Skip to main content

වේල්ල වීදිය කාන්තා මළ සිරුර : සැකකරු ඇතුළු සැඟවුණු සියල්ල හෙළි වෙයි

   වේල්ල වීදිය කාන්තා මළ සිරුර : සැකකරු ඇතුළු සැඟවුණු සියල්ල හෙළි වෙයි ( ( Photos ) මවිබිම දැන් ම තාරක සම්මාන්  කොළඹ , වේල්ල වීදියේදී ගමන් මල්ලක දමා තිබියදී සොයාගත් හිස නොමැති කාන්තා මළ සිරුර කුරුවිට , තෙප්පනාව ප්‍රදේශයේ පදිංචි 30 හැවිරිදි අවිවාහක කාන්තාවකගේ බවට හඳුනාගෙන තිබේ .  නියෝජ්‍ය පොලිස්පති , පොලිස් මාධ්‍ය ප්‍රකාශක අජිත් රෝහණ මහතා සඳහන් කළේ , අදාළ මළ සිරුර ඩී.එන්.ඒ. පරීක්ෂණයක් සඳහා යොමු කර එය එම කාන්තාවගේ ද යන වග තහවුරු කරගැනීමට කටයුතු කරන බවය . එමෙන් ම , අදාළ ගමන් මල්ල රැගෙන ආ සැකකරු පිළිබඳව ද තොරතුරු අනාවරණය කරගෙන ඇති අතර පොලිස් මාධ්‍ය ප්‍රකාශකවරයා සඳහන් කළේ . සැකකරු බුත්තල පොලිසියට අනුයුක්තව සේය කරන නිවාඩු ලබා සිටි උප පොලිස් පරීක්ෂකවරයෙකු බවය . එම කාන්තාව සමග ඇති කරගත් අනියම් සම්බන්ධතාවයක් හේතුවෙන් ඇති වූ ප්‍රතිඵලයක් ලෙස මෙම ඝාතනය සිදුව ඇති අතර , සැකකරු අත්අඩංගුවට ගැනීමට විශේෂ පොලිස් කණ්ඩායම් යොදවා ඇති බව ද පොලිස් මාධ්‍ය ප්‍රකාශකවරයා සඳහන් කළේය . සැකකරු බඩල්කුඹුර ප්‍රදේශයේ පදිංචිකරුවෙක් බවට පොලිසිය හඳුනා ගෙන තිබේ . කෙසේ වෙතත් , මේ වන විට සැකකරු නිවසින් බැහැරට ගොස් ඇතැයි වාර

2000 வைத்திய ஆலோசகர்கள் வடக்கு-கிழக்கை வெறுப்பதால்

2000 வைத்திய ஆலோசகர்கள் வடக்கு-கிழக்கை வெறுப்பதால் 
சுகாதார சேவையில் பெரும் சவாலையை எதிர்கொண்டுள்ளது அரசு 
=============================================
-பிரதி அமைச்சர் பைசல் காசீம் தெரிவிப்பு -
--------------------------------------------------------------------------------------------
''நாடு பூராகவும் உள்ள 2000 வைத்திய ஆலோசகர்கள் வடக்கு-கிழக்கில் உள்ள வைத்தியசாலைகளில் பணியாற்ற விரும்பாது கொழும்பு,கண்டி,காலி மற்றும் மாத்தறை போன்ற பண வசதிகள் உள்ள நகரங்களில் பணியாற்ற விரும்புவதால்  இது அரசுக்கு பெரும் சவாலாகவும் தலையிடியாகவும் உள்ளது''.

-இவ்வாறு சுகாதார போசாக்கு மற்றும் சுதேச பிரதி அமைச்சர் பைசல் காசீம் தெரிவித்தார்.நேற்று  சனிக்கிழமை களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகள் பற்றி ஆராய்வததற்காக அங்கு சென்றார்.இந்த விஜயத்தின் இறுதியில் வைத்தியசாலையின் ஊழியர்களின் மத்தியில் உரையாற்றும்போதே இவ்வாறு கூறினார்.அவர் அங்கு மேலும் கூறுகையில்;

சில அரசியல்வாதிகள் முஸ்லிம்-தமிழர் என்ற அடிப்படையில் எனக்கு எதிராக இனவாதத்தை தூண்டி வருகின்றனர்.என்னிடம் தமிழ்-முஸ்லிம் என்ற பாகுபாடு கிடையாது.கிழக்கு மாகாணத்தில் தெஹியத்தக்கண்டி,பாணம முதல் குச்சவெளி வரை அனைத்து வைத்தியசாலைகளையும் அபிவிருத்தி செய்து வருகின்றேன்.என்னிடம் உதவி கேட்டு வருகின்ற அனைத்து வைத்தியசாலைகளுக்கும் நான் உதவியை செய்துகொண்டுதான் இருக்கின்றேன்.

