முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி...!!!! இராஜதந்திர குழியில் வீழ்ந்தார் ஹக்கீம்...!! ( ஏ.எச்.எம்.பூமுதீன்) பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிற்கான விசேட இரவு விருந்துபசார நிகழ்வில் முகா தலைவர் ரவூப் ஹக்கீம் பங்குபற்றியமை முஸ்லிம்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஏற்பாட்டில் அலரி மாளிகையில் நேற்று (23) செவ்வாய்கிழமை இரவு இந்த விருந்துபசாரம் இடம்பெற்றது. இம்ரான் கான் நேற்று இலங்கை வந்தடைந்த வேளை - ஜனாஸா எரிப்புக்கு எதிராக , அரசாங்கத்தை மிகக் கடுமையாக தூற்றி - கொழும்பு காலிமுகத்திடலில் ஊர்வலம் போன ஹக்கீம் - அன்று மாலையே விருந்தில் கலந்துகொண்டமை - ஹக்கீமின் இரட்டை வேடத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது. இம்ரான் கான் - கட்டாய ஜனாஸா எரிப்பு விவகாரத்தை முடிவுக்கு கொண்டுவர அரசிடம் பேசுவார் என்ற எதிர்பார்ப்பு மற்றும் முஸ்லிம் கட்சிகளை சந்திப்பார் என்ற முஸ்லிம் சமுகத்தின் இரு எதிர்பார்ப்பும் தவிடுபொடியான நிலையில் - ஹக்கீம் , விருந்தில் கலந்துகொண்டமை - அவர், அரசின் அடிமை என்பதையே துல்லியமாக காட்டி நிற்கின்றது. ஹக்கீம் - விருந்தில் கலந்து கொண்டதன் மூலம்
அரபா என்றால் ஹாஜிகள் அரபாவில் கூடும் நாள்தான் அரபாவா போன்ற கேள்விகளுக்கு நான் 2018ம் ஆண்டில் வழங்கிய விளக்கங்களை கீழே தொகுத்து தருகிறேன். இது சம்பந்தமான அனைத்து கேள்விகளுக்கும் இதில் பதில் உள்ளது.
19.8.2018ல் நாம் வெளியிட்ட அறிக்கை.
நாளை திங்கள் கிழமை ஹாஜிகள் அரபா மைதானத்தை நோக்கி செல்லும் அரபா தினமாக இருப்பதால் ஹாஜிகள் அல்லாத உலகளாவிய முஸ்லிம்கள் நாளை அரபா நோன்பை பிடிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.
அரபா தின நோன்பு பற்றி நபி (சல்) அவர்கள், முன்வருட பின் வருட பாவங்களுக்கு பரிகாரம் என சொல்லியுள்ளார்கள். ஆதாரம் முஸ்லிம்.
அரபா தின நோன்பு சம்பந்தமாக வந்துள்ள ஹதீதுகள் அனைத்தும் "அரபா தின" நோன்பு என்றே வந்துள்ளது. அரபா தினம் என்பதும் வருடத்தில் ஒரு நாள்தான். துல் ஹிஜ் மாதத்தின் 9ம் நாள் நோன்பு என நபியவர்கள் சொல்லவில்லை என்பதையும் நினைவூட்டுகிறோம்.
ஒரு காலத்தில் மக்காவில் அரபா நாள் என்பதை இலங்கை போன்ற நாடுகளால் அறிய முடியாமல் இருந்த போது இலங்கையில் காணப்படும் பிறையை வைத்து பிறை 9ந்திகதி அரபாநாளாக இருக்கக்கூடும் என கருதி இங்கு நோன்பு நோற்றார்கள்.
ஒரு விடயம் பற்றி தெரியாத போது அதுபற்றி இறைவன் குற்றம் பிடிக்க மாட்டான். ஆனால் தெரிந்தபின் அதே தவறை செய்வது குற்றமாகும்.
