மறைந்த கலைஞருக்கு கொழும்பில் மாபெரும் இரங்கல் அஞ்சலி


..
.................................
மறைந்த தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு இலங்கை தலைநகர் கொழும்பில்   11 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 4 மணிக்கு மாபெரும் அஞ்சலி கூட்டம் கொழும்பு ஆமர் வீதியில் அமைந்துள்ள பிரைட்டன்  ஹோட்டல்  பிரதான மண்டபத்தில் இந்த அஞ்சலிக் கூட்டம் நடத்தப்படவுள்ளது சர்வதேச இந்து குருமார் ஒன்றியத்தின் தலைவர் பிரம்மஸ்ரீ வைத்தீஸ்வரக் குருக்கள் மற்றும் வட மாகாண கிறிஸ்தவ அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவரும்,வன்னி மாவட்ட கிறிஸ்தவ மத விவகாரங்களுக்கான இணைப்புச் செயலாளருமான
வணக்கத்துக்குரிய பிதா கலாநிதி எஸ் சந்திரக்குமார் ஜே பி மற்றும் இஸ்லாமிய மத பெரியாரான மௌலவி காத்தான்குடி பவுஸ் அவர்களும் மறைந்த முதலமைச்சரது திருவுருவப்படத்துக்கு மலர்மாலை அணிவிப்பார்கள்

இந்த அஞ்சலி நிகழ்வினை இலங்கையின் மூத்த எழுத்தாளரும் ஊடகவியலாளருமானமுனைவர் சதீஷ்குமார் சிவலிங்கம் மற்றும் கவிஞரும் வைத்திய கலாநிதியுமான டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன் கொழும்பு இந்து இளைஞர் மன்ற தலைவர் தே செந்தில் வேலவர் மற்றும்  கல்வி அமைச்சின் முன்னாள்  மேலதிக செயலாளர்  எழுத்தாளர் உடுவை தில்லை நடராஜா  மேல் மாகாண சபை உறுப்பினர் கே குருசாமி  denmark நகரில் இருந்து வருகை தந்துள்ள  எழுத்தாளரும் அரசியல்வாதியுமான  தொழிலதிபர்  திரு  தர்மகுலசிங்கம் ஆகியோர் கூட்டாக இணைந்து ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிகழ்வுகள் தமிழகத்தில் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்புச் செய்யப்படுவதற்கான ஏற்பாடுகளை இலங்கை இந்திய பத்திரிகை தொடர்பாளர் மணவை அசோகன் கலைஞர் தொலைக்காட்சியின் செய்திப் பிரிவு அதிகாரி ஆனந்த ரத்தினம் அவர்களுடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ளார்

Comments

popular posts

சாய்ந்தமருது நகரசபை – விசேட வர்த்தமானி இன்று நள்ளிரவு !

அதாவுல்லாவை புக‌ழும் ஹ‌ரீஸ்

விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் – தங்கத்தை தேடி புதுக்குடியிருப்பில் அகழ்வு நடவடிக்கை !