Posts

Showing posts from November, 2018

துப்பாக்கிச் சூட்டில் பலியான பொலிஸாரின் உடலில் வெட்டுக் காயங்கள்;

Image
துப்பாக்கிச் சூட்டில் பலியான பொலிஸாரின் உடலில் வெட்டுக் காயங்கள்; துப்பாக்கிகளும் அபகரிப்பு! வவுணதீவு பொலிஸ் காவலரணில் சுட்டுக் கொல்லப்பட்ட இரண்டு பொலிஸாரின் உடல்கள் மீதும், கத்தி போன்ற ஆயுதத்தால் வெட்டப்பட்ட காயங்கள் உள்ளதாகத் தெரியவருகிறது. வவுணதீவில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் இந்தத் தகவலை உறுதிப்படுத்தினார். கத்தி போன்ற ஆயுதத்தால் பொலிஸார் இருவர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்ட பின்னரே, அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என்று, மேற்படி பொலிஸ் உத்தியோகத்தர் கூறினார். சுட்டுக் கொல்லப்பட்ட பொலிஸார் இருவரிடமிருந்த கைத்துப்பாக்கிகளையும் (றிவோல்வர்), தாக்குதல் நடத்தியோர் அபகரித்துச் சென்றுள்ளனர். இதேவேளை, சம்பவ இடத்துக்கு இன்று காலை சென்றிருந்த மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.எம். றிஸ்வி, சடலங்களைப் பார்வையிட்டார். (புதிது)

யாழ்ப்பாணம் அல் ஹதீஜா முன்பள்ளி வருடாந்த சிறுவர் பரிசளிப்பு வைபவம்

Image
-பாறுக் ஷிஹான் 2018 ஆண்டிற்கான  அல் ஹதீஜா முன்பள்ளி வருடாந்த  பரிசளிப்பு  பாடசாலை மண்டபத்தில்  வியாழக்கிழமை(29) மாலை   ஆரம்பமானது. நிகழ்வின் முதலில் முஹம்மதியா ஜும்ஆ பள்ளிவாசல் பிரதம இமாம்   கிராஅத் ஓதினார். தொடர்ந்து  தலைமையுரையை முஹம்மதியா ஜூம்மா பள்ளிவாசல் தலைவர் எஸ்.ஏ.சி முபீன் நிகழ்த்தினார். தொடர்ந்து   மாணவர்களின்  இசையும் அசையும் நடனங்கள்  கலை நிகழ்ச்சிகள்   பெற்றோர்களிற்கான கலை நிகழ்ச்சிகள் என்பன நடைபெற்றன.  அடுத்து மாணவர்களுக்கு  யாழ் மாநகர சபை முன்னாள் உறுப்பினர் பி.எம் சரபுல் அனாம் ஊடகவியலாளர்  எம்.எஸ் லாபீர் ஆகியோர் பரிசில்களை வழங்கி வைத்தனர்.

நான் உயிரோடு இருக்கும் வரை, ரணில் விக்ரமசிங்கவைப் பிரதமராக நியமிக்க மாட்டேன்”

Image
“நான் உயிரோடு இருக்கும் வரை, ரணில் விக்ரமசிங்கவைப் பிரதமராக நியமிக்க மாட்டேன்” என்று, தனது முடிவை மீண்டுமொருமுறை அறுதியிட்டுக் கூறியிருக்கிறார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. இதையடுத்து, “இந்த மனிதனுக்கு, இத்தனை பிடிவாதம் கூடாது” என்று, ஒரு சாரார் கோபப்படத் தொடங்கியுள்ளனர். இன்னொரு தரப்பினரின் பார்வை, வித்தியாசமாக உள்ளது. “அந்த மனிதர், இந்தளவுக்குப் பிடிவாதமாக இருக்கிறார் என்றால், ரணில் விக்ரமசிங்கவால் எந்தளவுக்குப் பாதிக்கப்பட்டிருப்பார்” என்று கேட்கின்றனர். ஜனாதிபதியின் தீர்மானம் பற்றிய மேற்படி அபிப்பிராயங்களுக்கு இடையில்தான், மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள் மறைந்து கிடக்கின்றன. தேசிய அரசாங்கம், 2015ஆம் ஆண்டு உருவானபோது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஏராளமான விட்டுக் கொடுப்புகளைச் செய்ய வேண்டிய நிலையில் இருந்தார் என்பதை, முதலில் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. “மைத்திரியை, நாங்கள்தான் ஜனாதிபதியாக்கினோம்” என்று, ஐக்கிய தேசியக் கட்சி உரிமை கொண்டாடி வந்தது. அதனால், ஐக்கிய தேசியக் கட்சியின் ‘நல்லது கெட்டது’களை எல்லாம், ஜனாதிபதியான புதிதில், போட்டுப் பொறுத்துக் கொள்ள

