முஸ்லிம் திரும‌ண‌ ச‌ட்ட‌த்திருத்த‌ அறிக்கைக‌ளை ஒன்றாக்கும் முய‌ற்சியில் வை எம் எம் ஏ.


முஸ்லிம் த‌னியார் திரும‌ண‌ ச‌ட்ட‌த்தில் திருத்த‌ம் கொண்டு வ‌ருவ‌தற்காக‌ நீதி அமைச்சால் நிய‌மிக்க‌ப்ப‌ட்ட‌ குழுவின‌ர் இரண்டாக‌ பிரிந்து வெவ்வேறு அறிக்கைகளை கைய‌ளித்துள்ள‌தால் இவ்விரு அறிக்கைக‌ளிலும் க‌ருத்து வேறுபாடுள்ள‌ விட‌ய‌ங்க‌ளை ம‌ட்டும் க‌ருத்தில் எடுக்குமுக‌மாக‌ பொதும‌க்க‌ளுக்கான க‌ருத்த‌ர‌ங்கொன்றை அ.இ.வை. எம். எம். ஏ கொழும்பில் ஏற்பாடு செய்துள்ள‌து.
இது ச‌ம்ப‌ந்த‌மாக‌ விள‌க்க‌ம‌ளிக்கும் ஊட‌க‌ மாநாடு இன்று வை எம் எம் ஏயின் ஏ.எம். ஏ அஸீஸ் ம‌ண்ட‌ப‌த்தில் ந‌டை பெற்ற‌து.
இத‌ன் போது ச‌ட்ட‌த்த‌ர‌ணி அஷ்ர‌ப் ரூமி தெரிவிக்கையில்

முஸ்லிம் திரும‌ண‌ ச‌ட்ட‌த்தில் செய்ய‌ப்ப‌ட‌ வேண்டிய‌ திருத்த‌ங்க‌ள் ப‌ற்றி சிவில் இய‌க்க‌ங்க‌ளிட‌ம் கேட்டுக்கொண்ட‌த‌ற்கிணங்க‌ வை எம் எம் ஏயும் அறிக்கை வ‌ழ‌ங்கியுள்ள‌து. இது போல் நாற்ப‌து அமைப்புக்க‌ளும் அறிக்கை ச‌ம‌ர்ப்பித்துள்ள‌ன‌.

இவ‌ற்றின் ப‌டி நீதி அமைச்சரால் முன்னாள் நீதிய‌ர‌சர் த‌லைமையில் அமைக்க‌ப்ப‌ட்ட‌ குழு இவ‌ற்றை ஆராய்ந்து அறிக்கையொன்றை த‌யாரித்துள்ள‌து. அதில் சில‌ விட‌ய‌ங்க‌ளில் உட‌ன்ப‌டாத‌ அதே குழுவின் சில‌ உறுப்பின‌ர்க‌ள் ஜ‌னாதிப‌தி ச‌ட்ட‌த்த‌ர‌ணி பாயிஸ் முஸ்த‌பா த‌லைமையில் ம‌ற்றுமொரு அறிக்கை ச‌ம‌ர்ப்பித்துள்ள‌து.
இந்த‌ இர‌ண்டு அறிக்கைக‌ளும் சுமார் இருநூற்றுக்கு மேற்ப‌ட்ட‌ ப‌க்க‌ங்க‌ளிலும் இருந்த‌ போதும் சுமார் ப‌த்து விட‌ய‌ங்க‌ளில் ம‌ட்டுமே முர‌ண்பாடு உள்ள‌து.

மேற்ப‌டி ப‌த்து விட‌ய‌ங்க‌ளை ம‌ட்டும் பொதும‌க்க‌ளுக்கு தெளிவு ப‌டுத்தி இரு அறிக்கைக‌ளையும் ஒரு அறிக்கையாக்கும் முய‌ற்சியை வை எம் எம் ஏ மேற்கொண்டுள்ள‌து. இத‌ற்காக‌வே எதிர் வ‌ரும் ஞாயிற்றுக்கிழ‌மை இது ச‌ம்ப‌ந்த‌மாக‌ முழு நாள் க‌ருத்த‌ர‌ங்கு ஏற்பாடு செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌து என‌ தெரிவித்தார்.
ஊட‌க‌ த‌ர‌ப்பில்  அல்ஜ‌ஸீரா ல‌ங்கா ப‌ணிப்பாள‌ரால் இங்கு கேள்வி எழுப்புகையில், மேற்ப‌டி அறிக்கையை த‌யாரித்த‌ குழு முஸ்லிம் திரும‌ண‌ ச‌ட்ட‌த்தில் மாற்ற‌ம் ஏற்ப‌டுத்த‌ வேண்டும் என்ப‌தை ஏற்றுக்கொண்ட‌ குழுவாகும். இந்த‌ இருத‌ர‌ப்பாரையும் ஒற்றுமைப்ப‌டுத்த‌ முணையும் நீங்க‌ள், முஸ்லிம் திரும‌ண‌ ச‌ட்ட‌த்தில் கையை வைக்க‌வே கூடாது என‌ சொல்லும் த‌ர‌ப்பை குறிப்பாக‌ இதில் அதிக‌ம் உல‌மாக்க‌ள் கொண்ட‌ இத்த‌ர‌ப்பை ஏன் க‌வ‌னிக்க‌வில்லை என‌ கேட்க‌ப்ப‌ட்ட‌து.

அத‌ற்கு ப‌தில் அளிக்கையில் ச‌லீம் ம‌ர்சூப் த‌லைமையிலான‌ குழுவில் உல‌மாக்க‌ள் இல்லை என்றும் பாயிஸ் முஸ்த‌பா த‌லைமையிலான‌ குழுவில் அ.இ. ஜ‌ம்மிய‌துல் உல‌மாவின் த‌லைவ‌ர், செய‌லாள‌ர், க‌லாநிதி ஷுக்ரி ஆகியோர் உள்ள‌ன‌ர் என‌ ச‌ட்ட‌த்த‌ர‌ணி அஷ்ர‌ப் ரூமி  தெரிவித்தார்.

மேற்ப‌டி நிக‌ழ்வில் வை எம் எம் ஏயின் தேசிய‌ பொது செய‌லாள‌ர் ச‌ஹீட் எம். றிஸ்மி, த‌ற்போதைய‌ தேசிய‌ த‌லைவ‌ர், முன்னாள் த‌லைவ‌ர் கே.என். டீன் ஆகியோர் உட்ப‌ட‌ மேலும் சில‌ உறுப்பின‌ர்க‌ளும் க‌ருத்துக்க‌ளை தெரிவித்த‌ன‌ர். 

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்