நான் களுவாஞ்சிக்குடி வைத்தியசாலை நல்ல நிலையில் இருக்கின்றது என்றுதான் நினைத்துக்கொண்டு இருந்தேன்.இங்கு வந்து பார்த்ததும் ஏமாந்துவிட்டேன்.இந்த வைத்தியசாலையின் நிலமையைக் கண்டு நான் மிகவும் கவலையடைகிறேன்.இங்கு காணப்படுகின்ற அத்தனை குறைகளையும்  நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுப்பேன்.

வைத்தியர்களின் தட்டுப்பாடுகளுடன்தான் எமது சுகாதார சேவை இயங்குகிறது.வருடம் ஒன்றுக்கு 1200 வைத்தியர்களை உருவாக்குகின்றோம்.அவர்களுள் 200 பேர் மாயமாக மறைந்துவிடுகின்றனர்.இருக்கின்ற ஆயிரம் பேரை தேவைக்கு ஏற்ப நாடு பூராகவும் உள்ள வைத்தியசாலைகளுக்கு பிரித்துக் கொடுக்கின்றோம்.

அப்படிப் பிரிக்கும்போது வைத்திய சங்கங்கள் தலையிட்டு குழப்பத்தை ஏற்படுத்தும்.அப்படிச் செய்ய முடியாது இப்படிச் செய்ய முடியாது என்று கூறி தடையை ஏற்படுத்தும்.கிட்டத்தட்ட 150 வைத்தியசாலைகளுக்கு வைத்தியர்களின் தட்டுப்பாடுகள் உள்ளன.

நாடு பூராகவும் 2000 வைத்திய ஆலோசகர்கள் உள்ளனர்.அவர்கள் அனைவரும் கொழும்பு,கண்டி,காலி மற்றும் மாத்தறை போன்ற பண வசதிகள் உள்ள நகரங்களில் பணியாற்றவே விரும்புகின்றனர். வடக்கு-கிழக்கிற்கு வெளியேவே வேலை செய்வதற்கு விரும்புகின்றனர்.இது அரசுக்கு பெரும் சவாலாகவும் தலையிடியாகவும் உள்ளது.

இப்போது மேலதிகமாக 300 வைத்திய ஆலோசகர்களை உள்ளீர்த்துள்ளோம்.அவர்கள் படித்து முடித்து வருவதற்கு மூன்று வருடங்கள் செல்லும்.அப்படி வந்தாலும் அவர்கள் அப்படியே வெளிநாடுகளுக்கு பெட்டியைக் கட்டிவிடுவர்.

இன்று இருதய சத்திர சிகிச்சைக்காக 2000 நோயாளர்கள் மரணத்தை கையில் பிடித்துக்கொண்டு காத்துக்கொண்டு இருக்கின்றனர். இவர்களுக்கு உடனடியாக சத்திர சிகிச்சை செய்ய முடியாத நிலையில் நாம் இருக்கின்றோம்.

இவ்வாறான கஷ்டத்தின் மத்தியில் நாம் முடியுமானவரை சிறந்த சுகாதார சேவையை ஆற்றி வருகின்றோம்.மருந்து பொருட்களின் வேலைகளை குறைத்துள்ளோம்.

Comments

Popular posts from this blog

*ரணில் மைத்திரி நல்லாட்சியில் முஸ்லிம்களுக்கு எதிராக இடபெற்ற 146 சம்பவங்கள்

*ரணில் மைத்திரி நல்லாட்சியில் முஸ்லிம்களுக்கு எதிராக இடபெற்ற 146 சம்பவங்கள்* *(தொடரும்)* 146.23.11.2017அரசாங்க  தேசிய பாடசாலையான கண்டி மகளிர் உயர் பாடசாலைக்குநியமனம் பெற்று சென்ற  முஸ்லிம் ஆசிரியைக்கு பாடம் நடத்தஅதிபர் மறுப்பு வெளியிடப்பட்டது. http://www.madawalanews.com/2017/11/blog-post_373.html 145. காலி – தூவ பிரதேசத்தில் அமைந்துள்ள சமகிவத்தை குடியிடுப்பு பகுதியிலுள்ள முஸ்லிம் நபரொருவரின் வீடொன்றின்  மீது அதிகாலை வேளையில், பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.  http://www.jaffnamuslim.com/2017/11/blog-post_912.html 144. 20.11.2017 வவுனியா நகர பள்ளிவாசல் பகுதியில் அமைந்துள்ள கடைத்தொகுதியில் அதிகாலை 1.20 மணியளவில் எற்பட்ட தீ விபத்தில் இரு கடைகள் எரிந்து நாசமாகியுள்ளதுடன், இரு கடைகள் பகுதியளவில் எரிந்து சேதமாகியது. http://www.jaffnamuslim.com/2017/11/blog-post_180.html 143. 17.11.2017    300க்கும் மேற்பட்ட சிங்கள இளைஞர்கள் பல குழுக்களாகப் பிரிந்து கிந்தோட்டைக்குப் பிரவேசிக்கும் பாதைகளை எல்லாம் இடைமறித்த வண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக ஊருக்குள் பிரவேசித்து இரவு 9.30 மணியளவில் தம

ஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்

ஞானசாரவை தூண்டி அரசியல் செய்யும் ரிசாத்தும் ஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்பும் இதுவே இவர்களின் அரசியல் வியூகம் ...................................................................... ரிசாத்தின் வர்த்தக அமைச்சால் பொத்துவிலுக்கோ அல்லது அம்பாரை மாவட்டத்தின் மக்களுக்கோ கிடைத்த நன்மைகள் என்ன? அம் மக்களுக்கு நன்மை கிடைத்ததோ இல்லையோ அந்த மக்களை காட்டி அவருக்கு அரபு நாடுகளில் கிடைத்த நிதிகளே அதிகம். அவர்கள் சொல்லும் 50 வீடு எந்த வர்த்தக அமைச்சினால் வந்தது? அவர்கள் சொல்லும் பள்ளி வாயலுக்கு வழங்கப்பட்ட நிதி எங்கிருந்து வந்தது? எந்த வர்த்தக அமைச்சினால் வந்தது? இன்று இளைஞர்களை ஒன்றுபடச் சொல்லும் முஸர்ரப்பினால் ரிசாத்தை கொண்டு எத்தனை இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது? அவரின் அமைச்சைக் கொண்டு இந்த அம்பாரை மாவட்டத்தில் ஏதாவது ஒரு தொழில் பேட்டை அமைக்கப்பட்டதா? சம்மாந்துறையில் அமைப்பேன் எனக் கூறி அம் மக்களை ஏமாற்றியதே மீதியானது இவ்வாறான பொய் பொத்தலோடு நாம் எவ்வாறு ஒன்றுபடுவது? ஒவ்வொரு முறையும் ஞானசாரவை தூண்டி அரசியல் செய்யும் ரிசாத

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியான கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியான கரப்பாந்தாட்ட  விளையாட்டு மைதானம்  மதவாக்குள பிரதேசத்திற்கு  அமைத்து கொடுக்கப்ப்பட்டுள்ளது. கௌரவ முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அல்ஹாஜ் றிஷாத் பதுயுதீன் அவர்களின் நிதியின் மூலம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் புத்தள மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் முயற்சியினால் அகில இலங்கை மக்கள்  காங்கிரசின் மதவாக்குள கட்சிக் குழுவின் வேண்டுகோளுக்கு இணங்க மதவாக்குள பிரதேசத்திற்கு மிக நீண்டகால தேவைப்பாடாக இருந்த கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம் நேற்று கெளரவ அலி சப்ரி ரஹீம் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. அந்தவகையில் இந்த கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானமானது சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியாகும் எனவே இதனை  ஊருக்கு  அமைத்து கொடுத்தமைக்கு மதவாக்குள ஊர் மக்கள் மற்றும்இ விளையாட்டு குழு உறுப்பினர்கள் தங்கள் நன்றிகளை அகில இலங்கை மக்கள் காங்ரஸிற்கு  தெரிவித்து கொள்கின்றனர். ஊடகவியலாளர் சில்மியா யூசுப். 0769622313