உடல் உறவுக்காக நடக்கும் கள்ள திருமணங்கள்.

லண்­டனைச் சேர்ந்த இளைஞர் ஒரு­வரை இந்­தியா சென்று திரு­மணம் செய்­துள்ளார். இவர்களுக்கு இடையே பேஸ் புக் மூலம் பழக்கம் இருந்துள்ளது. கணவர் லண்டன் சென்று, மனைவிக்கு விசா எடுப்பதாக கூறி காலத்தை இழுத்தடிப்பு செய்து வந்துள்ளார். இதேவேளை இவர்­க­ளுக்கு ஒரு ஆண் குழந்­தையும் பிறந்­துள்­ளது.
இந்­நி­லையில் கணவன் ஏற்­க­னவே திரு­மணம் செய்­தவர் என்­பது தெரி­ய­வந்­ததன் கார­ண­மாக இரு­வ­ருக்கும் இடையில் கருத்து முரண்­பா­டுகள் ஏற்­பட்டு கடந்த 5 மாதங்­க­ளாக குறித்த யுவதி கண­வ­னு­ட­னான தொடர்பை துண்­டித்­துள்ளார். இதன்­போது கணவன் தனது குழந்­தையை தரு­மாறு மிரட்­டி­ய­துடன், குழந்­தையை கடத்­துவேன் எனவும் தொலை­பே­சியில் மிரட்­டி­யுள்­ள­தாக பொலிஸ் முறைப்­பாட்டில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
இந்த நிலையில் அதி­கா­லையில் தாயா­ருடன் குழந்தை உறங்கிக் கொண்­டி­ருந்த போது வான் ஒன்றில் வந்த 6 இற்கும் மேற்­பட்டோர் வீட்டு கதவை உடைத்து உள்ளே நுழைந்து உறங்கிக் கொண்­டி­ருந்த குழந்­தையை தூக்கிச் சென்­றுள்­ளனர் என அதிர்வு இணையம் மேலும் அறிகிறது.
குழந்தை கடத்­தப்­பட்டு சிறிது நேரத்தில் லண்­டனில் உள்ள கணவன் தொலை­பே­சியில் அழைப்பை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்தார். இதனால் இந்தக் கடத்தல் தனது கண­வனால் திட்­ட­மிட்டு மேற்­கொள்­ளப்­பட்­ட­தாக மனைவி குற்றம் சாட்­டி­யுள்ளார். 8 மாத ஆண் குழந்­தை­யான வானிஷன் எனும் குழந்­தையே இவ்­வாறு கடத்­தப்­பட்­டவர் ஆவார்.
இது தொடர்பில் வவு­னியா பொலி­சா­ருக்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து தடவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்களின் உதவியுடன் வவுனியா பொலிசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். சிக்குவாரா லண்டன் மன்மதன் ? இது தொடர்பாக உங்களுக்கு தகவல் ஏதாவது தெரிந்தால் கீழ் காணும் மின் அஞ்சல் ஊடாக எம்மை தொடர்பு கொள்ளவும்.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்