாராளும‌ன்ற‌த்தில், ஊட‌க‌ங்க‌ளில் பேச‌ சொல்லுங்க‌ள்.  அவ‌ர்க‌ளே பேசாம‌டந்தையாக‌ இருக்கும் போது முஸ்லிம்க‌ள் ஏன் அல‌ட்டிக்கொள்ள‌ வேண்டும்? பொருட்க‌ள் விலை கூடுத‌ல் பெரிய‌ விட‌ய‌மா? த‌ம‌க்கென்ற‌ நாட்டை பாதுகாப்ப‌து முக்கிய‌மா என்ப‌து பெரும்பாலான‌ சிங்க

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

 றிசாத் எம்.பி கைதுக்கு முன்னராக வெளியிட்ட ஒளிப்பதிவை பார்க்கும் போது அழுகையே வந்து விட்டது :  அ.இ.ம.கா அம்பாறை செயற்குழு நூருல் ஹுதா உமர்  அண்மையில் கைது செய்யப்பட்டு விசாரணை காவலில் வைக்கப்பட்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கைதை கண்டித்து தமது எதிர்ப்பை காட்டும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட செயற்குழு இன்று வெள்ளிக்கிழமை கல்முனையில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு  நூற்றுக்கணக்கானவர்களை கொலைசெய்த கொலையாளிகள், பாரிய மோசடியில் ஈடுபட்ட கொள்ளையர்களை கைது தேய்வது போன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரை கைது செய்ததன் மூலம் இந்த நாட்டின் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துள்ளார்கள். இவர்களின் இந்த செயல்கள் இந்த நாட்டில் சிறுபான்மை மக்கள் வாழ்வதையே கேள்விக்குறியாக்குகிறது. முஸ்லிங்களை தீவிரவாதிகளாக காட்டி இந்த நாட்டின் ஆட்சியை கைப்பற்றிய இவர்கள் ஆட்சியை கொண்டு செல்ல முடியாமல் திணறிக்கொண்டு தக்கவைக்க  வேண்டிய சூழ்நி

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்

-முபாறக் அப்துல் மஜீத் மௌலவி – - பிறை பார்த்து நோன்பு பிடித்தல், பிறை கண்டு நோன்புப் பெருநாளை எடுத்தல், ஹஜ் பிறையின் ஆரம்பம், அரபா நாள் என்பன சமீப காலத்தில் ஏற்பட்டுள்ள நவீன பிரச்சினைகளாகும். வானொலி, தொலைபேசி, சட்டலைட் போன்றவை இல்லாத ஒரு காலத்தில் இது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. மாறாக இது பரவலாக்கப்பட்டு உலகம் ஒரு குறுகிய, சிறிய கிராமமாக உருவெடுத்துள்ள நிலையிலேயே இப்பிரச்சினைகள் எழுந்துள்ளன. இன்றைய உலகம் என்பது ஒரு மனிதனின் உள்ளங்கைக்குள் அடங்குமளவு சுருங்கிவிட்ட நிலையில் முஸ்லிம் சமூகம் மத்தியில் இந்தக்கருத்துக்கள் பற்றிய விழிப்புணர்வும், அவை பற்றிய தெளிவையும் எதிர் பார்ப்பதில் அர்த்தமுண்டு. இது விடயம் ஒரு பிரச்சினையாக உருவெடுத்தமைக்கு பல நியாயமான காரணங்களும் உள்ளன. அத்தகைய நியாயங்களை நாம் குர்ஆன், ஹதீத் நிலைமையில் நின்று ஆராயும் போது பல தெளிவுகள் நமக்கு ஏற்படும். ஆகவே, பிறை விடயத்தை நாம் ஆராயும் போது குர்ஆன், ஹதீத் ஆதாரங்கள், சூழல், நவீன தொழில் நுட்பம் என்பனலற்றை கருத்திற் கொள்ள வேண்டியது அவசியமானதாகும். இந்த வகையிலேயே நாம் பிறைக்குரிய சர்சையை அணுக வேண்டும். அந்த வகைய