அந்த வகையில் அரபா தினம் என்பது எப்போது என்பதை உலகின் மூலை முடுக்குகளில் உள்ள முஸ்லிம்களுக்கும் தெரியும் என்பதால் அது நாளை 20 திங்கட்கிழமை என்பதால் அதில் நோன்பு பிடிப்பதே நபிவழியாகும்.
அதே வேளை பெருநாளை நாளை மறுநாளும் எடுக்கலாம். அதற்கு அடுத்த நாளும் எடுக்கலாம். நஹ்ருடைய நாட்கள் மூன்றும் பெருநாளாகும் என ரசூல் (சல்) சொல்லியுள்ளதாலும் பெருநாள் என்பது பெரியவர்களுக்கு தொழுகையுடன் முடிந்து சிறுவர்களுக்கு அன்று முழுவதும் கொண்டாட்டம் என்பதால் பெருநாளை புதன் கிழமை எடுப்பதில் தவறில்லை.
ஆனாலும் நாளை அரபா நாள் என்பதை ஏற்று நாளை மறுநாள் பெருநாள் எடுக்கும் தெளிவு ஊர் மக்களுக்கு ஏற்பட்டால் செவ்வாய்க்கிழமை ஹஜ் பெருநாளை எடுப்பது சிறந்ததாகும்.
நோன்பு என்பது இறைவனுடன் மட்டும் சம்பந்தப்பட்டது. பெருநாள் என்பது பெரும்பாலும் மனிதர்களுடன் சம்பந்தப்பட்டது.
ஆகவே நாளை அரபா நோன்பை பிடிப்பதுடன் பெருநாளை வசதி போல் எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.
இன்று நான் கல்முனையில் இருக்கின்றேன். நாளை அரபா தினம் இல்லை என்றும் நாளை நாமும் அரபா தின நோன்பு பிடிக்க முடியாது என்றும் சொல்லும் மௌலவிமார்களுக்கு முடியுமென்றால் என்னோடு இது பற்றி இன்று எனது வீட்டுக்கு வந்து விவாதித்து நாளை அரபா நோன்பு இல்லை என நிரூபிக்க முடியுமா என சவால் விடுக்கிறேன்.
- முபாறக் அப்துல் மஜீத்
இதுவும் 19.8.2018ல் நான் முகநூல் வட்சப் மூலம் அறிவித்தது. இன்று 21ந்திகதி வரை எந்த மௌலவியும் நேரடியாக விவாதிக்க வரவில்லை.
அதன்பின் நான் கூறியது
நபியவர்கள் பல காலமாக அரபா நோன்பை பிடித்து வந்ததாகவும் இஸ்லாமிய ஹஜ் நடை பெற்றது ஹிஜ்ரி 10ம் ஆண்டுதான் என்றும் நபியவர்கள் தில் ஹஜ் 9ல் அரபா நோன்பு பிடித்ததாகவும் ஒன்றுக்கொன்று முரண்பாடாக கல்முனை முஹம்மதிய்யா ஜும்ஆ பள்ளியில் உரையாற்றிய மௌலவி சொல்கிறார். இவரைப்போன்றே இன்னும் சிலரும் சொல்கின்றவை இஸ்லாமிய அடிப்படையற்ற வாதமாகும்.
நபியவர்கள் ஹிஜ்ரி 10ல் ஹஜ் செய்தாலும் அதற்கு முன்பும் அபூபக்கர் ரழி தலைமையில் ஹஜ்ஜுக்கு முஸ்லிம்களை அனுப்பியுள்ளார்கள்.
அதுமட்டுமல்லாது ஜாஹிலிய்யா காலத்திலும் அரபாவில் மக்கள் ஒன்று கூடும் அரபா நாள் இருந்ததாகவும் ஏற்றுக்கொண்டு விட்டு நபியவர்கள் மதீனாவில் இருக்கும் போது அரபா தின நோன்பு நோற்கவில்லை, தில் ஹஜ் 9ம் நோன்பே நோற்றதாக நபி மீது இட்டுக்கட்டுகிறார்கள்.
