மஹிந்தவின் ஆட்சியில் ஊடகங்கள்

ஒரு நண்பரின் கேள்விக்கு பதிலானபோது...!

மஹிந்தவின் ஆட்சியில் இந்த ஊடகங்கள் அவரது ஆட்சிக்கு எதிராக எழுதியதினால்தான் அவர் தோற்றார் அப்படியென்றால் ஊடக சுதந்திரம் எவ்விடத்தில் அடக்கப்பட்டது..

உதாரணத்துக்கு அளுத்கமை பிரச்சினையை இந்த சக்தி ரீவி, வீரகேசரி, தினக்குரல் போன்ற இன்னும் பல ஊடகங்களும்; இணையதளங்களும் ஒன்றுக்கு பத்து தரம் அதனை பல கோணங்களில் பல நாட்களாக தலையங்கம் போட்டு எழுதிக்கொண்டே இருந்தார்கள். அதே நேரம் இந்த ஆட்சியில் நடந்த கிந்தோட்டை,  அம்பாரை,  திகன போன்ற இடங்களில் நடந்த விடயங்களை ஓரமாக எழுதிவிட்டும்; பேசிவிட்டும் அதன் சரித்திரத்தை மூடி மறைத்து விட்டார்கள்.

திகன சம்பவத்தின் போது கொல்லப்பட்ட ஒரு இளைஞனைப்பற்றி யாரும் வாயே திறக்கவில்லை. அதனைப்பற்றி சக்தி ரீவிக்காரனிடம் ஒருவர், ஏன் அந்த மரணசம்பவத்தை நீங்கள் சொல்லவில்லை என்று கேட்டபோது.  அப்படிக்காட்டினால் கலவரம் பல இடங்களுக்கும் பரவிவிடும் அதன் காரணமாகவே நாங்கள் அதனை போடவில்லை என்று கதையளந்தார்கள். அப்படியென்றால் அளுத்கமையில் நடந்த விடயத்தையும் இப்படி மறைத்திருக்கலாமே என்றதற்கு வாயைச் சப்பினார்கள். இப்படிப் பட்ட ஊடகங்களா மஹிந்த காலத்தில் அடக்கப்பட்டது?
வெளிநாட்டு ஏஜண்டுகளிடம் காசைப் பெற்றுக்கொண்டு என்ன பாட்டைப்பட்டானுகள் அதனைக்கேட்பதற்கு யாருக்கும் இடுப்பில் பலம் இருக்கவில்லை..

இன்று கூட இந்த ஊடகங்கள் இனவாதத் தீயைத்தானே பரப்பி வருகின்றார்கள். கபாயா பிரச்சினை, முஸ்லிம்களிடம் ஆயுதம் உள்ளது, வலத்தாப்பிட்டியில் முஸ்லிம்கள் தமிழ் மக்களை இஸ்லாத்தில் எடுப்பதற்காக வன்முறையில் இறங்கியுள்ளார்கள், காத்தான்குடியில் முஸ்லிம்கள் கோவிலை உடைத்துவிட்டார்கள் என்று முன்பின் யோசியாமல் கொடூரமான தலையங்கங்களை போட்டு இனவாத தீயை பரப்புவதை கண்டுகொள்ளாமல் இருக்கும் இந்த நல்லாட்சியில்தான் ஊடக சுதந்திரம் இருக்குது என்று நம்பினால் அதைவிட மோடைத்தனம் ஒன்றுமேயில்லை.

ஆகவே ஊடகச் சுதந்திரம் என்பது அவர்களின் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளத்தான் பயன்படுத்துகின்றார்களே தவிர மற்றொன்றுக்கும் அல்ல என்பதை நாம் புரிந்து கொள்ளாதவரை நமக்கு சாவுமணிதான்...
-முனைமருதவன்♥-

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்