ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டார்...!!!! ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். சிரிகொத்தவில் உள்ள கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தன் உறுப்பினர்களுக்கு புதிய பதவி நிலைகளை நியமித்தது. கட்சியின் பொதுச் செயலாளராக பணியாற்றிய அகில விராஜ் கரியவாசம் ஐ.தே.க உதவித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னர் உதவித் தலைவராக ரவி கருணநாயக்க காணப்பட்டார். அகில விராஜ் கரியவாசம் பதவியை ஏற்றுக்கொண்டு, ஐ.தே.க புதிய பொதுச் செயலாளராக பாலித ரங்க பண்டாராவை நியமித்தார். ஐ.தே.க வின் உறுப்பினர் வஜிர அபேவர்தனே தவிசாளராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார், ஏ.எஸ்.எம் மிஸ்பா பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய நியமனங்கள் இருந்தபோதிலும், முன்னாள் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கவே ஐ.தே.க தலைவராக நீடிப்பார். துணைத் தலைவர் ருவன் விஜேவர்தனவும் தனது பதவியில் தொடருவார்.
============================== ====================== மகப்பேறு,சிறுபிள்ளை பராமரிப்பு மற்றும் அவசர சிகிச்சை போன்ற பிரிவுகளில் இலங்கை வைத்திய அதிகாரிகளுக்கு பயிற்சிகளை வழங்குவதற்கு துருக்கி அரசு முன்வந்துள்ளது. இது தொடர்பான முதற் கட்ட பேச்சுவார்த்தை இலங்கையில் உள்ள துருக்கி நாட்டு தூதரக அதிகாரிகளுக்கும் சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசிமுக்கும் இடையில் நேற்று முன்தினம் புதன் கிழமை [29.08.2018] அமைச்சின் அலுவலகத்தில் இடம்பெற்றது. இப்பேச்சுவார்த்தையின்போது பல விடயங்களில் இணக்கம் காணப்பட்டது.அதன்படி,இலங்கை வைத்திய அதிகாரிகள் மற்றும் வைத்திய ஆலோசகர்களை துருக்கிக்கு அனுப்பி அந்நாட்டில் வைத்து பயிற்சிகளை வழங்குவதற்கும் அதேபோல் துருக்கி வைத்திய அதிகாரிகள் இலங்கைக்கு வந்து பயிற்சிகளை வழங்குவதற்கும் இந்தச் சந்திப்பில் தீர்மானம் எடுக்கப்பட்டது. இச்சந்திப்பின்போது இலங்கைக்கான துருக்கி தூதரகத்தின் இரண்டாம் நிலை செயலாளர் ஹக்கான் தான்,மூன்றாம் நிலை செயலாளர் நஸான் தேனீஸ்,கல்வி மற்றும் பயிற்சி வேலைத்திட்டத்தின் இணைப்பாளர் முஸ்தபா ஹசீம் பொலாத் ஆகியோர் கலந்துகொண்டனர். இலங்கை சுக