உலமா கட்சி உட்பட பலரின் கோரிக்கைக்கு கிடைத்த வெற்றி

இஸ்லாம் சமய ஆசிரியர் நியமன வயதெல்லை 45ஆக அதிகரிப்பு.

மௌலவி ஆசிரியர் வயதெல்லையை 45 ஆக அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சின் கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்தார் மௌலவி ஆசிரியர் நியமனம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளளது.

அந்த ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

எமது தொடர்ச்சியான வேண்டுகோளை அடுத்து பல வருடங்களின் பின்னால் எமது அமைச்சால் சமய ஆசிரியர்களுக்கான விண்ணப்பம் கோரப்பட்டது.

எனினும் இந்த நியமனத்தின் வயதெல்லை 35 ஆக காணப்பட்ட காரணத்தினால் இதற்கு முன்னைய அரசின் காலத்தில் வழங்கப்பட்ட நியமனத்தில் காணப்பட்ட குளறுபடிகளால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட பலர் இந்த நியமனத்துக்கு விண்ணப்பிக்க முடியாத சூழ்நிலை காணப்படுவதால் இதன் வயதெல்லையை 45 ஆக அதிகரிக்குமாறு என்னிடம் இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் உள்ளிட்ட பல சிவில் அமைப்புக்கள் கோரிக்கைகளை முன்வைத்திருந்தன.

இது தொடர்பாக நான் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்திடம் விடுத்த வேண்டுகோளுக்கமைய இந்த நியமனத்துக்கான வயதெல்லை 45 ஆக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது இது தொடர்பான வர்த்தமானி விரைவில் வெளியிடப்படும்

கிழக்கு மாகாணம் உள்ளிட்ட சில மாகாணங்கள் தமது மாகாணங்களில் நிலவும் வெற்றிடங்கள் தொடர்பான விபரங்களை எம்மிடம் சமர்பிக்கமையினால் அந்த மாகாணங்களுக்காக விண்ணப்பங்கள் கோரப்படவில்லை எனவே அந்த மாகாண சபைகளிடம் இருந்து உரிய தரவுகளை பெற்று அந்த மாகாணங்களுக்கும் விரைவில் விண்ணப்பம கோர எதிர்பார்த்துள்ளோம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே வேளை மேற்படி சமய ஆசிரியர் நியமன வயதெல்லையை கூட்ட வேண்டும் என நாட்டுக்கு முதலில் தெரிவித்தது உலமா கட்சியாகும். அத்தோடு இது சம்பந்தமாக ஜனாதிபதியின் கவனத்துக்கும் கொண்டு வந்தது. அதோ போல் அமைச்சர் ரிசாத் பதியுதீன் மற்றும் பிரதி அமைச்சர் ஹரீஸ் ஆகியோரும் இதற்காக குரல் கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

popular posts

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் தாதியர்கள் போராட்டம்

Allocation of Varnam Tv Ramazan Ifthar programme not suitable - Al Haj M.B.Hussain Farook

සායින්දමරුදු ජනතාව පෙරමුණට සහයෝගය ලබාදීමට ඉදිරිපත්විය යුතුය