க்oogle+
இறுதி யுத்தத்தின் இறுதி வாரங்களில் நாட்டின் உயர் மட்டங்கள் வெளிநாட்டுக்கு ஓடிய போது தான் மட்டுமே பதில் பாதுகாப்பு அமைச்சராக இருந்து நாட்டை வழிநடத்தினேன் அமைச்சர் மனோ கணேசனையும் வைத்துக்கொண்டு ஐ நாவில் துணிச்சலாக பேசிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவுக்கு உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது பற்றி ஜனாதிபதிக்கு அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது,
ஜனாதிபதியின் இக்கருத்தானது பலருக்கும் அதிர்ச்சி கொடுத்தாலும் இந்த உண்மையை பகிரங்கமாக சொன்னமை மிகப்பெரிய விடயமாகும்.
இறுதி யுத்தத்தில் பிரபாகரன் கொல்லப்பட்டதால் அதற்கு காரணமான இராணுவத்தையும் மஹிந்த, கோட்டாபயவையும் பழி வாங்கும் எண்ணமே தமிழ் கூட்டமைப்பு, மனோ கணேசன் போன்றோரிடம் இது வரை இருந்து வந்தது. ஆனால் ஜனாதிபதியின் கருத்தின் மூலம் நமது ஜனாதிபதியே இந்த யுத்த வெற்றிக்கு பிரதான காரணம் என தெரிகிறது.
அது மட்டுமல்லாமல் பயங்கரவாதத்தை ஒழித்தமைக்காக இராணுவத்தையோ, மஹிந்த, கோட்டா போன்றோரையே தண்டிக்க இடமளிக்க முடியாது என்ற அர்த்தத்தில் இத்தனை தைரியமாக பேசி தன் பொறுப்பில் அனைத்தையும் எடுத்த உலகில் ஒரே ஜனாதிபதி நமது ஜனாதிபதிதான். அந்த வகையில் இராணுவத்தை விட்டுக்கொடுக்காத ஜனாதிபதியின் தேசப்பற்று பெரிதும் பாராட்டுக்குரியதாகும். இனியும் தமிழ் அரசியல்வாதிகள் ஐ நா என்றும் போர்க்குற்றம் விசாரிக்கப்பட வேண்டும் என்றும் மக்களையும் சர்வதேசத்தையும் ஏமாற்ற முடியாது என்பதும் தெளிவாகியுள்ளது என உலமா கட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment