பெண்கள் டிஜிட்டல் கருவிகளைக் கையாளுதல் பயிற்சிநெறி நீர்கொழும்பில்


( மினுவாங்கொடை நிருபர் )
   "Vibrant Voices"  என்ற தொனிப்பொருளில், கிராமியப்  பெண்களின் பிரச்சினைகளையும் அவர்களது கருத்துக்களையும் அரச ஆட்சியில் உள்வாங்கும் பொருட்டு நான்கு நாள் வீடியோ மற்றும் டிஜிட்டல் ஊடகம் தொடர்பான பயிற்சி நெறி, (20)  நீர்கொழும்பில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
   இந்தப்பயிற்சி நெறிக்கு முதற்கட்டமாக கொழும்பு, பதுளை, மட்டக்களப்பு, பொலன்னறுவை ஆகிய  மாவட்டங்களில் பணியாற்றும் நிறுவனங்களின் 15 பெண்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
   இவர்கள் புதிய ஊடகம், சமூக ஊடகம், இலவச மென் பொருட்கள், வீடியோக்கருவிகளைக் கையாள்தல், நேர்காணலொன்றைச் சிறப்பாகப் பதிவு செய்தல், வீடியோக்களை மாற்றம் செய்தல் போன்ற விடயங்களை,  இந்த நான்கு நாள் பயிற்சி நெறியில் கற்றுக்கொள்ளவுள்ளனர்.
இந்தப்பயிற்சி நெறியின் முடிவின் போது பங்குபற்றுனர்கள், பெண்களின் தேவை மற்றும் பிரச்சினைகள் தொடர்பான 30 வீடியோக்  கதையாக்கங்களை உருவாக்கவுள்ளனர். இதற்கான கள ரீதியான உதவிகளையும்,  வழிகாட்டல்களையும் இலங்கை அபிவிருத்தி ஊடகவியலாளர் நிறுவனம் வழங்கவுள்ளது.
   இந்தப் புதிய செயற்றிட்டமானது, சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க நிறுவனத்தின் (USAID) நிதியுதவியுடனும் IREX நிறுவனத்தின் வழிகாட்டலின் கீழ் SDJF நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்படுகின்றது

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்