ஹஜ் வழிகாட்டிகளுக்கான கருத்தரங்கு

Image
ஹஜ் வழிகாட்டிகளுக்கான கருத்தரங்கு முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் ஹஜ் வழிகாட்டிகளுக்கான கருத்தரங்கு ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் ஹஜ் வழிகாட்டிகளுக்கான விசேட கருத்தரங்கொன்று இன்று செவ்வாய்க்கிழமை (27.11.2018) மருதானை அல்-ஸபாப் நிறுவன மண்டபத்தில் நடைபெற்றது. முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அஷ்ஷேய்க் எம்.ஆர்.எம். மலிக் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நகர திட்டமில் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார். அத்துடன், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷேய்க் ரிஸ்வி முப்தி, ஸலாமா நிறுவனத்தின் பணிப்பாளர் அஷ்ஷேய்க் எம்.பகிஹ{த் தீன் (நளீமி), முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள், இம்இய்யதுல் உலமா சபை அங்கத்தவர்கள் உள்ளிட்ட உலமாக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

முஸ்லிம்களுக்குச் சொந்தமான நான்கு கடைகள் (25) ஞாயிற்றுக்கிழமை தீக்கிரை

Image
தேசிய நல்லிணக்கத்தை கருத்திற்கொண்டு நாட்டைக் கட்டியெழுப்ப முன்வருமாறு அமைச்சர் பைஸர் முஸ்தபா வேண்டுகோள் ( ஐ. ஏ. காதிர் கான் )    சுய நலன் கருதி அரசியல் செய்யாமல், தேசிய நல்லிணக்கத்தை அடிப்படையாகக் கொண்டு, அரசியலில் ஈடுபட  முன்வருமாறு அமைச்சர் பைஸர் முஸ்தபா, சகல தரப்பினர்களிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.     பாணந்துறை நகரின் பிரதான வீதியில், முஸ்லிம்களுக்குச் சொந்தமான நான்கு கடைகள் (25) ஞாயிற்றுக்கிழமை தீக்கிரையானதையடுத்து, அமைச்சர் பைஸர் முஸ்தபா உடனடியாக அவ்விடத்திற்குச் சென்று, நேரடியாக நிலைமைகளைக் கண்டறிந்தார். அங்கிருந்தோரிடம் இச்சம்பவம் தொடர்பிலான விபரங்களையும் தெளிவாகக் கேட்டுத் தெரிந்துகொண்டார்.    அத்துடன், குறித்த சம்பவத்தின் பின்னணியில், "எது சரி... எது பிழை..."  என்பது தொடர்பில் ஆதாரபூர்வமான தகவல்களையும் பெற்று, தேவையான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், அமைச்சர் பொலிஸாரிடமும் பாதுகாப்பு அதிகாரிகளிடமும் கேட்டுக்கொண்டார்.    அமைச்சர் இங்கு கருத்துத் தெரிவிக்கும்போது, இன்றைய கால கட்டத்தில், மக்களுக்கு மத்தியில் புரிந்துணர்வையும் தேசிய நல்லிணக்கத்தையு

நாட்டை காக்கவே முடிவெடுத்தேன் - மஹிந்த

Image
நாட்டை காக்கவே முடிவெடுத்தேன்  - மஹிந்த “இடைக்கால அரசு ஒன்றே அமைக்கப்பட்டுள்ளது.. ஐக்கிய தேசியக் கட்சியால் செய்ய முடியாமல் போன நாட்டை காப்பாற்றவே ஜனாதிபதி எங்களிடம் ஆட்சியை ஒப்படைத்தார்...பொறுமையாக இருந்தால் நாங்கள் 3/2 பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றி இருக்கலாம்.. அவசரப்பட்டுவிட்டோம் என்று சிலர் கூறுகின்றனர்.. நாங்கள் அவசரப்படவில்லை... நாட்டை காப்பாற்ற தாமதிக்காமல் முடிவெடுத்தோம்...பதவி எங்களுக்கு முக்கியம் அல்ல...” மஹிந்த ராஜபக்ச விசேட அறிவிப்பு...

