ஆரையம்பதி இந்து கோவில் தாக்கப்பட்டமைக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கண்டனம்!பொலிஸார் விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு 
எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் பணிப்பு
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி கடற்கரை வீதியில் அமைந்துள்ள நரசிங்கர் ஆலய விக்கிரகங்கள் இனந்தெரியாத நபர்களினால் சேதமாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், இந்த விசமத்தனமான செயற்பாட்டை வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளார். 
இதேவேளை, குறித்த விசமத்தனமான செயற்பாடு தொடர்பில் பொலிஸார் உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்வதுடன் அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் பொலிஸாரிடம் வேண்டுகோள்விடுத்தார். 
காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி இரண்டாம் வட்டாரத்தில் அமைந்துள்ள நரசிங்கர் ஆலயம் இனந்தெரியாதோரால் தாக்கப்பட்டு அங்குள்ள விக்கிரகங்கள் சேதமாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் விடுத்துள்ள விசேட ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 
அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:- 
‘‘ஆரையம்பதி கடற்கரை வீதியோரமாக அமைந்துள்ள இந்துக் கோவில் தாக்கப்பட்டுள்ளதாக அறிந்தேன். இந்தச் செயலை நான் வன்மையாக கண்டிக்கிறேன். எவ்வாறான சூழ்நிலையிலும் இவ்வாறு கோவில்கள் அல்லது மதஸ்தளங்கள் தாக்கி இன ரீதியாக முரண்பாடுகளை ஏற்படுத்த நாங்கள் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம். எனவே, இந்தச் சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் புலனாய்வுப் பிரிவின் உதவியுடன் உடனடியாக விசாரணைகளை முன்னெடுத்து குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். அத்துடன், அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என காத்தான்குடி பொலிஸாருக்கும், மட்டக்களப்பு பொலிஸ் அத்தியட்சகரிடமும் கோரிக்கை விடுக்கிறேன். 
இவ்வாறான சூழ்நிலைகளில் மக்கள் மிகவும் நிதானமாகவும் - பொருமையாகவும் செயற்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்’’- என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்