முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி...!!!! இராஜதந்திர குழியில் வீழ்ந்தார் ஹக்கீம்...!! ( ஏ.எச்.எம்.பூமுதீன்) பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிற்கான விசேட இரவு விருந்துபசார நிகழ்வில் முகா தலைவர் ரவூப் ஹக்கீம் பங்குபற்றியமை முஸ்லிம்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஏற்பாட்டில் அலரி மாளிகையில் நேற்று (23) செவ்வாய்கிழமை இரவு இந்த விருந்துபசாரம் இடம்பெற்றது. இம்ரான் கான் நேற்று இலங்கை வந்தடைந்த வேளை - ஜனாஸா எரிப்புக்கு எதிராக , அரசாங்கத்தை மிகக் கடுமையாக தூற்றி - கொழும்பு காலிமுகத்திடலில் ஊர்வலம் போன ஹக்கீம் - அன்று மாலையே விருந்தில் கலந்துகொண்டமை - ஹக்கீமின் இரட்டை வேடத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது. இம்ரான் கான் - கட்டாய ஜனாஸா எரிப்பு விவகாரத்தை முடிவுக்கு கொண்டுவர அரசிடம் பேசுவார் என்ற எதிர்பார்ப்பு மற்றும் முஸ்லிம் கட்சிகளை சந்திப்பார் என்ற முஸ்லிம் சமுகத்தின் இரு எதிர்பார்ப்பும் தவிடுபொடியான நிலையில் - ஹக்கீம் , விருந்தில் கலந்துகொண்டமை - அவர், அரசின் அடிமை என்பதையே துல்லியமாக காட்டி நிற்கின்றது. ஹக்கீம் - விருந்தில் கலந்து கொண்டதன் மூலம்
கடந்த வாரம் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட எல்லை நிர்ணய அறிக்கை மற்றும் அது தோற்கடிக்கப்பட்டமை பற்றியுமான தெளிவை அமைச்சர் பைசர் முஸ்தபா மட்டுமே சொல்லியுள்ளார்.
பாராளுமன்றத்துக்கு கொண்டு வரப்பட்டது புதிய தேர்தல் முறைப்படியா அல்லது பழைய முறைப்படியா தேர்தல் நடத்துவது என்பதற்கான வாக்கெடுப்பு அல்ல. மாறாக புதிய முறைப்படியே தேர்தல் நடத்துவதற்கான தொகுதி மற்றும் எல்லை நிர்ணய அறிக்கையாகும்.
இதனை தோற்கடித்து விட்டு ஏதோ பழைய முறைப்படி தேர்தல் நடத்த வழி வகுத்துவிட்டோம் என சில சிறுபான்மை கட்சிகள் மக்களை ஏமாற்றுகிறார்கள்.
உண்மையில் புதிய முறைப்படியே தேர்தல் நடத்துவதற்கு ஏற்கனவே சிறுபான்மை கட்சிகள் அனுமதி அளித்து விட்டன.
மேற்படி அறிக்கை சபாநாயகர் தலைமையில் ஆராயப்பட்ட பின் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டு அவரும் வர்த்தமாணிக்கு அனுமதித்தால் புதிய முறைப்படியே தேர்தல் நடக்கும்.
இல்லாவிட்டால் புதியதொரு திருத்தத்தை அதாவது புதிய முறைப்படியான தேர்தல் முறைய ரத்து செய்யும் வகையில் பாராளுமன்றத்துக்கு புதிய திருத்தத்தை கொண்டு வந்து அதனை 3ல் 2 கொண்டு தோற்கடிக்க வேண்டும்.
அமைச்சர் பைசர் முஸ்தபா மேற்படி எல்லை நிர்ணய அறிக்கையை கொண்டு வந்தாலும் அதனை எதிர்த்து அவரே வாக்களித்தது மேற்படி அறிக்கையில் தவறுகள் காணப்பட்டதனாலாகும். மேற்படி அறிக்கையை அரசு தயாரித்து அமைச்சரிடம் சமர்ப்பித்த போது அதில் சில குறைபாடுகள் உள்ளன என்பதை தான் ஏற்பதாக அவர் கூறிவந்தார்.
ஆகவே பழைய முறைப்படி தேர்தலை நடத்துவதாயின் ஏற்கனவே கொண்டு வந்த சட்டத்தை மாற்ற ஐ தே கவும் சிறுபான்மை கட்சிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- முபாறக் அப்துல் மஜீத்
உலமா கட்சித்தலைவர்.
Comments
Post a comment