ரணிலை மீண்டும் பிரதமராக நியமிக்க மாட்டேன்.. அந்த கொள்கையில் நான் உறுதியாக உள்ளேன்..

Image
“ரணிலை மீண்டும் பிரதமராக நியமிக்க மாட்டேன்.. அந்த கொள்கையில் நான் உறுதியாக உள்ளேன்.. மஹிந்த ராஜபக்சவுக்கு பார்லிமென்ட்டில் பெரும்பான்மை இருந்தால் அவர் ஆட்சியை தொடரலாம். அப்படி இல்லை என நிரூபிக்கப்பட்டால் அது தொடர்பில் அவர் தீர்மானம் ஒன்றை எடுக்க  வேண்டும்.. ரணில் கூடுதல் அதிகாரங்களை கையில் எடுத்து ஜனாதிபதி போல செயற்பட முனைந்தார்..  நான் சொன்ன நல்ல ஆலோசனைகள் எதையும் கேட்கவில்லை...இந்த அரசியல் நெருக்கடிக்கு விரைவில் முடிவு கட்டப்படும். என் மீதான கொலை சதி முயற்சி குறித்தான விசாரணைகள் புதிய கோணத்தில் நடைபெறவுள்ளன. உயர்நீதிமன்றம் தேர்தல் விடயத்தில் என்ன தீர்ப்பை கொடுக்கிறதோ அதை ஏற்போம்.. பாராளுமன்ற கலைப்பு பற்றியே நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது... பிரதமர் நியமனம் தவறென யாரும் நீதிமன்றம் செல்லவில்லை.எல்லாமே அரசியலமைப்பின்படியே நடந்துள்ளது..” சண்டே டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் ஜனாதிபதி மைத்ரி தெரிவிப்பு..

என்னுடன் விவாதத்திற்கு வாருங்கள் நான் தயார்!

Image
என்னுடைய பதவி! உயிர்! இரண்டுமே இல்லாமல் போகலாம் ஜனாதிபதி?  தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பிலும் தம் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் ஜனாதிபதி நேற்று (23) நடைபெற்ற நிகழ்வின்போது கருத்துத் தெரிவித்தார். 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் திகதி இந்த நாட்டு மக்கள் என்னை ஜனாதிபதியாகத் தெரிவுசெய்தார்கள். அன்று காணப்பட்ட பிரச்சினைகளின்படி, நான் சரியான பாதையை தான் தேர்வுசெய்தேன். அன்று நான் எடுத்த தீர்மானம் சரி என்பதனை இன்றும் கூறுவேன். ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள அனைவரும் மைதானத்தில் தனியே இருந்து விளையாடியதைப் போல இன்று பாராளுமன்றத்தில் முழுநாளும் இருந்தனர். பாராளுமன்றத்தில் இருக்காத என்னை அவர்களின் உரைகளின் ஊடாக விளையாட்டுப் பொருளாக்கியதை நான் பார்த்தேன். எனது மகள் எழுதிய ‘ஜனாதிபதி தாத்தா’ எனும் நூல் இன்று பாராளுமன்றத்தில் பேசு பொருளாகியது.  குழப்பமடைய வேண்டாம் என அவர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றென். ‘ரணிலுடன் வெற்றியளிக்காத அரசியல் பயணம்’ எனும் நூலை எதிர்வரும் ஜனவரி மாதம் வௌியிடவுள்ளேன். ஜனவரி மாதம் அதனையும் வாசிக்குமாறு அவர்களிடம் வேண்டுகோ