இஸ்லாத்தை நமக்கு கற்றுத்தந்தது நபி (சல்) அவர்கள்தான். அன்னார்தான் நமக்கு சொல்லித்தந்தார்கள் அரபா தினத்தில் நோன்பு பிடிக்கும்படி. அரபாதினம் என்பது அரபாவில் ஹாஜிகள் கூடும் தினமே தவிர ஒவ்வொரு நாட்டிலும் பிறை பற்றி எடுக்கப்பட்ட பிழையான நாட்களின் படியல்ல.
ஹாஜிகள் அரபாவில் கூடும் நாளில் நபியவர்கள் மதீனாவில் நோன்பு நோற்றார்கள் என்பது தெளிவானது. அத்துடன் நபியவர்கள் நம்மைப்போல் சாதாரண மனிதர் அல்ல. வஹி அறிவிக்கப்படும் இறை தூதர். மதீனாவில் காணப்பட்ட பிறை ஒரு நாள் தாமதமாகி ஹாஜிகள் பெருநாள் கொண்டாடும் நபியவர்கள் மதீனாவில் ஹராமாக நோன்பு வைப்பதற்கு நிச்சயம் இறைவன் அனுமதித்திருக்க மாட்டான்.
நபியவர்கள் செருப்புடன் தொழும்போது அதில் நஜீஸ் உள்ளது என ஜிப்ரீல் அறிவித்ததால் செருப்பை களட்டியிருக்கும் போது ஹாஜிகள் பெருநாள் கொண்டாடும் நாளில் மதீனாவில் நபியவர்கள் நோன்பு பிடிப்பதை நிச்சயம் வஹி மூலம் தடுக்கப்பட்டிருக்கும். ஆகவே ஹாஜிகள் மக்காவின் அரபாவில் கூடும் அந்த அரபா நாளிலேயே நபியவர்களும் மதீனாவில் நோன்பு பிடித்தார்கள்.
அவ்வாறு நபியவர்கள் அரபா நாள் அல்லாத நாளில் மதீனாவின் பிறையை வைத்து நோன்பு பிடித்திருந்தால் அந்த நோன்புக்கு பெயர் அரபா நோன்பு அல்ல; துல்ஹஜ் 9ம் நோன்பு. இந்நிலையில் நபியவர்கள் அந்த நோன்புக்கு அரபா நோன்பு என பெயர் வைத்திருக்கமாட்டார்கள்.
ஆனால் நபியவர்கள் எந்த ஹதீதிலும் துல் ஹஜ் 9ம் நாள் நோன்பு பிடிக்கும்படி நம்மை சொல்லவில்லை. அத்துடன் நபியவர்கள் ஹஜ்ஜுக்கு செல்லுமுன் பல வருடங்கள் அரபா நோன்பு பிடித்துள்ளார்கள். நபியவர்கள் அரபா நோன்பை முன்பும் பிடித்ததாக சொல்லிக்கொண்டே அது அரபா நோன்பு அல்ல தில் ஹஜ் 9ம் நோன்பு என உளறிக்கொட்டுகிறார் இந்த மௌலவி.
துல்ஹஜ் 9ம் நாளில்தான் ஹாஜிகள் அரபாவில் ஒன்று கூடுவர். அதனால்த்தான் அந்த நோன்புக்கு அரபா நாள் நோன்பு என்பதாகும்.
- முபாறக் அப்துல் மஜீத்
அரபா நோன்பு பற்றி அன்னை ஆயிஷா(ரழி) பற்றிய செய்தியையும் கல்முனை முஹம்மதிய்யா ஜும் மாவில் கதீப் சொல்கிறார். நபிகளாரின் வபாத்தின் பின்னர் அரபா நாள் ஒன்றில் ஒரு சஹாபி அன்னை ஆயிஷாவிடம் குடிப்பதற்கு தண்ணீர் கேட்கிறார். அதற்கு அன்னை இன்று அரபா நோன்பு பிடிக்கவில்லையா என்று கேட்கிறார். அதற்கு அந்த சஹாபி சொல்கிறார் இன்று ஹஜ் பெருநாளாக இருக்குமோ என நான் சந்தேகிக்கிறேன் என. அதற்கு அன்னை இன்று எமக்கு அரபா நோன்பு என சொல்கிறார்கள் என்பதை வைத்து உள்நாட்டில் பிறை கண்டதை வைத்து அரபா தினம் அல்லாத நாளில் அரபா (?) நோன்பு பிடிக்கலாம் என்கிறார்.
