වේල්ල වීදිය කාන්තා මළ සිරුර : සැකකරු ඇතුළු සැඟවුණු සියල්ල හෙළි වෙයි ( ( Photos ) මවිබිම දැන් ම තාරක සම්මාන් කොළඹ , වේල්ල වීදියේදී ගමන් මල්ලක දමා තිබියදී සොයාගත් හිස නොමැති කාන්තා මළ සිරුර කුරුවිට , තෙප්පනාව ප්රදේශයේ පදිංචි 30 හැවිරිදි අවිවාහක කාන්තාවකගේ බවට හඳුනාගෙන තිබේ . නියෝජ්ය පොලිස්පති , පොලිස් මාධ්ය ප්රකාශක අජිත් රෝහණ මහතා සඳහන් කළේ , අදාළ මළ සිරුර ඩී.එන්.ඒ. පරීක්ෂණයක් සඳහා යොමු කර එය එම කාන්තාවගේ ද යන වග තහවුරු කරගැනීමට කටයුතු කරන බවය . එමෙන් ම , අදාළ ගමන් මල්ල රැගෙන ආ සැකකරු පිළිබඳව ද තොරතුරු අනාවරණය කරගෙන ඇති අතර පොලිස් මාධ්ය ප්රකාශකවරයා සඳහන් කළේ . සැකකරු බුත්තල පොලිසියට අනුයුක්තව සේය කරන නිවාඩු ලබා සිටි උප පොලිස් පරීක්ෂකවරයෙකු බවය . එම කාන්තාව සමග ඇති කරගත් අනියම් සම්බන්ධතාවයක් හේතුවෙන් ඇති වූ ප්රතිඵලයක් ලෙස මෙම ඝාතනය සිදුව ඇති අතර , සැකකරු අත්අඩංගුවට ගැනීමට විශේෂ පොලිස් කණ්ඩායම් යොදවා ඇති බව ද පොලිස් මාධ්ය ප්රකාශකවරයා සඳහන් කළේය . සැකකරු බඩල්කුඹුර ප්රදේශයේ පදිංචිකරුවෙක් බවට පොලිසිය හඳුනා ගෙන තිබේ . කෙසේ වෙතත් , මේ වන විට සැකකරු නිවසින් බැහැරට ගොස් ඇතැයි වාර
உஸ்தாத் எம். ஏ. எம். மன்சூர் எழுதியுள்ள கட்டுரை இஸ்லாத்தின் அடிப்படைகளுக்கு மாற்றமாக உள்ளது.
இலங்கையில் முஸ்லிம்களுக்குள்ள தனியார் சட்டம் பற்றி சில அவதானங்கள் என உஸ்தாத் எம். ஏ. எம்.
Mansoor அவர்கள் எழுதியுள்ள கட்டுரை முழுக்க முழுக்க இஸ்லாத்தின் அடிப்படைகளுக்கு மாற்றமாக உள்ளது.
மேற்படி கட்டுரையில் அவர்
"பெண்கள் காதிகளாக, திருமணப்பதிவாளர்களாக, காதிக்கு ஆலோசகராக இருப்பதைப் பற்றி.
இதில் பெண்ணுக்கு இடமில்லை என்பதற்கு சொல்லப்படும் நியாயம் என்னவென்றால் அல்குர்ஆன் வசனம் 4:34 – ‘பெண்கள் மீதான நிர்வாகத் தலைமை ஆண்கள்’. ஆகையால் பெண் பதவி வகிக்க ஏலாது. ஆனால், இந்தக் குர்ஆன் வசனத்தின் முன்பின் பகுதிகளை வாசித்தால் இதனை தெளிவாக விளங்கலாம். இது குடும்ப நிர்வாகத்தினைத்தான் கூறுகிறது. பொது நிர்வாகத்தை அல்ல என உஸ்தாத் மன்சூர் கூறுகிறார்.
உண்மையில் மேற்படி வசனம் குடும்ப நிர்வாகத்தைத்தான் குறிப்பிடுகிறது என்றால் அது பற்றி குர் ஆன தெளிவாக சொல்லியிருக்கும். நபியுள்ளாஹ்வும் அவ்வாறே அதற்கு விளக்கமளித்திருப்பார்கள். ஆனால் மேற்படி குர் ஆன் வசனம் பொதுவாக ஆண்கள் என்றே கூறுவதால் குடும்பம் மற்றும் நிர்வாகம் என அனைத்துக்கும் இது பொருத்தமாகும்.