மன்றில் குழப்பங்களை தவிர்க்கும் வகையிலேயே வெளியேறினோம்: சுசில்

Image
மன்றில் குழப்பங்களை தவிர்க்கும் வகையிலேயே வெளியேறினோம்: சுசில் ----------------------------------------------------------------- நாடாளுமன்றத்திற்குள் மோதல்களும், குழப்பங்களும் தோற்றம் பெருவதை விரும்பாத நிலையிலேயே சபையிலிருந்து வெளியேறினோம் என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இன்றைய (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்ற அமர்வுகளின்போது, ஆளுந்தரப்பினர் சபையிலிருந்து இடைநடுவே வெளியேறினர். இது தொடர்பாக ஆதவன் செய்தி சேவைக்கு அவர் பிரத்தியேகமாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். ஆதவனுக்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர், ”நாடாளுமன்றத் தெரிவுக் குழுவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலிருந்து 7 பேரின் பெயர் சமர்பிக்கப்பட்டிருந்த நிலையில், ஐ.ம.சு.மு. மற்றும் ஐ.தே.மு. ஆகிய இரு கட்சிகளிலிருந்தும் சமமான எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் தெரிவுக்குழுவில் நியமிக்கப்பட்டுள்ளனர். சபாநாயகரின் தன்னிச்சையான மற்றும் பக்கசார்பான நடவடிக்கையினாலேயே இவ்வாறான நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு நாம் எதிர்ப்பு தெரிவித்தோம். ஆனால், இதனால் நாடாளுமன்றத்திற்குள் குழப்பம் ஏற்படுவதை தவிர

மாலைத்தீவில் தடுத்து வைக்கப்பட்டடிருந்த லஹிரு மதுஷங்க விடுதலை;

Image
இன்று இரவு அமைச்சர் பைஸருடன் இலங்கை வருகிறார் ( ஐ. ஏ. காதிர் கான் )    மாலைத்தீவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையரான லஹிரு மதுஷங்கவின் வழக்கு தள்ளுபடியானதையடுத்து, அவர் (21) புதன்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று (22) இரவு  இலங்கை வருகிறார்.    லஹிரு மதுஷங்க மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்.  இவர், கடந்த மூன்றறை வருடங்களுக்கு முன்னர்,  மாலைத்தீவு அரசாங்கத்தினால் மாலைத்தீவிலுள்ள "மாபூசி" சிறைச்சாலையில்  தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தார்.  அந்நாட்டு முன்னாள் ஜனாதிபதி அப்துல்லாஹ் யமீன் அப்துல் கையூமைக் கொலை செய்யும்  முயற்சியில் சந்தேகத்தின் பேரில் இவர் கைது செய்யப்பட்டிருந்தார். ஏற்கனவே, இவ்விடயங்களை அறிந்து கொண்ட அமைச்சர் பைஸர் முஸ்தபா,  கடந்த (16) வெள்ளிக்கிழமையன்று, தனது சொந்தச் செலவில் மாலைத்தீவுக்குச் சென்று, நமது நாட்டு இளைஞர் லஹிரு மதுஷங்கவை விடுவிப்பது தொடர்பாக,  மாலைத்தீவின் புதிய ஜனாதிபதி இப்றாஹீம் முஹம்மது சாலிஹ், மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி முஹம்மது நஷீத் உட்பட அரசின் உயர்மட்டப் பிரிதிநிதிகளையும் சந்தித்துப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட

முன்னாள் அமைச்சர் சுபையிரின் முயற்சிக்கு வெற்றி:

Image
முன்னாள் அமைச்சர் சுபையிரின் முயற்சிக்கு வெற்றி: மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்கு புதிய பணிப்பாளர் கல்முனை வலயக்கல்வி பணிமனையில் பிரதிக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றிய இலங்கை கல்வி நிருவாக சேவை தரம் 11ஐச் சேர்ந்த எஸ்.எம்.எம்.எஸ். உமர் மௌலானா மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் பதில் வலயக் கல்விப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாண ஆளுநரின் உத்தரவிற்கமைவாக, கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரினால் 2018.11.13 ஆம் திகதி முதல் செயற்படும் வன்னம் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் பணிப்பாளர் இஸ்ஸடீன் ஓய்வு பெற்றுச் சென்றதனையடுத்து, ஏற்பட்ட வெற்றிடத்திற்கே உமர் மௌலானா நியமிக்கப்பட்டுள்ளார். குறிப்பாக மட்டக்களப்பு மத்தி வலயத்திற்கு குறிப்பிட்ட சில மாதங்களில் ஓய்வு பெற்றுச் செல்லக்கூடியவர்களை தற்காலிகமாக வலயக் கல்விப் பணிப்பாளர்களாக நியமிப்பதனால் அவ்வலயத்தின் கல்வி வீழ்ச்சியடைந்து வருவதாக பல தரப்பினராலும் குற்றம் சுமத்தப்பட்டது. இதுதொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட கல்வியலாளர்கள், கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் சுபையிரின் கவனத்திற்கு கொண்

