மொறட்டுவை பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரியின் 142 வருட பழைய மண்டபம் மீள் நிர்மாணம்- அமைச்சர் பைஸர் நடவடிக்கை
( மினுவாங்கொடை நிருபர் )
   மொறட்டுவை - பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரியின் "கலர் நைட்" நிகழ்வில், விளையாட்டுத்துறை அமைச்சர் பைஸர் முஸ்தபா, பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். இதன்போது, கல்லூரியின் 142 வருடங்கள் பழைமை வாய்ந்த பிரதான மண்டபத்தையும் அமைச்சர் பார்வையிட்டார். இம்மண்டபத்தை, எவ்வித மாற்றங்களுமின்றி பழைய கட்டிடக் கலை நயத்தோடு, தொல் பொருள் திணைக்களத்தின் ஊடாக மீண்டும் அதே வடிவமைப்பில் புனர் நிர்மாணம் செய்து தருவதாகவும், அமைச்சர் இதன்போது கல்லூரி அதிபர் உட்பட  நிர்வாகிகளிடம் உறுதியளித்தார்.
    இந்த வருடத்தில், விளையாட்டுத்துறையில் அதி திறமைகளைக் காட்டிய இக்கல்லூரியின் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்குமுகமாக, அமைச்சர் அவர்களைக் கை கொடுத்துப்  பாராட்டியதுடன், அவர்களுக்கான சான்றிதழ்களையும் பரிசில்களையும்,  இது தொடர்பில் இடம்பெற்ற பரிசளிப்பு விழாவின்போது  வழங்கி வைத்தார்.
   அமைச்சரின் பிரதான ஆலோசகரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கே.பி. லிலந்த பெரேரா உள்ளிட்ட பிரமுகர்கள் பலர் இச்சிறப்பு நிகழ்வில் கலந்து கொண்டனர்.
( ஐ. ஏ. காதிர் கான் )

Comments

popular posts

எட்டியாந்தோட்டை சம்பவம்; மஹிந்த அதிரடி உத்தரவு!

காலி, இரத்தினபுரி மாவட்டங்களில் இரு பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் ; இருவர் கைது

மொத்தமாக 4 நியமனங்கள் ஜனாதிபதி யால் வழங்கப்பட்டது.