உண்மையில் குடும்ப நிர்வாகம் மட்டும் என்றிருந்தால் "கணவன்மார் தம் மனைவியரை நிர்வகிப்பவர் என்று அல்லது தந்தைமார் தம் குடும்பத்தை நிர்வகிப்பது என சொல்லப்பட்டிருக்கும். ஆனால் குர் ஆனின் வசனம் என்பது பொதுவாக வந்திருந்தால் அதனை குறிப்பிட்ட ஒன்றுக்கு என ஆதாரம் இன்றி வரையறுக்க முடியாது என்பது அடிப்படை சட்டமாகும். இதனை உஸ்தாத் மன்சூர் மீறியுள்ளார்.
உஸ்தாத் மன்சூர் மேலும் தன் கட்டுரையில் "இதனைப் பொதுமைப்படுத்தினால் பெரும் பிரச்சினையாகிப் போகும். எப்படி எனின் ஒரு பாடசாலையில் அதிபராக பெண் இருக்க முடியாது. ஒரு பல்கலைக்கழகத்தில் பீடாதிபதியாக இருக்க முடியாது" என்றெல்லாம் கூறுகிறார்.
இங்கு பிரச்சினைக்குரிய விடயம் என்பது இஸ்லாமிய சட்டத்துக்கு பொறுப்பான ஒரு விடயத்தில் காதியாக பெண் இருக்கலாமா இல்லையா என்பதுதானே தவிர சமயம் சாராத பாடசாலைக்கு அதிபராக இருப்பது வைத்தியசாலைக்கு அத்தியட்சகராக இருப்பது என்பதெல்லாம் மார்க்கம் சம்பந்தமான வட்டத்துக்குள் உள்ளதல்ல.
அது மட்டுமல்லாமல் இஸ்லாமிய சட்டத்தை அமுல் படுத்துவது என்பது நபியவர்களின் வாழ்வில் நடந்த ஒன்றாகும். அன்னவர் இது விடயத்தில் பெண்களை நியமிக்கவில்லை. அதற்கு மாறாக ஆண்களையே நியமித்தார்கள். இதில் முஆத் பின் ஜபலை குறிப்பிடலாம்.
மேலும் மன்சூர் கூறுகிறார்: எங்கள் எல்லோருக்கும் தெரியும். ஒரு பெண் படித்து பதவிக்கு வரலாம். அந்தத் தகுதி பெண்களுக்கு கண்டிப்பாக இருக்கின்றது. சட்டத்தரணியாக வரலாம். நீதிபதியாக வரலாம். எங்கள் பெண்களே நிறைய சட்டத்தரணிகளாக இருக்கிறார்கள். எனவே, இந்த ஆயத்தை பொதுமைப்படுத்தி பெண்கள் ஒரு இடத்திலும் பதவி வகிக்க இயலாது என்றால் அது நியாயமல்ல" என கூறுகிறார். இது சிறுபிள்ளைத்தனமான கருத்தாகவே தெரிகிறது.
இஸ்லாம் என்பது வஹியாகும். முற்காலம் பிற்காலம் என அனைத்தும் தெரிந்த இறைவன் நிச்சயம் இதற்கும் வழி காட்டியிருப்பான். பெண்கள் படித்து தொழிலில் இருக்கிறார்கள் என்பதற்காக அதனை இஸ்லாமிய சட்டத்துக்குள் புகுத்த முடியாது. அந்த தொழில் என்பது பெண்களின் நிலை, தொழிலின் தன்மை என்பதை பொறுத்தது. ஒரு பெண் சட்டத்தரணியாக, பொலிஸ்காரியாக இருக்கத்தான் வேண்டும் என இஸ்லாம் சொல்லவில்லை. ஆனால் அவ்வாறு இருப்பதை இஸ்லாம் விரும்பவில்லை என்பதற்கு நிறைய ஆதாரங்கள் உள்ளன.
மிக உயர்வான பள்ளிக்கு சென்று தொழும் விடயத்தில் கூட நபியுள்ளாஹ் பெண்களுக்கு அனுமதித்தாலும் அவள் தன் வீட்டில் அதுவும் உள் அறையில் தொழுவது சிறந்தது என சொல்லியுள்ளார்கள். தொழுகைக்கே இப்படி என்றால் சட்டத்தரணி அதுவும் பொய் சொல்வதை ஹலாலாக்கும் தொழில் போன்றவற்றுக்கு நபியவர்கள் அனுமதித்திருப்பார்களா?.