மேற்படி சம்பவத்தில் அவருக்கு ஆதாரம் இல்லை எமக்கே உண்டு. அன்னையிடம் தண்ணீர் கேட்டவர் இன்று ஹஜ் பெருநாளாக இருக்குமோ என சந்தேகப்பட்டதன் மூலம் அவர் மக்காவில் ஹாஜிகள் பெருநாள் கொண்டாடும் போது மதீனாவாசிகள் நோன்பு பிடிப்பது ஹராம் என்பதை அந்த சஹாபி தெளிவாக தெரிந்திருந்தார். அதனால் இன்று ஹஜ் பெருநாளாக இருக்குமோ என தான் சந்தேகப்பட்டு நோன்பு பிடிக்கவில்லை என சொல்வதன் மூலம் புரிகிறோம். உள்நாட்டு பிறையை அவர் ஏற்றவர் என்றால் நாளைதான் மதீனாவில் ஹஜ் பெருநாள் எனும் போது இன்று எப்படி அவர் சந்தேகப்படுவார்?
ஆகவே மேற்படி சம்பவத்தின் படி மக்காவில் ஹாஜிகள் அரபாவில் கூடும் தினமே உலக முஸ்லிம்களுக்கும் அரபா தினம் என்பதையும் அரபாவில் ஹாஜிகள் கூடும் அரபா தினம் என்பது சந்தேகமற நமக்கு தெரிந்திருந்தால் அந்நாளிலேயே நோன்பிருக்க வேண்டும் என்பதையும் ஹாஜிகள் பெருநாள் கொண்டாடும் நாளில் மற்றவர்கள் அரபா தினம் என நினைத்துக்கொண்டு நோன்பு பிடிப்பது ஹராம் என்பதையும் அந்த சஹாபி புரிந்திருந்தார் என்பதை காண்கிறோம்.
- முபாறக் அப்துல் மஜீத்
அரபா நோன்பு விடயத்தில் பீ ஜே சிறுபிள்ளைத்தனமாக பேசுகின்றார்.
அரபா நோன்பு என்றால் ஹாஜிகள் அரபாவில் கூடும் தினத்தின் நோன்புதான் அரபா நோன்பு என ஏற்றுக்கொண்டு பின்னர் நபியவர்கள் மக்காவில் எப்போது அரபா என்பதை தெரியாமல் மதீனாவில் பிறை ஒண்ணு ரெண்டு என எண்ணி பிறை 9ல் அரபா என்று எண்ணிக்கொண்டு நோன்பு பிடிப்பார்களாம். இது பீஜேயின் கற்பனை. இவர் சொல்லும் கருத்துக்கு ஹதீத் ஆதாரம் இல்லை.
நபியவர்கள் துல் ஹஜ் 9ல் அரபா நோன்பு பிடிக்கத்தான் சொல்லியுள்ளார்களே தவிர ஒவ்வொரு ஊரிலும் காணப்படும் பிறையை வைத்து அரபா தினம் என எண்ணிக்கொண்டு நோன்பு பிடிக்க சொல்லவுமில்லை தானும் அவ்வாறே பிடிப்பதாக சொல்லவுமில்லை. இதுவெல்லாம் பீஜேயின் கற்பனை.
இன்றைய காலத்தில் நவீன வசதிகள் உள்ளன அன்றைய காலத்தில் அப்படியெல்லாம் இருக்கவில்லையாயினும் ஒரு குதிரை வீரரை அனுப்பி மக்காவின் பிறை பார்த்து வர சொல்லியிருக்க முடியுமே என்கிறார் பீஜே. ஏதோ நபியவர்களை தன்னைப்போன்ற சாதாரண மனிதனாக நினைத்துக்கொண்டு பேசுகிறார்.
