யாராவது முஸ்லிமின் வீட்டில் வைத்து விட்டு இதோ புலிகள் விற்ற ஆயுதம் என கூறும் சதித்திட்டம் இதன் பின்னணியா?

JM. Hfeez)
கண்டி புஸ்பதான மாவத்தையிலுள்ள இரு மாடிக்கட்டிடம் ஒன்றில் இருந்து தமிழீழ விடுதலைப்புலிகள் எனப் பெயர் குறிப்பிட்ட ஆயுதம் ஒன்றுடன் இன்னும் சில ஆயுதங்களும் சந்தேக நபர்கள் ஏழுபேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.. (22.8.2018)
விசேட பொலீஸ் படைப்பிரிவினர் (எஸ்.டி.எப்) மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது துப்பாக்கிகள் மூன்றும், அதற்கான ரவைகளும், வாள், போலியான வாகன இலக்கத்தகடுகள், மற்றும் கைதிகளுக்குப் போடப்படும் கைவிலங்கு சோடி ஒன்று என்பன கண்டெடுக்கப்பட்டு;ள்ளதாகப் பொலிசார் தெரிவித்தனர். 
 மேற்படி துப்பாக்கிகளில் 'ரிபிடர் கண்' வகையைச் சேர்ந்த துப்பாக்கி ஒன்றும் பிஸ்டல் வகை கைத்துப்பாக்கி ஒன்றும் ரிவோல்வர் ஒன்றும் இருந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுகிறது. பிஸ்டலில்  'தமிழ் விடுதலைப்புலிகள்' என்று தமிழில்  பெர் பொறிக்கப் பட்டிருந்ததாகவும் பொலீசார் தெரிவிக்கின்றனர். ரிவோல்வருக்குப் பயன் படும் ரவைகள் 25 ம் 'ரிபிடர்' துப்பாக்கிக்கான ரவைகள் 13ம் போலி வாகன இலக்கத் தகடு 6ம் கஞ்சா போதைப் பொருள் மற்றும் கைவிலங்கு என்பனவே கைப்பற்றப்பட்டுள்ளன. 
வீட்டு உடைமையாளர் அரசியல் வாதி ஒருவருடன் தொடர்புள்ளவர் எனச் சந்தேகிக்ககப்படகிறது. சந்தேக நபரும் அவரது மகனும் வீட்டிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் அவர்களை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டுனள்ளதாகவும் பொலீசார் தெரிவித்தனர். 
அதே நேரம் மேற்படி வீட்டுக்கு முன்னால் நிறுத்திவைக்கப்பட்டிருந்த அதி நவீன உயர் வலுக்கொண்ட இரண்டு மோட்டார் சைக்கிள்களும் போலீசாரால் மீட்கப்பட்டுள்ளது. அத்துடன் முற்றுகையின் போது வீட்டிலிருந்து ஏழுபேர் கைமு செய்யப்பட்டுள்ளனர். இதில் ஆறுபேர் சிங்களவர்கள் என்றும் ஒருவர் தமிழர் என்றும் தெரிய வருகிறது. 
பன்வில, பேராதனை, குருநாகல் முதலான இடங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிய வந்துள்ளது.  பிரதான சந்தேக நபர் ஏற்கனவே சில குற்றங்களுக்காக தேடப்பட்ட அல்லது சந்தேகிக்கப்பட்ட ஒருவர் எனவும் பொலீசார் தெரிவிக்கின்றனர். விசேட பொலீஸ் பிரிவின் பிரதானி பிரதிப் பொலீஸ் மா அதிபர் எம்.ஆர்.லதீப் மற்றும் மத்திய பிராந்திய பிரதி பொலீஸ் மாஅதிபர் டி.ஆர்.எல். ரனவீர ஆகியோரின் வழிகாட்டலில் மேற்படி முற்றுகை மேற்கொள்ளப்பட்டதாகப் பொலீசார் தெரிவித்ததனர். 


 பாரியதொரு சம்பவத்தை மேற்கொள்வதற்கு இவர்கள் இவ்வாறு மேற்படி வீட்டில் தங்கி இருக்கவாம் என்ற கோணத்தில் விசாரணைகள் நடை பெறுவதுடன் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதம் எவ்வாறு கிடைத்துள்ளது என்பது பற்றியும் பொலீசார் விசாரணைகளை முன் எடுத்துள்ளனர். 

Comments

popular posts

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் தாதியர்கள் போராட்டம்

Allocation of Varnam Tv Ramazan Ifthar programme not suitable - Al Haj M.B.Hussain Farook

සායින්දමරුදු ජනතාව පෙරමුණට සහයෝගය ලබාදීමට ඉදිරිපත්විය යුතුය