Skip to main content

ர‌ணில் ஆட்சியில் முஸ்லிம்களை அழிக்க தீட்டிய திட்டங்கள்!


———————————————————
கண்டி மாவட்­ட­மெங்கும் பர­விய இன வன்­மு­றைகள் தொடர்பில் கைதான மஹ­சொஹொன் பல­காய தலைவன் அமித் வீர­சிங்க, அப்­போது முழு நாட்­டிலும் பாரிய குழப்­பத்தை ஏற்­ப­டுத்த திட்­ட­மிட்­ட­தாக, பொலிஸ் உள­வா­ளி­யான நாமல் குமார தெரி­வித்தார்.

அமித் வீர­சிங்க உள்­ளிட்ட சந்­தேக நபர்கள் கைதான தினத்தில் நாட்டில் 100 விகா­ரைகள் மீது கல்­வீச்சு தாக்­குதல் நடாத்தி குழப்­பத்தை ஏற்­ப­டுத்­தவும், 119 பொலிஸ் அவ­சர அழைப்புப் பிரி­வுக்கு அழைத்து பள்­ளி­களில் குண்­டுகள், ஆயு­தங்கள் இருப்­ப­தாக கூறி பதற்­றத்தை தோற்­று­விக்­கவும் திட்­ட­மி­டப்­பட்­டி­ருந்­த­தாக அவர் மேலும் தெரி­வித்தார்.

கண்டி - தெல்­தெ­னிய - திகன வன்­மு­றைகள் தொடர்பில் கைதான மஹ­சொஹொன் பல­காய தலைவன் அமித் வீர­சிங்க உள்­ளிட்ட சந்­தேக நபர்கள் 7 மாதங்­களின் பின்னர் பிணையில் விடு­விக்­கப்­பட்­டுள்ள நிலையில்,  பிணையில் வந்த அமித் வீர­சிங்க ஊட­கங்­க­ளுக்கு தெரி­வித்த கருத்­துக்கள் தொடர்பில் பதி­ல­ளிக்கும் போதே நாமல் குமார இவற்றை வெளிப்­ப­டுத்­தினார்.

கண்டி, தெல்­தெ­னிய - திகன பகு­தி­களில் அரங்­கே­றிய இன வன்­மு­றைகள் தொடர்பில் பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரி­வினர் தனது வீட்டில் வைத்து தான் உட்­பட 10 பேரைக் கைது செய்­த­தாக தெரி­விக்­கப்­பட்ட போதும்  அன்­றைய தினம் மொத்தம் 11 பேர் கைது செய்­யப்­பட்­ட­தாக அவ்­வி­வ­கா­ரத்தில் அமித் வீர­சிங்க தெரி­வித்­தி­ருந்தார்.  இதன்­போது 11 ஆவ­தாக கைது செய்­யப்­பட்ட நபர், ஜனா­தி­பதி மைத்­திரி  - கோத்தா கொலை சதி குறித்த தக­வல்­களை வெளிப்­ப­டுத்­திய நாமல் குமார எனக் கூறிய அவர், அவரை பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வா இடை நடுவே விடு­வித்­த­தாக கூறி­யி­ருந்தார்.

 இதற்கு பதி­ல­ளிக்கும் வித­மா­கவே நாமல் குமார மேற்­படி விட­யங்­களை வெளிப்­ப­டுத்­தினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறி­ய­தா­வது, கண்டி - திகன இன வன்­முறை தொடர்பில் அமித் வீர­சிங்க கைது செய்­யப்­பட்ட அந்த இரவில்  நாட­ளா­விய ரீதியில் 100 விகா­ரைகள் மீது கல்­வீச்சு தாக்­குதல் நடாத்த திட்­ட­மிட்­டி­ருந்தார். இது குறித்து அவர் உள்­ளிட்டோர் கலந்­து­ரை­யாடும் போது மறு புறத்தில் என்­னூ­டாக அந்த தக­வல்­களை பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வா கேட்­டுக்­கொண்­டி­ருந்தார்.

 அதே போன்று எம்­மிடம் ஒரு குரல் பதிவு ஆதாரம் உள்­ளது. அதா­வது,  அமித் வீர­சிங்க அன்­றைய இரவு நாட­ளா­விய ரீதியில் பாரிய குழப்­பத்தை ஏற்­ப­டுத்த திட்­ட­மிட்டார். முஸ்லிம் பள்­ளி­களில் குண்­டுகள், ஆயு­தங்கள் உள்­ள­தா­கவும் அவற்றை தாம் கண்­ட­தா­கவும் 119 பொலிஸ் அவ­சர அழைப்பு இலக்­கங்­க­ளுக்கு தகவல் கொடுத்து குழப்பம் ஏற்­ப­டுத்­து­வதே அந்த திட்­ட­மாகும்.

இது குறித்து நான் சி.ஐ.டி.க்கு வாக்கு மூலங்கள் வழங்­கி­யி­ருக்­கின்றேன். அவ­சியம் ஏற்­பட்டால் அந்த சாட்­சி­களை ஊட­கங்­க­ளுக்கு தரவும் தயா­ராக உள்ளேன்.

உண்­மையில் அமித் வீர­சிங்க நானும் அவ­ரது வீட்டில் இருந்த போது தெல்­தெ­னிய - திகன வன்­மு­றைகள் குறித்து கைது செய்­யப்­பட்­ட­தாக கூறி­யி­ருந்தார். இதனை அவர் கூறத் தேவை­யில்லை. நானே கூறுவேன். ஆம் நான் அவ­ரது வீட்டில் தான் இருந்தேன். இந்த கும்­பலின் தக­வல்­களை வெளிப்­ப­டுத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வா என்­னையே உள­வா­ளி­யாக அனுப்­பி­யி­ருந்தார். அங்­கி­ருந்த வண்­ணமே மேற்­படி அனைத்து தக­வல்­க­ளையும் வழங்­கி­யி­ருந்தேன்.

இந் நிலையில் அமித்தின் வீட்டைச் சுற்­றி­வ­ளைத்த பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரி­வினர் என்­னையும் சேர்த்துத் தான் கைது செய்து ஜீப்பில் ஏற்­றினர். எனினும் அவர்­க­ளுக்கு என்னை தெரி­யாது. அனை­வ­ரையும் அவர்கள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலகவிடம் அழைத்துச் சென்ற போது அமித் உள்ளிட்ட 10 பேரையும் ஒரு வாகனத்தில் ஏற்றிய அவர் என்னை பிறிதொரு வாகனத்தில் ஏற்றி கைவிலங்கை  அகற்றி  என்னை விடுவித்தார்.

இது ஒன்றும் அமித் வீரசிங்க கூற வேண்டியதில்லை. நானே பல முறை கூறியிருக்கின்றேன் என்றார்.
நன்றி -Vidiveli

-அல்மசூறா நியூஸ்

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

  பெட்ரோலுக்கு விலை கூடுகிற‌தா?  பொருட்க‌ளுக்கு விலை கூடுகிற‌தா? இது ப‌ற்றி முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌த்தேவையில்லை. ஏனென்றால் இந்த‌ நாட்டின் 2 கோடி ம‌க்க‌ளில் ஒன்ன‌ரைக்கோடி ம‌க்க‌ள் சிங்க‌ள‌ ம‌க்க‌ள். பெற்றோலுக்கு விலை கூடினால் , பொருள்க‌ளுக்கு விலை கூடினால்  அது தாக்க‌ம் முத‌லில் சிங்க‌ள‌ ம‌க்க‌ளுக்குத்தான்.  அத‌ற்கு அடுத்துதான் சிறுபான்மை ம‌க்க‌ளைத்தாக்கும். ஒன்ன‌ரைக்கோடி பெரிதா? 50 ல‌ட்ச‌ம் பெரிதா? இந்த‌ அர‌சாங்க‌ம் 100க்கு 99.5 சிங்க‌ள‌ ம‌க்க‌ளால் கொண்டு வ‌ர‌ப்ப‌ட்ட‌ அர‌சாங்க‌ம். பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரித்தால் அவ‌ர்க‌ள் பார்த்துக்கொள்வார்க‌ள். நாம் த‌லையை ஓட்டுவ‌தால் எந்த‌ ந‌ன்மையும் கிடைக்க‌ப்போவதில்லை. முடியுமாயின் பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்பு ப‌ற்றி முஸ்லிம்க‌ள் ஓட்டுப்போட்ட‌ முஸ்லிம் க‌ட்சிக‌ளின் உறுப்பின‌ர்க‌ளை பாராளும‌ன்ற‌த்தில், ஊட‌க‌ங்க‌ளில் பேச‌ சொல்லுங்க‌ள்.  அவ‌ர்க‌ளே பேசாம‌டந்தையாக‌ இருக்கும் போது முஸ்லிம்க‌ள் ஏன் அல‌ட்டிக்கொள்ள‌ வேண்டும்? பொருட்க‌ள் விலை கூடுத‌ல் பெரிய‌ விட‌ய‌மா? த‌ம‌க்கென்ற‌ நாட்டை பாதுகாப்ப‌து முக்கிய‌மா என்ப‌து பெரும்பாலான‌ சிங்க

