அகில இலங்கை விவாதப் போட்டியில் இரண்டாமிடம்

கெக்குணகொல்ல தேசிய பாடசாலை
அகில இலங்கை விவாதப்  போட்டியில் இரண்டாமிடம்
( மினுவாங்கொடை நிருபர் )
   நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சினால்,  சர்வதேச தகவல் அறியும் தினத்தைக்  கொண்டாடும் நோக்கில் நடாத்தப்பட்ட தமிழ் மொழி மூல விவாதப்  போட்டியில்,  கெக்குணகொல்ல தேசியப்  பாடசாலை இரண்டாமிடத்தைப் பெற்றுக் கொண்டது.    இரண்டாமிடத்தைப் பெற்று,  கெக்குணகொல்ல தேசியப்  பாடசாலைக்கு அகில இலங்கை ரீதியில் கௌரவத்தைப்  பெற்றுக் கொடுத்த  எம்.ஐ. இன்ஸாப், எம்.எச்.எப். ஹனா, ஏ.எச்.எப்.  சஹ்னாஸ், யூ.சீ.  திரீனா ஆகிய பாடசாலை  மாணவர்களைக்  கௌரவிக்கும் நிகழ்வு, (28) வெள்ளிக்கிழமை, கொழும்பு -   நெலும் பொக்குண  அரங்கில்,  பிரதமர் ரணில் விக்கிரம சிங்க  தலைமையில் நடைபெற்றது.
   இந்த நிகழ்வில் கெக்குணகொல்ல தேசியப்  பாடசாலையின் அதிபர் முதம்மிர் மற்றும் குளியாப்பிட்டிய பிரதேச சபையின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உப தவிசாளர் ஏம்.சீ.  இர்பான் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Comments

popular posts

சற்றுமுன் தம்புள்ளையில் விபத்து

ACMC + SLMC இணைந்து பணியாற்ற தீர்மானம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் அனுப்பியுள்ள செய்தி