தாஜ்மஹான் அவர்களின் அன்பு மைந்தன் மொஹமட் பஸீல் அவர்களின் ஆசைத்திருமண நிகழ்வு
கலைஞர், கவிஞர், நடிகர், அரசியல் பிரமுகர், சிம்மக்குரலோன் என்னும் சிறப்புப் பெயர்ளால் அழைக்கப்படுகின்ற இலங்கைப் பொன்மனச்செம்மல் எம். எஸ். தாஜ்மஹான் அவர்களின் அன்பு மைந்தன் மொஹமட் பஸீல் அவர்களின் ஆசைத்திருமண நிகழ்வு கொள்ளுப்பிட்டி மேமன் வரவேற்பு மண்டபத்தில் எதுவித குறையுமின்றி நிறைவோடு இறை அருளால் இனிதே நிறைவெய்தியது.

அவ்வேளை அமைச்சர்கள், மார்க்க அறிஞர்கள், அரசியல் பிரபலங்கள், கொழும்பு மாநகர பிரதி மேயர், அறிவூட்டும் ஆசான்கள், கல்விமான்கள், இராணுவ உயர் அதிகாரிகள் (பிரிகேடியர்), இலங்கைக்கான மொஸ்கோ டென்மார்க் முன்னாள் தூதுவர், பத்திரிகைத்துறை பிரதம ஆசிரியர்கள், கலைஞர்கள், கவிஞர்கள். வைத்தியக்கலாநிதிகள், சட்டத்தரணிகள், புரவலர், வானொலி கலைஞர்கள்,  பிரபல தொழில் அதிபர்கள், அரச சேவையாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் சமூகம் தந்து சிறப்பித்துச்சென்றமை கண்கொள்ளாக்காட்சியாக எல்லோர் இதயங்களிலும் இரண்டறக்கலந்து விட்டது. Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்