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

 றிசாத் எம்.பி கைதுக்கு முன்னராக வெளியிட்ட ஒளிப்பதிவை பார்க்கும் போது அழுகையே வந்து விட்டது :  அ.இ.ம.கா அம்பாறை செயற்குழு நூருல் ஹுதா உமர்  அண்மையில் கைது செய்யப்பட்டு விசாரணை காவலில் வைக்கப்பட்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கைதை கண்டித்து தமது எதிர்ப்பை காட்டும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட செயற்குழு இன்று வெள்ளிக்கிழமை கல்முனையில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு  நூற்றுக்கணக்கானவர்களை கொலைசெய்த கொலையாளிகள், பாரிய மோசடியில் ஈடுபட்ட கொள்ளையர்களை கைது தேய்வது போன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரை கைது செய்ததன் மூலம் இந்த நாட்டின் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துள்ளார்கள். இவர்களின் இந்த செயல்கள் இந்த நாட்டில் சிறுபான்மை மக்கள் வாழ்வதையே கேள்விக்குறியாக்குகிறது. முஸ்லிங்களை தீவிரவாதிகளாக காட்டி இந்த நாட்டின் ஆட்சியை கைப்பற்றிய இவர்கள் ஆட்சியை கொண்டு செல்ல முடியாமல் திணறிக்கொண்டு தக்கவைக்க  வேண்டிய சூழ்நி

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்

-முபாறக் அப்துல் மஜீத் மௌலவி – - பிறை பார்த்து நோன்பு பிடித்தல், பிறை கண்டு நோன்புப் பெருநாளை எடுத்தல், ஹஜ் பிறையின் ஆரம்பம், அரபா நாள் என்பன சமீப காலத்தில் ஏற்பட்டுள்ள நவீன பிரச்சினைகளாகும். வானொலி, தொலைபேசி, சட்டலைட் போன்றவை இல்லாத ஒரு காலத்தில் இது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. மாறாக இது பரவலாக்கப்பட்டு உலகம் ஒரு குறுகிய, சிறிய கிராமமாக உருவெடுத்துள்ள நிலையிலேயே இப்பிரச்சினைகள் எழுந்துள்ளன. இன்றைய உலகம் என்பது ஒரு மனிதனின் உள்ளங்கைக்குள் அடங்குமளவு சுருங்கிவிட்ட நிலையில் முஸ்லிம் சமூகம் மத்தியில் இந்தக்கருத்துக்கள் பற்றிய விழிப்புணர்வும், அவை பற்றிய தெளிவையும் எதிர் பார்ப்பதில் அர்த்தமுண்டு. இது விடயம் ஒரு பிரச்சினையாக உருவெடுத்தமைக்கு பல நியாயமான காரணங்களும் உள்ளன. அத்தகைய நியாயங்களை நாம் குர்ஆன், ஹதீத் நிலைமையில் நின்று ஆராயும் போது பல தெளிவுகள் நமக்கு ஏற்படும். ஆகவே, பிறை விடயத்தை நாம் ஆராயும் போது குர்ஆன், ஹதீத் ஆதாரங்கள், சூழல், நவீன தொழில் நுட்பம் என்பனலற்றை கருத்திற் கொள்ள வேண்டியது அவசியமானதாகும். இந்த வகையிலேயே நாம் பிறைக்குரிய சர்சையை அணுக வேண்டும். அந்த வகைய