முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி...!!!! இராஜதந்திர குழியில் வீழ்ந்தார் ஹக்கீம்...!! ( ஏ.எச்.எம்.பூமுதீன்) பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிற்கான விசேட இரவு விருந்துபசார நிகழ்வில் முகா தலைவர் ரவூப் ஹக்கீம் பங்குபற்றியமை முஸ்லிம்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஏற்பாட்டில் அலரி மாளிகையில் நேற்று (23) செவ்வாய்கிழமை இரவு இந்த விருந்துபசாரம் இடம்பெற்றது. இம்ரான் கான் நேற்று இலங்கை வந்தடைந்த வேளை - ஜனாஸா எரிப்புக்கு எதிராக , அரசாங்கத்தை மிகக் கடுமையாக தூற்றி - கொழும்பு காலிமுகத்திடலில் ஊர்வலம் போன ஹக்கீம் - அன்று மாலையே விருந்தில் கலந்துகொண்டமை - ஹக்கீமின் இரட்டை வேடத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது. இம்ரான் கான் - கட்டாய ஜனாஸா எரிப்பு விவகாரத்தை முடிவுக்கு கொண்டுவர அரசிடம் பேசுவார் என்ற எதிர்பார்ப்பு மற்றும் முஸ்லிம் கட்சிகளை சந்திப்பார் என்ற முஸ்லிம் சமுகத்தின் இரு எதிர்பார்ப்பும் தவிடுபொடியான நிலையில் - ஹக்கீம் , விருந்தில் கலந்துகொண்டமை - அவர், அரசின் அடிமை என்பதையே துல்லியமாக காட்டி நிற்கின்றது. ஹக்கீம் - விருந்தில் கலந்து கொண்டதன் மூலம்
கலைமகள் ஹிதாயா ரிஸ்வியின் தடாகம் கலை இலக்கிய வட்டத்தின் புத்தக வெளியீடுகள் மற்றும் கலைஞர்கள் கௌரவிப்பு நிகழ்வு நேற்று கொழும்பில் வெகு விமரிசையாக நடை பெற்றது.
காலை 10 மணி முதல் 1 மணிவரை நடைபெற்ற நிகழ்வுக்கு எழுத்தாளர் அஷ்ரப் சிஹாப்தீன் தலைமை தாங்கியதுடன் விசேட அதிதியாக உலமா கட்சித்தலைவரும் தமிழ் எழுத்தாளர் சங்க தலைவருமான முபாறக் அப்துல் மஜீதும் சிறப்பதிதியாக அவுஸ்திரேலியாவில் இருந்து வந்த எழுத்தாளர் ஷர்மா அவர்களும் கலந்து கொண்டனர்.
அதேபோல் பகல் 2மணி முதல் 6 மணிவரையான நிகழ்வுக்கு கலைமகள் ஹிதாயா மஜீட் தலைமை தாங்கியதுடன் புரவலர் ஹாஷிம் உமர் கலந்து கொண்டு மூன்று நூல்களின் முதற்பிரதிகளை பெற்றுக்கொண்டார். இத்துடன் 907 முதற்பிரதிகளை பெற்றுள்ளார்.
ஹிதாயா மஜீத் தனது தனித்துவ ஆற்றலால் பன்னாட்டு கவிஞர்களையும் வரவழைத்து இத்தகைய பாரிய நிகழ்வை கொழும்பில் சிறப்பாக நடத்திக்காட்டியமை மிகப்பெரிய சாதனையாகும்.
Comments
Post a comment