BREAKING NEWS

ஐரோப்பாவின‌தும் அர‌சின‌தும் க‌ப‌ட‌த்த‌ன‌ங்க‌ளுக்கு ஜ‌ம்மிய்ய‌துல் உல‌மாவும் துணைபோன‌தே கார‌ண‌ம்
ப‌த்தாயிர‌ம் உலமாக்க‌ள் குழ‌ம்பிபோய் இருநூறுக்கும் அதிக‌மான‌ ம‌துர‌சாக்க‌ள் க‌தி க‌ல‌ங்கி நிற்ப‌த‌ற்கு கார‌ண‌ம் முஸ்லிம் த‌னியார் ச‌ட்ட‌த்தை திருத்தும் ஐரோப்பாவின‌தும் அர‌சின‌தும் க‌ப‌ட‌த்த‌ன‌ங்க‌ளுக்கு ஜ‌ம்மிய்ய‌துல் உல‌மாவும் துணைபோன‌தே கார‌ண‌ம் என‌ உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் தெரிவித்தார்.

இது ப‌ற்றி அவ‌ர் மேலும் தெரிவித்த‌தாவ‌து,
முஸ்லிம் த‌னியார் ச‌ட்ட‌த்தை திருத்த‌ முய‌ற்சிக‌ள் எடுக்க‌ப்ப‌ட்ட‌ ஆர‌ம்ப‌ கால‌த்திலேயே இதில் எந்த‌த்திருத்த‌த்துக்கும் இட‌ம‌ளிக்க‌ முடியாது என‌ ப‌கிர‌ங்க‌மாக‌ உல‌மா க‌ட்சி சொன்ன‌துட‌ன் எத்த‌கைய‌ திருத்த‌த்துக்கும் துணை போக‌ வேண்டாம் என‌ உல‌மா ச‌பையையும் வேண்டிக்கொண்ட‌து.
2012ம் ஆண்டில் கொழும்பு வை எம் எம் ஏயில் ந‌டைபெற்ற‌ இது ச‌ம்ப‌ந்த‌மான‌ க‌ருத்த‌ர‌ங்கில் ஷ‌ரீயாவுக்கு முர‌ணில்லாத‌ திருத்த‌துக்கு உலமா ச‌பை ஆத‌ரிக்கும் என‌ உல‌மா ச‌பை பிர‌திநிதிக‌ள் சொன்ன‌ போது ஷ‌ரீயாவுக்கு மாற்ற‌மாகாத‌ திருத்த‌த்துக்கு த‌யார் என்றால் ஷ‌ரீயாவுக்கு முர‌ணான‌ ச‌ட்ட‌ம் முஸ்லிம் த‌னியார் ச‌ட்ட‌த்தில் உள்ள‌து என்ப‌தை உல‌மா ச‌பை ஏற்ற‌தாக‌ ஆகும் என‌ நாம் அந்த‌ இட‌த்திலேயே சொன்ன‌ போது ப‌ல‌ரும் எம்மை க‌ண்டித்த‌ன‌ர். ஆனாலும் நாம் எச்ச‌ரித்த‌து போன்று இன்று ஜ‌ம்மிய்ய‌த்துல் உல‌மா இது விட‌ய‌த்தில் மாட்டிக்கொண்டு தாமும் குழ‌ம்பி ஏனைய‌ உல‌மாக்க‌ளையும் குழ‌ப்பி விட்டுள்ள‌து.

உல‌மா க‌ட்சியின் நிலைப்பாடு போன்று எத்த‌கைய‌ திருத்த‌த்துக்கும் ஜ‌ம்மிய்ய‌த்துல் உல‌மா த‌யார் இல்லை என‌ சொல்லியிருந்தால் இது விட‌ய‌ம் குப்பைத்தொட்டிக்கு போயிருக்கும். ஆனால் அர‌சையும் அரை நிர்வாண‌ பெண்ணுரிமை செய‌ற்பாட்டாள‌ர்க‌ளுக்கும் ஐரோப்பாவுக்கும் ப‌ய‌ந்து ஜ‌ம்மிய்ய‌த்துல் உல‌மா சில‌ திருத்த‌ங்க‌ளுக்கு துணை போன‌து.
விவாக‌ர‌த்து செய்ய‌ப்ப‌ட்ட‌ பெண்ணுக்கு ம‌தாஉ கொடுக்க‌லாம் என்றிருக்க‌ அவ‌ள‌து இத்தா முடிந்த‌ பின்பும் ம‌தாஉ கொடுப்ப‌த‌ற்கு ஷ‌ரீயாவில் இட‌மில்லை. அத்துட‌ன் முன்னாள் க‌ண‌வ‌னிட‌ம் ப‌ண‌ம் பெற்றுக்கொண்டே இன்னொரு திரும‌ண‌ம் செய்யாம‌ல் அவ‌ன் முன்பாக‌வே இன்னொருவ‌னை வைத்துக்கொண்டிருக்கும் பெண்க‌ள் இத‌ன் மூல‌ம் உருவாகுவார்க‌ள் என‌ நாம் எச்ச‌ரித்தோம்.