நபியவர்கள் காலத்தில் தொலைபேசி இருக்கவில்லை, சட்டலைட் இருக்கவில்லை ஆனால் இவை அனைத்தையும் மிஞ்சிய வஹி இருந்தது என்பதை பீஜே மறந்து விட்டார்.
எப்போது அரபா என்பதை நபியவர்கள் வஹி மூலம் அறிந்தே அந்நாளில் நோன்பு வைத்திருப்பார்கள்.
தொழும்போது பின்னால் நிற்பவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதையும் அறிய்ம் சக்தியை கொடுத்த இறைவன் பகல் முழுவதும் ஹாஜிகள் அரபாவில் கூடுவதை அறிவிப்பாதிருப்பானா?
ஒரே இரவில் வானுக்கு சென்று திரும்பி அங்கு நடப்பவற்றை கண்டு வந்த நபியவர்களுக்கு 300 மைலுக்கப்பால் உள்ள மக்கா அரபா பற்றிய செய்தியை அறிவிக்காதிருப்பேனா?
நபியவர்கள் இறுதி ஹஜ்ஜுக்கு முன் 9 வருடங்கள் மதீனாவில் வாழ்ந்த போது இன்று அரபாவா இல்லையா என்று தெரியவில்லை என சொல்லவும் இல்லை அரபா என்றுதெரியாமல் மதீனா பிறையை எண்ணி அரபா என்று நினைத்துக்கொண்டு நோன்பு பிடிப்பதாக சொல்லவுமில்லை.
ஆகவே நபியவர்கள் வஹிமூலம் ஹாஜிகள் அரபாவில் கூடும் நாளை தெரிந்து அந்நாளில் நோன்பு நோற்றார்கள். நாம் தகவல் சாதனம் மூலம் அரபா நாளை தெரிந்து இங்கு நோன்பு பிடிக்கிறோம்.
الصوم يوم عرفة
அரபா நோன்பு என்பது அரபா நாள் அன்றுதான்.
- முபாறக் அப்துல் மஜீத்
அரபா நோன்பு பற்றி அன்னை ஆயிஷா(ரழி) பற்றிய செய்தியையும் கல்முனை முஹம்மதிய்யா ஜும் மாவில் கதீப் சொல்கிறார். நபிகளாரின் வபாத்தின் பின்னர் அரபா நாள் ஒன்றில் ஒரு சஹாபி அன்னை ஆயிஷாவிடம் குடிப்பதற்கு தண்ணீர் கேட்கிறார். அதற்கு அன்னை இன்று அரபா நோன்பு பிடிக்கவில்லையா என்று கேட்கிறார். அதற்கு அந்த சஹாபி சொல்கிறார் இன்று ஹஜ் பெருநாளாக இருக்குமோ என நான் சந்தேகிக்கிறேன் என. அதற்கு அன்னை இன்று எமக்கு அரபா நோன்பு என சொல்கிறார்கள் என்பதை வைத்து உள்நாட்டில் பிறை கண்டதை வைத்து அரபா தினம் அல்லாத நாளில் அரபா (?) நோன்பு பிடிக்கலாம் என்கிறார்.
மேற்படி சம்பவத்தில் அவருக்கு ஆதாரம் இல்லை எமக்கே உண்டு. அன்னையிடம் தண்ணீர் கேட்டவர் இன்று ஹஜ் பெருநாளாக இருக்குமோ என சந்தேகப்பட்டதன் மூலம் அவர் மக்காவில் ஹாஜிகள் பெருநாள் கொண்டாடும் போது மதீனாவாசிகள் நோன்பு பிடிப்பது ஹராம் என்பதை அந்த சஹாபி தெளிவாக தெரிந்திருந்தார். அதனால் இன்று ஹஜ் பெருநாளாக இருக்குமோ என தான் சந்தேகப்பட்டு நோன்பு பிடிக்கவில்லை என சொல்வதன் மூலம் புரிகிறோம். உள்நாட்டு பிறையை அவர் ஏற்றவர் என்றால் நாளைதான் மதீனாவில் ஹஜ் பெருநாள் எனும் போது இன்று எப்படி அவர் சந்தேகப்படுவார்?