தொழுகைக்கே இந்நிலை என்றால் பெண்ணுக்கு அவள் வீடுதான் சிறந்தது என்பதை புரிய முடியும். வாழ்க்கையை கொண்டு செல்ல வசதியில்லாத ஒரு பெண் தொழில் செய்ய இஸ்லாம் அனுமதித்திருக்கின்றதே தவிர பெயருக்கும் புகழுக்கும் பெண் தொழில் செய்ய அனுமதிக்கவில்லை என்பது தொழுகை விடயத்திலிருந்து காண்கிறோம். ஆகவே குடும்பம், பொது நிர்வாகம் என்பவற்றில் பெண்களுக்கு தலைமை நிர்வாகத்தை இஸ்லாம் அனுமதிக்கவில்லை என்பது மட்டுமல்ல தடையும் செய்துள்ளது. அந்தத்தடை பல இடங்களில் வந்துள்ளது. பெண்ணை தலைமையாக கொண்ட சமூகம் உயர்வடையாது என்ற நபியவர்களின் ஹதீதும் ஒன்று. இது பாரசீக ஆட்சியில் இருந்த பெண் சம்பந்தமாக இருப்பினும் நபியவர்கள் பொதுப்படையாகவே சொன்னார்கள்.
உதாரணமாக கோதுமையில் கலப்படம் செய்த ஒருவரை கண்ட நபியவர்கள் யார் எம்மை ஏமாற்றுகிறாரோ அவர் எம்மை சார்ந்தவர் அல்ல என கூறியது அந்த கலப்படம் செய்தவருக்கு தானே தவிர மற்றவர்களுக்கல்ல என விவாதிக்க முடியுமா?
மேலும் உஸ்தாத் மன்சூர்
"பெண்கள் பதவிகளை ஏற்கக்கூடாது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. ஆதாரம் இல்லை என்பதுதான் பதவி வகிக்கலாம் என்பதற்கான ஆதாரம். அவ்வாறு பதவி வகிக்கக் கூடாது எனின் அதனை அல்குர்ஆனும், ஹதீஸும் சொல்ல வேண்டும் " என கூறுகிறார்.
மார்க்கத்தில் ஓர் அடிப்படை உள்ளது. அதாவது ஒரு விடயம் தெளிவாக சொல்லப்பட்டிருந்தால் அதனை மறுப்பதற்கு இன்னொரு வஹி ஆதாரம் வேண்டும். ஆண்களே பெண்களை நிர்வாகிப்பவர்கள் என குர் ஆன் நேரடியாக சொல்லும் போது பெண்கள் நிர்வாகம் செலுத்த கூடாது என தடை வரவில்லை என்பது ஒரு மார்க்க அறிஞரின் கருத்தாக இருக்கமாட்டாது.
ஆண்களே பெண்களை நிர்வகிப்பவர்கள் என குர் ஆன் சொல்ல நபியவர்கள் பெண்களை ஆண்கள் சம்பந்தப்படும் விடயங்களுக்கு நிர்வாகிகளாக நியமித்திருந்தால் அதனை நாம் ஏற்கலாம்.
நபியவர்கள் பெண்களை நீதிபதிகளாக நியமிக்கவில்லை என்பதுதான் ஆதாரமே தவிர நியமிக்க வேண்டாம் என சொன்னார்களா என கேட்பது அறிவுடமையாகாது. இருப்பினும் வேண்டாம் என்பதை குர் ஆன் " ஆண்களே பெண்களை நிர்வகிப்பவர்கள்" என்பதன் மூலம் சொல்கிறது.
அத்துடன் உஸ்தாத் மன்சூர் " நபி (ஸல்) அவர்களின் காலத்தில் பெண்கள் நீதிபதிகளாகக் கடமையாற்றவில்லை" என்பது ஒரு ஆதாரமல்ல என கூறுகிறார்.
ஒரு விடயம் நபியவர்கள் வாழ்வில் நடைபெற சாத்தியம் இருந்தும் நபியவர்கள் அதனை தவிர்த்தார்கள் என்பது பலமான ஆதாரமாகும்.
நபியவர்கள் காலத்திலும் இன்றைய அதே சட்ட பிரச்சினை இருந்தது. ஆனாலும் அதற்கு நீதிபதியாக பெண்ணை நியமிக்கவில்லை.
உஸ்தாத் மன்சூரின் கருத்தை பார்த்தால் பெண்கள் பள்ளிவாயலில் தொழுகை நடாத்தும் இமாம்களாகவும் இருக்கலாம் என சொல்வார் போலுள்ளது. ஏனென்றால் பெண்கள் இமாமத் செய்வது கூடாது என குர் ஆன் ஹதீத் கட்டளையிடவில்லை என்பது ஆதாரம் என சொல்வார் போலுள்ளது.