கல்முனை கிறீன்பீல்ட் சுனாமி வீட்டுத்திட்டத்தில் குடிநீரை நிறுத்தியமைக்காக மக்கள் சட்ட நடவடிக்கை

Farook Sihan   கல்முனை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர்  ஹரீஸ் இடைநிறுத்தப்பட்ட குடிநீரை  மக்களுக்கு  தற்காலிகமாக  பெற்றுக் கொடுக்கப்பட்டதாக  வந்துள்ள செய்தியை ஆதாரங்களுடன் மறுத்துள்ளதுடன் பொய்யான செய்திகளை அரசியலுக்காக பரப்பி மக்களை குழப்பமடைய செய்ய வேண்டாம்  கல்முனை கிறீன்பீல்ட் சுனாமி வீட்டுத்திட்ட  தற்காலிக ஆதன முகாமைத்துவக் குழுவினர் கேட்டுள்ளனர்.  இன்றைய தினம் (21) கல்முனை கிறீன்பீல்ட் சுனாமி வீட்டுத்திட்ட வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட  ஊடக  சந்திப்பில் மேற்கண்டவாறு இக்குழு தெரிவித்தது. மேலும் கருத்து தெரிவிக்கையில் கல்முனை கிறீன்பீல்ட் சுனாமி வீட்டுத்திட்டத்தில் 438 குடும்பங்கள் வாழ்கின்ற மக்களின்  அடிப்படை தேவையான குடிநீரை கடந்த 15.11.2018 திகதியில் இருந்து நிறுத்தியமைக்காக மக்கள் எதிர்ப்பு நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள தயாராகி வருகின்றனர். குறித்த குடிநீரை அம்மக்கள் பயன்படுத்தியதற்கு அமைய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபைக்கு செலுத்த வேண்டிய ரூபா 921036ஃ- செலுத்தப்படாமையால் நீர்விநியோகம் துண்டிக்கப்பட்டது. இதனால் கடந்த சில நாட்களுக்கும் மேலாக அங்கு வாழும் மக்கள் க

பிரதமர் மஹிந்தவை ஹெல உருமய உறுப்பினர் விமர்சித்ததால், மேல் மாகாண சபையில் குழப்பம்

( ஐ. ஏ. காதிர் கான் )    மஹிந்த ராஜபக்ஷவின் இரங்கல் சோறு சமைக்கத் தயாராகுமாறு,,  ஹெல உறுமயவின் மேல் மாகாண சபை உறுப்பினர் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க, மேல் மாகாண சபையில் தெரிவித்த கருத்தினால், மேல் மாகாண சபையில் குழப்ப நிலைமை ஏற்பட்டது.    மேல் மாகாண சபையின் 2019 ஆம்  ஆண்டுக்கான வரவு செலவுத்  திட்டம், நேற்று முன் தினம்  சமர்ப்பிக்கப்படவிருந்தது. வரவு செலவுத் திட்ட உரைக்கு முன்னர், இந்த நிலைமை காரணமாக சுமார் அரை மணித்தியாலம் சபை நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாத நிலை  உருவானது.    குறித்த உறுப்பினருக்கு  எதிராக,  ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் கோஷம் எழுப்பியதோடு,  அவரின் இக்கூற்றை வாபஸ் பெறுமாறு வற்புறுத்தினார்கள். அத்துடன், முதலமைச்சர் இசுரு தேசப்பிரிய, அமைச்சர் காமினி திலக்கசிறி ஆகியோர் எழுந்து, அவரின் இக்கூற்றுக்கு தமது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.    சபையில் ஆளும் தரப்பு உறுப்பினர்களும்,  அமைச்சர்களும் ஒரே நேரத்தில் உரத்த குரலில் ஒன்றாக,  இக்கூற்றுக்கு எதிராகக் குரல் கொடுத்ததுடன்,  இந்நிலைமையைக் கட்டுப்படுத்த சபைத் தலைவர் சுனில் விஜேரத்ன பெருமுயற்சி எடுத்தார்.    இவ்வேளையில்,  சபையில

මාලදිවයිනෙහි සැකපිට සිරගතකර සිටින ශ්‍රී ලාංකික ලහිරු මධුශංක මහතා නිදහස් කර ගැනීම සඳහා ෆයිසර් මුස්තාෆා මහතා මුලිකත්වය ගෙන සිටියි.

Image
අතිගරු ජනාධිපති මෛත්‍රීපාල සිරිසේන මහතාගේ විශේෂ නියෝජිතයෙකු ලෙස මාලදිවයිනේ අලුතෙන් තේරී පත්වූ ජනාධිපති ඉබ්රාහිම් මොහොමඩ් සෝලිහ් මැතිතුමාගේ දිවුරුම්දීමේ සමාරම්භක උත්සවයට සහභාගී විමට පළාත් සභා , පළාත් පාලන හා ක්‍රීඩා අමාත්‍ය ෆයිසර් මුස්තාෆා මහතා මාලදිවයින බලා පසුගියදා පිටත් විය. එහිදී   මාලදිවයින් හිටපු ජනාධිපති මොහොමඩ් නෂීඩ් මහතා සමග මාලදිවයිනේ ආරක්ෂිත මෆුෂි බන්ධනාගාරයේ වසර තුනක් තිස්සේ සිර භාරයට ගෙන සිටි ලහිරු මධුශංක මන්කන්කන්ද මහතා බැලීමට අමාත්‍යවරයා කටයුතු කළෙය. ඔහු නිදහස් කර ගැනීම සඳහා දැනටමත් ආරම්භ කර ඇති සාකච්ඡා දිගටම කරගෙන යාමට ෆයිසර් මුස්තාෆා අමාත්‍යතුමා කටයුතු කරණ ලදි. 2015 ඔක්තෝබර් 23 වන දින ,   ලහිරු මධුශංක මහතා   මාලදිවයින් හිටපු ජනාධිපති අබ්දුල්ලා යමීන් අබ්දුල් ගයූම් ඝාතනය කිරීමට කුමන්ත්‍රණය කිරීමේ චෝදනාවකට   අත්අඩංගුවට ගෙන තිබේ. 2016 සැප්තැම්බර් මාසයේ සිට නඩු විභාගයකින් තොරව රඳවා තබාගෙන සිටි අතර ඔහුගේ සිරගත කිරීම සියලු ශ්‍රී ලාංකිකයන්ගේ අවධානයට ලක් විය. ලහිරු මධුශංක මහතා හට පසුගිය වසර තුනක කාලය පුරාවට සාධාරණ නඩු විභාගයක් පැවැත

முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் திணைக்களம் சமூகத்தின் பலம்மிக்க ஒரு நிறுவனமாக இயங்க சகல சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்!

Image
அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவிப்பு  ============================== ========================== முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் திணைக்களம் சமூகத்தின் பலம்மிக்க ஒரு நிறுவனமாக மாற்ற வேண்டிய தேவையும் - பொறுப்பும் தனக்கு இருப்பதாகவும், அதற்கு தேவையான சட்டரீதியான சகல நடவடிக்கைகளையும் வெகுவிரைவில் முன்னெடுக்கவுள்ளதாக விடயப்பரப்புக்கு பொறுப்பான நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.  அத்துடன், முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் திணைக்கள கட்டிடத்தின் மிகுதியுள்ள 6 மாடிகளின் நிர்மாணப் பணிகளை துரிதப்படுத்துவதாகவும் அதில் அமையவுள்ள கேட்போர் கூடம் சர்வதேசதரம் வாய்ந்ததாக அமைக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.  தேசிய மீலாத் விழாவை முன்னிட்டு வசந்தம் தொலைக்காட்சியின் ‘தலை வாசல்’ நிகழ்ச்சிக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  அவர் அதில் மேலும் கூறியதாவது:-  ‘இலங்கை போன்ற பல்லின மக்கள் வாழ்கின்ற நாட்டில் தேசிய மீலாத் விழாவினை பல தசாப்த்தங்களாக இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வருகின

