எல்லோருக்கும் பொதுவிதியான மரணம், நூறுல்ஹக்கை பிரித்துவிட்டது" - மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம்! ஊடகப்பிரிவு- பன்னூலாசிரியர் நூறுல்ஹக் அவர்கள் இறையடி சேர்ந்த செய்தியால், கடும் கவலையடைந்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். அன்னாரின் மறைவு குறித்து அவர் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "எழுத்துப் பணியில் ஓயாது உழைத்துக் கொண்டிருந்த ஒரு நண்பனை நான் இழந்துவிட்டேன். அவரது இடைவௌியால், முஸ்லிம் சமூகத்தின் தனிப்பெரும் திறமையில் வெற்றிடம் ஏற்பட்டுவிட்டது. அரசியல், சமூகவியல், இலக்கிய வௌிகளில் மர்ஹூம் நூறுல்ஹக்கின் ஆளுமைகள் பளிச்சிடுவதை அன்னாரின் படைப்புக்களில் பார்க்க முடியும். முஸ்லிம் பூர்வீகம் பற்றி மிகத் தௌிந்த சிந்தனைகளில் அவர் பணியாற்றியவர். சமூக, அரசியல் தலைமைகளை வழிகாட்டும் அளவுக்கு அவரது சிந்தனைகள் இருந்ததை என்னால் பெருமையுடன் ஏற்றுக்கொள்ள முடியும். கொழும்புக்கு வரும் நேரமெல்லாம் நேரடியாகவோ அல்லது தொலைபேசியிலோ என்னைத் தொடர்புகொள்ளும் அவர், முஸ்லிம் சமூகத்தின் சமகால, நிகழ்கா
இலங்கை மக்களுக்கு கட்சி பேதமின்றி சேவையாற்றுவேன் - அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவிப்பு ( மினுவாங்கொடை நிருபர் ) புதிய அரசாங்கத்தில் இலங்கை மக்களுக்கு எவ்வித கட்சி பேதங்களுமின்றி சேவையாற்றுவேன் என, மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார். அமைச்சர் இது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, புதிய அரசாங்கத்தை, தேவையான நேரத்தில் சரியான தீர்மானம் எடுத்து அமைத்தது மட்டுமல்லாமல், அந்த அரசாங்கத்தில் மீண்டும் என்னை மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் விளையாட்டுத்துறை கெபினட் அமைச்சராக, இலங்கை மக்களுக்கு சேவை செய்வதற்காக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளதை, எனது வாழ்வில் பெரும் பாக்கியமாகக் கருதுகின்றேன். ஜனாதிபதி என்மீது நம்பிக்கை வைத்து, மீண்டும் இப்பொறுப்பை என்னிடம் ஒப்படைத்துள்ளார். இப்பொறுப்பை, விசுவாசத்துடன் தொடர்ந்தும் பேணிப்பாதுகாத்து, இன மத மொழி கட்சி பேதங்களின்றி சேவையாற்றுவேன். நாடளாவிய ரீதியிலுள்ள மாகாண மற்றும