மாலைதீவில் மாற்றம்... இலங்கைக்கும் பாடம் !மாலைதீவில் எதிர்க்கட்சியின் இப்ராகிம் முகமது 58.3 சதவிகித வாக்குகள் பெற்று ஆட்சியை பிடித்திருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது ..

 இப்போது ,அப்துல்லா யாமீன் ஜனாதிபதியாக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், புதிய ஜனாதிபதியை  தேர்வு செய்வதற்கான தேர்தல், நேற்று நடந்தது. ஆளும் கட்சியான மாலைதீவு  முன்னேற்ற கட்சி சார்பில் ஜனாதிபதி யாமீனும், எதிர்க்கட்சியான மாலைதீவு ஜனநாயக கட்சி சார்பில் இப்ராகிம் முகமதுவும் போட்டியிட்டனர். மொத்தம் 92 சதவீத வாக்குகள் பதிவாகின...

இதில் எதிர்கட்சியின் இப்ராகிம் முகமது 58.3 சதவிகித வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருப்பதாக  அறிவிக்கப்பட்டுள்ளது... இப்ராகிம் முகமது 1,33,808 வாக்குகளும், யாமீன் 95,526 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

இந்த தேர்தல் வெறுமனே ஒரு தேர்தல் அல்ல... பிராந்தியத்தில் சீனாவுக்கும் மேற்குலக நாடுகளுக்கும் ஒரு போட்டியாகவே இந்த களம் அமைந்திருந்தது..

இலங்கைக்கும் இதில் ஒரு பாடம் உள்ளது... அரசியல்வாதிகள் புரிந்துகொண்டால் சரி...
Sivaraja Ramasamy 

Comments

popular posts

ஜ‌னாதிப‌தி கோட்டாப‌ய‌ அர‌சாங்க‌த்தின‌தும் இராணுவ‌ம் ம‌ற்றும் பொலிசாரின‌தும் அர்ப்ப‌ணிப்பு பாராட்ட‌ப்ப‌ட‌ வேண்டிய‌ ஒன்றாகும்

Allocation of Varnam Tv Ramazan Ifthar programme not suitable - Al Haj M.B.Hussain Farook

கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்திய சாலை தொடர்பான குற்றச்சாட்டுகள்