விஷத்தன்மை வாய்ந்த போதைப் பொருட்களை ஒழிக்க கம்பஹாவில் விசேட திட்டம்

Image
( மினுவாங்கொடை நிருபர் )    ஹெரோயின் உட்பட விஷத்தன்மை வாய்ந்த போதைப் பொருட்கள் தொடர்பில் தகவல்களைப்  பெற்றுக்கொள்வதற்காக, கம்பஹா பொலிஸ் தலைமையகத்தில் விசேட சிறப்பு தகவல் மத்திய நிலையம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.    பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தரவின் பூரண மேற்பார்வையின் கீழ், குறித்த விசேட போதைப் பொருள் தடுப்பு தகவல் மத்திய நிலையம் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக, மேல் மாகாண வடக்குப் பிராந்திய  பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்தார்.    கம்பஹா பொலிஸ் தலைமையகத்தின் ஏற்பாட்டில்,  "நேரடியாகக் கூறவும்" எனும் தலைப்பில், (18) ஞாயிற்றுக்கிழமை, சட்டவிரோத போதைப் பொருள் பாவனை தொடர்பிலான செய்தியாளர் மாநாடு, கம்பஹா சாம மகா விகாரையில்  இடம்பெற்றது.    கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த, அனைத்து ஊடகங்களையும்  பிரதிநிதித்துவப்படுத்தும் 50 பிராந்திய ஊடகவியலாளர்களுக்கும் மேற்பட்டோர் பங்குபற்றிய  இந்நிகழ்வில்,  பிரதம பேச்சாளராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, பிரதிப் பொலிஸ் மா அதிபர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். பிரதிப் பொலிஸ் மா அதிபர் மேலும் இங்கு விளக்கமளிக்கையில்,

லஹிரு மதுசானின் விடுதலைக்காக களமிறங்கியுள்ள அமைச்சர் பைஸர் முஸ்தபா

Image
லஹிரு மதுசானின் விடுதலைக்காக களமிறங்கியுள்ள அமைச்சர் பைஸர் முஸ்தபா --------------------------------------------------------- ( ஐ. ஏ. காதிர் கான் ) மாலை தீவு  சிறையில் உள்ள லஹிரு மதுசான் என்ற சிங்கள இளைஞரை விடுதலை செய்ய, மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பைஸர் முஸ்தபா உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.    மாலை தீவின் புதிய ஜனாதிபதியாக இப்றாஹீம் மொஹமட் சோலியின் பதவிப்பிரமாண வைபவத்தில் கலந்து கொள்வதற்காக (16)  வெள்ளிக்கிழமை  மாலைதீவுக்குச்  சென்றவேளையிலேயே அமைச்சர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.    லஹிரு மதுசான் (27 வயது) எனும் இவ்விளைஞர், மாலைதீவிலுள்ள மாபுசி சிறைச்சாலையில் 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 23 ஆம் திகதி முதல், சுமார் மூன்று வருட காலமாக  சிறைவாசம் அனுபவித்து வருகின்றார்.    முன்னாள் ஜனாதிபதி அப்துல்லா யாமீன் அப்துல் கையூமை கொலை செய்ய முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே, அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.    மூன்று வருட கால கட்டத்திற்குள்,  இவருக்கு சிறையில் எதுவித  பிணையோ அல்லது அவகாசங்களோ வழங்கப்படாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எவரிடமும் சரணாகதி அடையவில்லை; மஹ்ரூப் எம் பி திட்டவட்டம்

Image
அரசியலமைப்புச் சட்டத்தை பிழையான வழியில் கையிலெடுத்து , நிறைவேற்று அதிகாரம் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொண்டிருப்பதனாலேயே ஜனநாயகத்தை நிலைநாட்ட விரும்பும் கட்சிகளுடன் குறிப்பாக சிறுபான்மைக் கட்சிகளுடன் இணைந்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் போராடி வருவதாக அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் அப்துல்லாஹ் மஹ்ரூப் எம் பி தெரிவித்தார் . ஜனநாயகத்துக்காக குரல் கொடுத்துவரும் சிறுபான்மை தமிழ் , முஸ்லிம் கட்சிகளுடன் இணைந்து நீதிக்காகவும் நியாயத்துக்காகவும் நாம் போராடி வருவதை திரிபுபடுத்தி , எமது கட்சி தமது கொள்கைகளை தூக்கி எறிந்துவிட்டு , ஏனைய கட்சிகளுடன் இரண்டறக் கலந்து விட்டது – சங்கமித்து விட்டது – தேர்தல் கூட்டுக்காக ஒன்றித்து விட்டது என்று எவரும் நினைக்கத் தேவையில்லையென்றும் அவர் குறிப்பிட்டார் . அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் இவ்வாறான விடயங்களில் மிகவும் தெளிவான நிலைப்பாட்டுடனும் உறுதியுடனும் இருப்பதாக அப்துல்லாஹ் மஹ்ரூப் எம் பி தெரிவித்தார் . கிண்ணியாவில் இடம்பெற்ற கட்சியின் ஆதரவா