Deputy Minister H M Harees press today his office(அஷ்ரப் ஏ சமத்)

கடந்த வாரமாக  சில விசமிகளும் கடும்போக்கான ஊடகங்களும்  முஸ்லிம்களும் மீதும்  முஸ்லிம் அமைச்சா்கள் மீதும்  ஆயுதம் உள்ளதாக பல்வேறு  பொய்பிரச்சாரங்களை செய்துவருகின்றாா்கள்.  அன்மையில்  முன்னாள்  விடுதலைப் புலி உறுப்பிணா் ஒருவரான இன்பராசா என்பவா் கிழக்கில் உள்ள  முஸ்லிம் அமை்ச்சா்கள் யுத்த காலத்தில் விடுதலைப்போராளிகளிடமிருந்து  முஸ்லீம்களும் முஸ்லிம் அமைச்சா்களும் 
 ஆயுதங்களை வாங்கினாா்கள். கிழக்கில் 5000 ஆயுதம் முஸ்லீமகளிடம் உள்ளது   எனச்  ஊடகங்களில் சொல்லியிருக்கின்றாா். அக் கருத்தினையே மேலும் மெரு கூட்டி தேசிய சுதந்திர முன்னயின் ஊடகப் பேச்சாளா் முஹம்மட் முசம்மிலும்  5000 ஆயுதங்களை முஸ்லீம்களுக்கு விற்கப்பட்டுள்ளனவெனவும்  ஊடகங்களில் அவரும்  கருத்து தெரிவித்துள்ளாா். அதே போன்று  சர்வதேச மற்றும் உள்ளுார் ஊடகங்கள் கபினட் அமைச்சா் பைசா் முஸ்தபாவை பெயரை பயண்படுத்தி  அவரது பெயருக்கும் இழுக்கு ஏற்படுத்துகின்றனா். இவ்விடயங்களுக்கு பின்னால் உள்ள உள்ள சக்திகள் யாா் ? என பொலிசாா், பாதுகாப்புப்  படையினா்  உரிய விசாரனை செய்து உண்மையை தெளிவுபடுத்தல் வேண்டும் என    என   அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி அபிவிருத்தி பிரதியமைச்சா் எச்.எம். ஹரிஸ் தெரிவித்தாா்.

இன்று(4) அவரது அமைச்சில் நடைபெற்ற விசேட ஊடக மாநாட்டிலேயே மேற்கண்ட தகவல்களைத் தெரிவித்தாா்.
பிரதியமைச்சா் ஹரிஸ் தொடா்ந்து கருத்து தெரிவிக்கையில் - 

மேற்படி சம்பந்தப்பட்ட வா்களது கருத்துக்கள் ,  பேச்சுக்கள்  மற்றும் அமைச்சா் பைசா் முஸ்தாவின் உறவினா் மாணவா் பற்றிய சில ஊடகங்களது செய்திகள் அறிக்கைகள்.   இந்த நாட்டில் வாழும் முஸ்லிம்கள் மற்றும் அமைச்சா்களுக்கு  வேண்டுமென்றே தி்ட்டமிட்டு  ஊடகங்களில் திரிவு படுத்தி சொல்லும் பேச்சுக்களை பொலிசாா் விசாரனை செய்தல் வேண்டும். இந்த நாட்டுக்கு கடந்த ஆட்சியிலும் யுத்த காலத்திலும் இந்த நாட்டுக்காக முஸ்லீம்கள் என்றும் ஆதரவாகவும் வடகிழக்கு வாழ் முஸ்லீம்கள் பல உயிா்த் தியாகங்களை  செய்துள்ளாா்கள்.   இந்த யுத்தினால் வெகுவாகப் பாதிக்கப்பட்டவா்கள் முஸ்லீம்கள் நானும் மாணவப் பருவத்தில் இருந்து இந்த யுத்த காலத்தில் பாதிக்க்பபட்டவன்.  ஒரு போதும் முஸ்லிம்கள் இந்த நாட்டின் இறைமைக்கு  பங்கம் விளைவிக்காதவா்கள். எனச் சொல்லி வைக்க விரும்புகின்றேன். 


 இதுவரை பொலிஸ் மாஅதிபா் அல்லது பாதுகாப்புச் செயலாளா்கள் மேற்படி நபா்களுக்கு எதிராக எந்த நடவடிக்கை எடுத்தாகத் தெரியவில்லை. அடுத்த ஒரு சில தினங்கள் இவ் விடயம் பற்றி  நாங்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளைச் சந்தித்து பேசவுள்ளோம். அத்துடன் பாராளுமன்றத்திலும் ் இவ்விடயம் பற்றி நான்  பேசவுள்ளேன். 

 இன்பராஜா, அல்லது முஹம்மத் முசம்மிலோ பேசிய பேச்சுக்ள்  மூலம் அவா்களை கைது செய்து விசாரனை செய்து கிழக்கு மாகாணத்திலோ அல்லது கிழக்கு அமைச்சா்களிடம் ஒரு ஆயுதமேனும் கண்டுபிடித்தல் வேண்டும்.ள அல்லது உரிய ஆதாராம் இல்லாமல் இவா்கள் இந்த நாட்டில் வாழும் 20 இலட்சம் முஸ்லீகளுக்கு எதிராக பேசும் பேச்சு ஊடகங்களை பெரிதாக தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.  இதனால் இந்த நாட்ல் வாழும் முஸ்லீம்களை மீள ஒரு சந்தேகக் கண்கொண்டு பாா்க்கின்றாா்கள்.  இவா்கள் இவ்வாறு பேசுவதற்கு பின்னாள் உள்ள சக்தி என்ன் என்பததை பாதுகாப்பு படையினரும் அரசாங்கமும் உடன் வெளிப்படுத்தல் வேண்டும்.  

அமைச்சா் பைசா் முஸ்தாவின்  உறவினரான  அவரது மனைவியின் உறவினரை பெயரை பயண்படு்த்தி நாளாந்தம் அமைச்சரின் பெயருக்கும் களங்கம் விளைவிக்கின்றனா். அவா் ஒரு மாணவா்  அவுஸ்திரேலியா பல்கலைக்கழகத்தில் சந்தேகத்தின் பெயரிலேயே கைது செய்யப்பட்டுள்ளா். அவருக்குரிய விசாரனை நடைபெற முன்னா் அவரை ஒரு பயங்கரவாதியாக சர்வதேச உள்ளுர் ஊடகங்கள் அமைச்சரின் பெயருக்கு கலங்கம் விளைவிக்கின்றனா். இதனை நான் வன்மையாக கண்டிக்கின்றேன் எனவும் பிரதியமைச்சா் ஹரிஸ் கருத்து தெரிவித்தாா்

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்