துப்பாக்கிச் சூட்டில் பலியான பொலிஸாரின் உடலில் வெட்டுக் காயங்கள்;


துப்பாக்கிச் சூட்டில் பலியான பொலிஸாரின் உடலில் வெட்டுக் காயங்கள்; துப்பாக்கிகளும் அபகரிப்பு!

வவுணதீவு பொலிஸ் காவலரணில் சுட்டுக் கொல்லப்பட்ட இரண்டு பொலிஸாரின் உடல்கள் மீதும், கத்தி போன்ற ஆயுதத்தால் வெட்டப்பட்ட காயங்கள் உள்ளதாகத் தெரியவருகிறது.

வவுணதீவில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் இந்தத் தகவலை உறுதிப்படுத்தினார்.

கத்தி போன்ற ஆயுதத்தால் பொலிஸார் இருவர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்ட பின்னரே, அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என்று, மேற்படி பொலிஸ் உத்தியோகத்தர் கூறினார்.

சுட்டுக் கொல்லப்பட்ட பொலிஸார் இருவரிடமிருந்த கைத்துப்பாக்கிகளையும் (றிவோல்வர்), தாக்குதல் நடத்தியோர் அபகரித்துச் சென்றுள்ளனர்.

இதேவேளை, சம்பவ இடத்துக்கு இன்று காலை சென்றிருந்த மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.எம். றிஸ்வி, சடலங்களைப் பார்வையிட்டார்.
(புதிது)

Comments

popular posts

சற்றுமுன் தம்புள்ளையில் விபத்து

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் அனுப்பியுள்ள செய்தி

ACMC + SLMC இணைந்து பணியாற்ற தீர்மானம்