நபியவர்கள் ஆண்களும் கலந்துகொண்ட தொழுகையில் பெண்களை இமாமத் செய்ய விடவில்லை என்பதுதான் தடைக்கான ஆதாரம் என்கிறோம். அதேபோல் பெண்களை காதிகளாக்கவில்லை.
தொடர்ந்து உஸ்தாத் மன்சூர் இது விடயத்தில் இமாம்கள் மத்தியில் கருத்து வேறுபாடு உண்டு என சொல்லிவிட்டு வரலாற்றில் பெண்கள் ஆட்சியாளராக சில நாடுகளில் இருந்தவற்றை சொல்கிறார்.
இமாம்கள் மத்தியில் கருத்து வேறுபாடு இல்லாத விடயமே இல்லை. பெண்கள் ஆட்சியாளராக வர சாத்தியமில்லை என நாம் சொல்லவில்லை. ஆனால் அவ்வாறு வருவதை இஸ்லாம் ஏற்கிறதா இல்லையா என்பதுதான் இங்கு பிரச்சினை. சில பெண்கள் ஒன்றுக்கு மேற்பட்ட கணவர்களுடன் வாழ்வதையும் கான்கிறோம். தஸ்லிமா நஸ்ரின் போன்றோர் இவ்வாறு வாழ்வதாக சொல்லியுமுள்ளனர். இவ்வாறும் பெண்கள் வாழ்கிறார்கள்தானே என கூறி ஒரு முஸ்லிம் பெண் ஒரே நேரத்தில் இரண்டு கணவனுடன் வாழலாம் என சொல்ல முடியுமா?
உஸ்தாத் மன்சூர் சிறந்த அறிஞர். ஆளுமை. ஆனாலும் இது விடயத்தில் அவர் அள்ளாஹ்வை திருப்திப்படுத்துவதை விட்டு விட்டு யாரையோ திருப்திப்படுத்த முணைவது போல்த்தான் அவரது கட்டுரை உள்ளது.
ஆகவே பெண்களை காதி நீதிபதியாக நியமிக்க அனுமதிப்பது குர் ஆனுக்கும் நபிவழிக்கும் முரணானதாகும். ஆனால் காதி நீதிபதிக்கு ஆலோசகர்களாக பெண்ணை அதாவது அவர் மனைவியை நியமிக்க முடியும்.
நபியவர்கள் பெண்கள் பற்றிய விடயத்தில் தமது மனைவியிடமே ஆலோசனை கேட்டுள்ளார்கள்.
பெண் காதி வேண்டும் என்போர் அவர்களது கருத்துக்கு காரணமாக வழக்குக்கு வரும் சில பெண் முறைப்பாட்டாளர்களை சில காதிகள் மேய்ந்து விடுவதாக கூறி பெண்ணை காதிக்கு ஆலோசகராக நியமிக்க சொல்கிறார்கள். அப்படியாயின் பெண் ஆலோசகரையும் அந்த சில காதி மேயமாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம்.?
ஆகவே தற்போதைய முஸ்லிம் திருமண சட்டத்தில் எந்த மாற்றமும் திருத்தமும் இப்போதைக்கு தேவையில்லை. அதில் சில விடயங்களை மேலும் சேர்க்க முடியுமே தவிர இருக்கும் சட்டத்தில் எதையும் நீக்க அனுமதிக்க முடியாது.
காதிக்கு ஆலோசகராக அவரது மனைவியையே நியமித்தல், காதியாக பல்கலைக்கழக பட்டம் பெற்ற மௌலவிமாரை மட்டுமே நியமிக்க வேண்டும் என்பவை உலமா கட்சியின் ஆலோசனைகள். இருந்தும் இன்றுள்ள இனவாத சூழலில் முஸ்லிம் தனியார் சட்டத்தில் கைவைத்து அல்லது அதற்கெதிராக ஆர்ப்பாட்டம், கட்டுரைகள் எழுதி அதனை இனவாதிகள் தமக்கு சாதகமாக எடுத்து தனியார் சட்டத்தை ஒரேயடியாக இல்லாமல் செய்ய இடமுண்டு என்பதால் இதனை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
-முபாறக் அப்துல் மஜீத் கபூரி, நத்வி, மதனி
தலைவர்
உலமா கட்சி
Comments
Post a comment