ஆகவே மேற்படி சம்பவத்தின் படி மக்காவில் ஹாஜிகள் அரபாவில் கூடும் தினமே உலக முஸ்லிம்களுக்கும் அரபா தினம் என்பதையும் அரபாவில் ஹாஜிகள் கூடும் அரபா தினம் என்பது சந்தேகமற நமக்கு தெரிந்திருந்தால் அந்நாளிலேயே நோன்பிருக்க வேண்டும் என்பதையும் ஹாஜிகள் பெருநாள் கொண்டாடும் நாளில் மற்றவர்கள் அரபா தினம் என நினைத்துக்கொண்டு நோன்பு பிடிப்பது ஹராம் என்பதையும் அந்த சஹாபி புரிந்திருந்தார் என்பதை காண்கிறோம்.
- முபாறக் அப்துல் மஜீத்
மக்காவின் அரபாவில் ஹாஜிகள் நிற்கும் போது உலகின் எல்லா நாடுகளிலும் அந்த நாளின் நோன்பு பிடிக்க வேண்டுமாயின் உலகம் தட்டையாக இருக்க வேண்டும் என உலகம் தெரியாத சிலர் மிம்பர்களில் பேசுகின்றனர். உலகம் உருண்டையானாலும் அது சுற்றிக்கொண்டிருக்கிறது என்பது இவர்களுக்கு தெரியாது போலும்.
இன்று அரபா நாள். உலகம் முழுக்க திங்கட்கிழமை. நாமும் இலங்கையில் அரபா நோன்பு பிடித்துள்ளோம். இப்போது இலங்கை நேரம் 1.30. இதோ உலகம் முழுவதும் இன்று ஒரே நாள் என்பதை நிரூபிக்கிறேன்.
முபாறக் அப்துல் மஜீத்
தற்போது அரபா குத்பா அரபாவில் சொல்லப்படுகிறது. மக்கா நேரம் மதியம் 12.30 இலங்கை, அமெரிக்கா ஜப்பான் வரை முஸ்லிம்களுக்கு அரபா நோன்பு கிடைத்துள்ளது. அமெரிக்காவில் விடிந்து விட்டது. ஜப்பானில் மஃரிபை நெருங்குகிறது.
ஹாஜிகள் இப்பொழுது முதல் மஃரிப் வரை அரபாவில் நிற்பர். அதாவது இன்னும் சுமார் 6 மணி நேரங்கள் நிற்பர். அதற்குள் உலகமெலாம் உள்ள மக்கள் அரபா நாளின் ஒரு பகுதியையாவது பெற்று அரபா நோன்பை அடைந்தவராவார்.
இன்றுதான் உலகமெலாம் அரபா தின நோன்பு. இலங்கையில் நாளை அரபா தினம் இல்லை. இலங்கைப்பிறைப்படி 9 என்று வைத்துக்கொள்ளலாம். இலங்கைக்கென்று இறைவன் தனியான பிறையை படைத்துள்ளான் என சில முட்டாள்கள் நினைக்கிறார்கள்.
அரபாவில் சுபஹுக்கு பின்பு ஹாஜிகள் தங்கும் போது அமெரிக்காவில் அப்போதுதான் மஃரிப் நேரம் என்பவன் உலகம் தெரியாத மடையன்.
. ஹாஜிகள் அரபாவில் நிற்கும் போது அமெரிக்காவில் சஹரும் முடிந்து விடிந்தும் விட்டது.
அரபாவில் ஹாஜிகள் நிற்கும் போது அமெரிக்காவில் மஃரிப் என்பதை நிரூபித்தால் அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு தருவேன்.
-முபாறக் அப்துல் மஜீத்
Comments
Post a comment