பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக 5 ஆயிரம் முறைப்பாடுகள் பதிவு


( ஐ. ஏ. காதிர் கான் )
   கடந்த மூன்று வருட காலப்பகுதியில்,  பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட  முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் ஜீ. எச். மனதுங்க  தெரிவித்துள்ளார்.
   அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பிலேயே அதிகளவான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
   இது தவிர,  பொலிஸார் பக்கச்சார்பான முறையில் நடந்து கொண்டமை, இலஞ்சம் பெற்றுக்கொண்டமை தொடர்பிலும் தமது ஆணைக்குழுவிற்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் ஜீ. எச். மனதுங்க கூறியுள்ளார்.
   இவற்றில், 90 வீதமான முறைப்பாடுகள் தொடர்பில் தீர்வுகள்  எடுக்கப்பட்டுள்ள நிலையில்,  பொலிஸ் ஆணைக்குழுவிற்கு மேலும்  கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகள் தொடர்பில்,  தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர்
சுட்டிக்காட்டியுள்ளார்.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்