தோரகொடுவ மக்கள் சந்திப்பும் அபிவிருத்தி மற்றும் வட்டார அமைப்பு உருவாக்கும் நிகழ்வும்.


றிம்சி ஜலீல்-

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் கௌரவ அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் ஆலோசனையின்பேரில் பன்டுவஸ்நுவர பிரதேசசபை தோரகொடுவ வட்டாரத்துக்கான அபிவிருத்தி சம்மந்தமான கூட்டமும் வட்டார அமைப்பு ஆரம்பித்தலும் வாட்டார அமைப்பாளர் முன்னைய நாள் சமூர்த்தி உத்தியோகத்தர் ஜனாப் அன்வர் அவர்களின் ஏற்பாட்டில் குருநாகல் மாவட்ட மக்கள் காங்கிரஸ் அமைப்பாளரும் மாகாணசபை உறுப்பினரும் சதொச பிரதித்லைவருமான எம்.என்.நஸீர் (MA) தலைமையில் இன்று (02) நடைபெற்றது.


இந்த நிகழ்வின் போது அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் 20,000,000.00 ரூபா செலவில் கட்டப்படும் தோரகொடுவ முன்பள்ளி பாடசாலை கட்டிட வேலைகள் மேற்பார்வை செய்யப்பட்டது.

இந்த நிகழ்வில் மக்கள் காங்கிரஸ் குளியாப்பிடிய பிரதேச சபை உபதவிசாளர் இர்பான்,குளியாப்பிடிய பிரதேசசபை உறுப்பினர் சபீர், குருநாகல் மாவட்ட மக்கள் காங்கிரஸ் கல்வி பொறுப்பாளர் ரியாஸ், நவமனி ஊடகவியலாளர் அஸாம், மத்திய குழு உறுப்பினர்கள் கட்சியின் ஆதரவாளர்கள் ஊர் மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்...

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்