( மினுவாங்கொடை நிருபர் )
அரசியல் அமைப்புச் சபை, இன்று (25) வியாழக்கிழமை ஒன்று கூடவுள்ளதாக, சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார். தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஆயுட்காலம், கடந்த 14 ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ள நிலையில், அந்த ஆணைக்குழுவுக்கான புதிய உறுப்பினர்களைத் தெரிவு செய்வது தொடர்பாக, இதன் போது விரிவாக ஆராயப்படவுள்ளது.
19 ஆவது அரசியலமைப்புச் சீர்திருத்தத்தின் பிரகாரம், புதிய உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் வகையில், தற்போதுள்ள உறுப்பினர்களினாலேயே, குறித்த ஆணைக்குழுவின் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்ல முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

( ஐ. ஏ. காதிர் கான் )
Post a Comment