நைட்டா(தேசிய பயிலுனா் தொழிற் பயிற்சி நிறுவனம்


(அஷ்ரப். ஏ. சமத்)

க.பொ.த உயா்தரம் மற்றும் பாடசாலையை  விட்டு விலகியவா்களுக்காக தொழில் வாய்ப்புக்களையும் தொழிற் சந்தையும் பெற்றுக் கொள்வதற்காக  அடுத்த வாரத்தில் இருந்து  24 மாவட்டங்களிளும்  உள்ள நைட்டா(தேசிய  பயிலுனா் தொழிற் பயிற்சி நிறுவனம்) ஊடாக 25ஆயிரம் இளைஞா், யுவதிகளை 152க்கும் மேற்பட்ட பயிற்சி நெறிகளில்  சோ்த்துக் கொள்வதற்காக விண்ணப்பங்களை கோரப்பட்டுள்ளது. என  இன்று(23) ஸ்ரீ லங்கா பௌன்டேசன் நிறுவனத்தில் நடைபெற்ற பத்திரிகையாளா் மாநாட்டில் நைட்டா நிறுவனத்தின்  தலைவா் டொக்டா் சாரங்கல பெரும தெரிவித்தாா்.

அவா் மேலும் அங்கு தகவல் தருகையில் 

கடந்த வருடம் மட்டும் நைட்டா நிலையத்தில் 27 பிரிவுகளில் 152 பயிற்சிநெறிகளை 6 மாதம் தொட்டு 3 வருடக கால பயிற்சிநெறிகளை இலங்கையில் 24 மாவட்டங்களிலும் வருடாந்தம்  30 ஆயிரம் பாடசாலை விட்டு விலகியவா்களை இணைத்து பயிற்சி அளித்து வருகின்றது. அத்துடன் தாதியா் பயிற்சி நெறியில் பயிற்சியளித்தவா்கள் தற்பொழுது உள்நாட்டிலும்,  அவுஸ்திரேலியா, நியுசிலாந்து. சிங்கப்பூர் போன்ற நாடுகளில் அந்த நாட்டின் தரத்திற்கு என்.வி.கியு 4 தரத்திற்குச் சான்றிதழ் வழங்கி தொழில் பெற்றுள்ளனா். நிறைய சம்பளம் பெறுகின்றனா்.  


 2007 ல் பாடசாலை சோ்ந்த 3இலட்சம் பேர் கல்வி கற்று 2இலட்சத்து 50 ஆயிரம் போ்  இம்முறை உயா் தோற்றிகுகின்றனா். இவா்களில் 25ஆயிரம் பேர் பல்கலைக்கழகம் செல்கின்றனா்,மிகுதி 60ஆயிரம் பேர் தொழில் நுடபக்கல்லுாரிகள் பயிலுகின்றனா். 10ஆயிர் பேர் தமது பெற்றோா்கள் வெளிநாட்டுக்கு அனுப்பி கல்வி பயிலுகின்றனா். 5ஆயிரம் தமது தந்தை செய்த தொழிலைச் செய்கின்றனா்,  மிகுதியான 1 இலட்சம் 50 பேரின் நிலைமை என்ன? அவா்கள்  வீடுகளில் தங்கி விரக்தியுற்றவா்களாக உள்ளனா். ஆகவே தான்  நைட்டா இவ்வாறனவா்களுக்கு  வருடம் 30 ஆயிரம் பேரை சோ்த்து அவா்களுக்கு உள்ளக பயிற்சியளித்து உள்நாட்டிலும் வெளிநாட்டிலும்  தொழிற்சாலைகளில் பயிற்சியளித்து அவா்களை நிரந்தர தொழில் பெறுவதற்காக சிறந்ததொரு திட்டத்தினை அமைச்சா் காலாநிதி சரத்அமுனுகவின் திட்டம்மொன்றை வகுத்துள்ளாா்.

தற்பொழுது இலங்கையில் சுற்றுலாத்துறையில் 2இலட்சம்  பேரும் நிர்மாணத்துறையில் 2 இலட்சம்  தொழிலாளிகள் தேவைப்படுகின்றனா்.  நமது நாட்டில் சில சீன கட்டுமானத் திட்டங்களில் சீன இனத்தவரும்  நேபால் ,இந்தியா்கள் தொழில் செய்கின்றனா். நாம் பாடசாலைக் கல்வியை முடித்துவிட்டு வீனானக காலத்தினை கழிக்காமல் தமது பிரதேசத்தில் உள்ள நைட்டா நிறுவன்தில் அல்லது 1951 எனும் தொலைபேசி ஊடகா தகவல்களைப் பெற்றுக் கொண்டு தமது மாவட்டத்தில் சோந்து கொள்ளலாம். 
சமுாத்தி பெறும் பயிற்சியாளா்களுக்கு 1500 ருபா கொடுப்பணவு வழங்கப்படும். அத்துடன்் ஏனைய மாணவா்களுக்கு பஸ், புகையிரத பிரயாணச் சீட்டு பெற்றுக் கொடுக்கப்படும்.  எமது நிறுவனத்தில் பதிவு செய்யப்பட்ட 4000 தொழிற்சாலைகளிலும் பயிற்சி வழங்கப்படும் அந்த தொழிற்சாலைகளிலும் அவா்களுக்கு கொடுப்பணவு பெற்றுக் கொள்ளப்படும். 

தற்பொழுது வெளிநாடுகள், மத்தியகிழக்கு நாடுகளில் பங்களதேஸ் 3 மில்லியன் போ்  தொழில் செய்கின்றனா், பாக்கிஸ்தான் நாட்டின் 3 மில்லிய்ன போ் தொழில் செய்கின்றனா். எமது நாட்டில் 1.8 மில்லிய்னபேரே வெளிநாடுகளில் தொழில் செய்கின்றனா் எமது நாட்டுக்கு அன்னியச் செலவானி 4 பில்லியன் கிடைக்கின்றது. இதனை இரட்டிப்பாக்குத்ல்  வேண்டும்.  அதற்காக எமது நாட்டு இளைஞா்கள் யுவதிகளை முறையான பயிற்சி வழங்கி சர்வதேச நாடுகள் தேவையான பயிற்சி நெறிகள் பயிற்சியளிக்கவே நாம் திட்டம் வகுத்துள்ளோம் என நைட்டா தலைவா் தெரிவதித்தாா்.

இந் நிகழ்வில் நைட்டா பணிப்பாளா் நாயகம், மற்றும் பயிற்சி திட்டமிடல் பணிப்பாளா்களும் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தாா்கள்.

Comments

popular posts

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் தாதியர்கள் போராட்டம்

Allocation of Varnam Tv Ramazan Ifthar programme not suitable - Al Haj M.B.Hussain Farook

සායින්දමරුදු ජනතාව පෙරමුණට සහයෝගය ලබාදීමට ඉදිරිපත්විය යුතුය