பாடசாலை மாணவர்களுக்கு சீருடை பண வவுச்சர்கள் சில வாரங்களில்


( மினுவாங்கொடை நிருபர் )
   பாடசாலை மாணவர்களுக்கான அடுத்த ஆண்டு சீருடைக்கான பண வவுச்சர்களை விநியோகிக்கும் பணி, எதிர்வரும் சில வாரங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
   இம்முறை இதன் பெறுமதி அதிகரிக்கப்பட்டுள்ளதாக, கல்வி இராஜாங்க அமைச்சின் செயலாளர் திஸ்ஸ ஹேவாவித்தாரண தெரிவித்துள்ளார்.
   பாடசாலை மாணவர்களின் சீருடைக்குத்  தேவையான துணியின் பெறுமதியைக்  கவனத்திற்  கொண்டு,  அதற்கான விலையைத்  தீர்மானிப்பதற்கான குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
   இந்தக் குழு,  அனைத்து மாவட்டச்  செயலாளர் பிரிவு மட்டத்தில் விலைகளைப்  பெற்று, இறுதி விலையைத்  தீர்மானித்திருப்பதாகவும்,  செயலாளர் தெரிவித்துள்ளார்.
   மூன்றாம் தவணை நிறைவடைவதற்கு முன்னர்,  அனைத்து மாணவர்களுக்கும் இந்த வவுச்சர்கள் வழங்கப்படவிருப்பதாகவும்,  கல்வி இராஜாங்க அமைச்சின் செயலாளர் திஸ்ஸ ஹேவாவித்தாரன மேலும்  தெரிவித்துள்ளார்.

Comments

popular posts

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் தாதியர்கள் போராட்டம்

Allocation of Varnam Tv Ramazan Ifthar programme not suitable - Al Haj M.B.Hussain Farook

සායින්දමරුදු ජනතාව පෙරමුණට සහයෝගය ලබාදීමට ඉදිරිපත්විය යුතුය