மோட்டார் சைக்கிளில் சாகசம் காட்டிய இளைஞன் பரிதாபமாகப் பலி…!


இலங்கையில் மோட்டார் சைக்கிளில் பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தும் இளைஞர் ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார்.தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் அத்துருகிரிய நுழைவாயிலுக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
ஹொரனை பிரதேசத்தை சேர்ந்த திலான் பத்திரகே என்ற 23 வயதான இளைஞனே உயிரிழந்துள்ளார்.எதிர் பக்கத்தில் இருந்து வந்த மோட்டார் வாகனத்துடன் இளைஞன் ஓட்டிய மோட்டார் சைக்கிள் மோதியமையினாலேயே விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் காயமடைந்த இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.உயிரிழந்த இளைஞனின் சடலம் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. இளைஞனின் நெஞ்சுப் பகுதியில் ஏற்பட்ட காயமே மரணத்திற்கு காரணம் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்