மூன்று பொலிஸ் அதிகாரிகளின் பதவியை பறித்த பெண்..!!

ஹிக்கடுவ பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபரான பெண் ஒருவர் தப்பிச்சென்ற சம்பவம் தொடர்பில் மூன்று பொலிஸ் அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (30) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பொலிஸ் பரிசோதகர் மற்றும் இரு பொலிஸ் கான்ஸ்டபிள்களே இவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஹெரோயின் 2,600 மில்லிகிராம் வைத்திருந்த குற்றத்திற்காக குறித்த பெண் கடந்த 29 ஆம் திகதி கைது செய்யப்பட்டு பொலிஸ் பாதுகாப்பில் இருந்த போதே அவர் தப்பிச்சென்றுள்ளார்.
குறித்த பெண்ணை கைது செய்வதற்காக இரு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் ஹிக்கடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments

popular posts

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் தாதியர்கள் போராட்டம்

Allocation of Varnam Tv Ramazan Ifthar programme not suitable - Al Haj M.B.Hussain Farook

සායින්දමරුදු ජනතාව පෙරමුණට සහයෝගය ලබාදීමට ඉදිරිපත්විය යුතුය