பொது மக்களுக்கான சேவைகளை அமைச்சின் ஊடாக விரைவுபடுத்துக!

 

அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அதிகாரிகளுக்கு பணிப்புரை
 +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
 
முன்னேடுக்கப்பட்டுள்ள உத்தேச நீர் வழங்கல் திட்டங்களை மக்கள் பயனடையும் விதத்தில் விரைவாக பூர்த்தி செய்து, கையளிப்பதற்கு ஒத்துழைக்க முன்வருமாறு நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சு, அதன் கீழ் செயற்படும் நிறுவனங்களின் உயர் அதிகாரிகளின் மத்தியிலான கலந்துரையாடலொன்று அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று திங்கட்கிழமை (12) நடைபெற்ற போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் செயலாளர் டீ.ஜி.எம்.வி.ஹப்புஆராச்சி, இராஜாங்க செயலாளர் சந்திரா விக்கிரமசிங்க, மேலதிக செயலாளர்களான ஏ.சி.எம்.நபீல், எல். மங்கலிகா, முஸ்லிம் சமய பணிப்பாளர் ஏ.பி.எம்.அ~;ரப்,  நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பொது முகாமையாளர் தீப்தி சுமன சேகர மற்றும் அமைச்சின் உயர் அதிகாரிகள் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

பொது மக்களின் மிக அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்வதற்காக சேவை அடிப்படையில் செயற்பட்டுவரும்  நீர் வழங்கல் மற்றும் நீர் வடிகால் சபைக்குப் பொறுப்பான அமைச்சராக பதவி ஏற்க கிடைத்தமை குறித்து பேருவகை அடைகிறேன். 
ஊடகம், தொலைதொடர்பு, வீதி அபிவிருத்தி முதலான விடயங்களை கவனிக்கின்ற அமைச்சுக்களில் பணியாற்றியுள்ள போதிலும், நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் தலைவராக 2000ஆம் ஆண்டு கடமையாற்றிய ஒருவருட காலத்துக்குள் மக்களுக்கு பாரிய அளவு சேவை செய்ய முடிந்தமை குறித்து பெரிதும் திருப்தியடைகிறேன்.

இக்கலந்துரையாடலின் போது நீர் வழங்கல் கருத்திட்டங்களின் செயற்பாடுகள் கழிவு நீர் முகாமைத்துவ கருத்திட்டங்கள், சமூக நீர் வழங்கல் திட்டங்கள் தொடர்பாக ஆராயப்பட்டதுடன் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள கருத்திட்டங்கள் தொடர்பாகவும் அமைச்சருக்கு விரிவான விளக்கமளிக்கப்பட்டது. முஸ்லிம் சமய கலாசார திணைக்களமும் இவ்வமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுளளமை குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்