இந்தியாவில் நடைபெறவுள்ள சர்வதேச இளைஞர் மாநாட்டில் கிழக்கு மாகாண பிரதிநிதியாக சம்மாந்துறை நிப்ராஸ் பங்கேற்பு

இந்தியாவில் நடைபெறவுள்ள சர்வதேச இளைஞர் மாநாட்டில் 
கிழக்கு மாகாண பிரதிநிதியாக சம்மாந்துறை நிப்ராஸ் பங்கேற்பு
====================================================


இந்தியாவில் நடைபெறவுள்ள சர்வதேச இளைஞர் மாநாடு மற்றும் இளைஞர் பரிமாற்ற நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் இலங்கை குழுவில் கிழக்கு மாகாணப் பிரதிநிதியாக சம்மாந்துறையைச் சேர்ந்த முஹம்மட் நிப்ராஸ் தெரிவாகியுள்ளார். 
இளைஞர் விவகார அமைச்சின் கீழ் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் இக்குழு எதிர்வரும் ஒக்டோபர் 10ஆம் திகதி புதன்கிழமை இந்தியா நோக்கி பயணிக்கவுள்ளதுடன் 8 நாட்கள் அங்கு தங்கியிருந்து பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளது.  
26 பேர் கொண்ட இக்குழுவில் இடம்பெற்றுள்ள மூன்று முஸ்லிம்களில் கிழக்கு மாகாண பிரதிநிதியாக சம்மாந்துறைச் சேர்ந்த நிப்ராஸ் தெரிவாகியுள்ளார். தொழில்நுட்ப பொறியியலாளரான இவர் நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சில் பணியாற்றி வருகின்றார். 
அத்துடன், சம்மாந்துறை கைன்ட்ஸ் 21 இளைஞர் கழகத்தின் தலைவராகவும், சம்மாந்துறை பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் கலாச்சார பிரிவுக்கான அமைப்பாளராகவும் செயற்படுகின்ற இவர் சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்