அத்துட‌ன் பெண்ணின் திரும‌ண‌ வ‌ய‌தை 16 என‌ கூட்டும் போது அந்த‌ வ‌ய‌துக்கு குறைந்த‌ பெண் காத‌ல் அல்ல‌து துஷ்பிரயோக‌ம் கார‌ண‌மாக‌ க‌ர்ப்ப‌முற்றால் அவ‌ள் 16 வ‌ய‌து வ‌ரை திரும‌ண‌ம் செய்ய‌ முடியாது என்ப‌துட‌ன் ஒன்றில் குழ‌ந்தையை கொல்ல‌ வேண்டும் அல்ல‌து அத‌னை அவ‌ளின் 16 வ‌ய‌து வ‌ரை ஹ‌ராமியாக‌ வ‌ள‌ர்க்க‌ வேண்டும். ஆக‌வே திரும‌ண‌ வ‌ய‌தில் எந்த‌ மாற்ற‌மும் தேவையில்லை என்று சொன்னோம்.
அத்துட‌ன் இன்றைய‌ யுக‌த்தில் முஸ்லிம் ச‌மூக‌த்தின் பிர‌ச்சினை என்ப‌து சிறு வ‌ய‌து திரும‌ண‌ம் அல்ல‌ மாறாக‌ 30 வ‌ய‌து தாண்டியும் திரும‌ண‌ம் செய்ய‌ வ‌ழியில்லாத‌ முதிர் க‌ன்னி விவ‌கார‌மே உள்ள‌தால் பெண்ணின் திரும‌ண‌ வ‌ய‌து ப‌ற்றி அல‌ட்ட‌த்தேவையில்லை என‌ கூறினோம். ஆனால் இவை எதையும் உல‌மா ச‌பை க‌ருத்தில் எடுக்காம‌ல் திருத்த‌ங்க‌ளுக்கு ஒப்புத‌ல் அளித்த‌து.

அதே போல் பெண்க‌ளை காதி ஜூரிக‌ளாக‌ நிய‌மிப்ப‌த‌ற்கும் ஷ‌ரீயாவுக்கு முர‌ணாக‌  ஜ‌ம்மிய்ய‌த்துல் உல‌மா அனும‌திய‌ளித்துள்ள‌து மிக‌ப்பெரிய‌ த‌வ‌றாகும். ஒரு பெண் காதியாக‌ இருக்க‌ முடியும் என்றால் ஜ‌ம்மிய்ய‌த்துல் உல‌மாவின் த‌லைவியாக‌ ஏன் ஒரு மௌல‌வியா பெண்ணை நிய‌மிக்க‌ முடியாது என‌ ம‌க்க‌ள் கேட்டால் அத‌ற்கு ஜ‌ம்மிய்ய‌துல் உல‌மா த‌யாரா என‌ கேட்கிறோம்.  உல‌மா ச‌பை பெண் காதியாருக்கு அனும‌திய‌ளித்துள்ள‌தால் நாளை ம‌ஸ்ஜிதுக‌ளின் இமாம்க‌ளாக‌, உல‌மா ச‌பை த‌லைவியாக‌ பெண்க‌ளை நிய‌மிக்க‌ வேண்டும் என‌ அரை நிர்வாண‌ பெண்ணுரிமை ஆத‌ர‌வாள‌ர்க‌ள் கோஷ‌ம் எழுப்புவார்க‌ள் என்ப‌தை இப்போதே உல‌மா க‌ட்சி எச்ச‌ரிக்கிற‌து.

ஆக‌வே த‌ற்போது ச‌லீம் ம‌ர்சூபின் அறிக்கை ஷாபி ம‌த்ஹ‌புக்கு முர‌ணாக‌ இருக்கிற‌து என‌ சொல்லும் உல‌மா ச‌பை த‌லைவ‌ர் உட‌ன‌டியாக‌ முஸ்லிம் த‌னியார் ச‌ட்ட‌த்தை திருத்தும் அனைத்து அறிக்கைக‌ளையும் வாப‌ஸ் வாங்கி இவ‌ற்றின் குழுக்க‌ளில் இருந்தும் முற்றாக‌ வில‌கிக்கொள்வ‌த‌ன் மூல‌மே இத்த‌கைய‌ த‌வ‌றுக‌ளுக்கு  ப‌ரிகார‌மாக‌ இருக்கும்.

ஆக‌வே ஜ‌ம்மிய்ய‌துல் உல‌மா என்ப‌து யாருக்கும் ப‌ய‌ப்ப‌ட‌த்தேவையில்லை. உல‌மா  ச‌பையின் அனும‌தியின்றி எத்த‌கைய‌ திருத்த‌த்தையும் அர‌சு செய்யாது.

ஆக‌வே முஸ்லிம் த‌னியார் ச‌ட்ட‌த்தில் எத்த‌கைய‌ சிறு திருத்த‌த்துக்கும் உல‌மா ச‌பை துணை போக‌ வேண்டாம் என‌ உல‌மா க‌ட்சி தாழ்மையாக‌ வேண்டுவ‌துட‌ன் இது ச‌ம்ப‌ந்த‌மான‌ குழுக்க‌ளில் இருந்து ப‌கிர‌ங்க‌மாக‌ வாப‌ஸ் பெறும்ப‌டியும் கேட்டுக்கொள்கிற‌து. 

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar