ஏப்ரல் 21 தாக்குதலுக்கு அப்போது ஆட்சியில் இருந்த அரசாங்கமும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுமே பொறுப்புக்கூற வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ வலியுறுத்திக் கூறினார். கிராமத்துடன் கலந்துரையாடல் வேலைத்திட்டத்தின் மற்றொரு கட்டம் குருணாகல் – கிரிபாவ, வேரகலவில் இன்று நடைபெற்றது. இதன்போது, ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான ஜனாபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் ஜனாதிபதி கருத்துக் கூறினார். பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படாததால், அவ்வாறான நிலை ஏற்பட்டமை ஆணைக்குழுவின் அறிக்கையில் தௌிவாவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். இலங்கையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஐ.எஸ் ஆதரவாளர்கள் இருப்பதுடன், ஐ.எஸ் தெற்காசியாவில் காட்டுத் தீ போல் பரவுவதாகவும் முற்போக்காக இருப்பதை விட செயற்திறன் மிக்கதாக இருக்க வேண்டும் எனவும் அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதுடன், இன மற்றும் மத முரண்பாட்டை தூண்டுவதனை தடுப்பதற்கு சட்ட வரையறை தயாரிக்கப்பட வேண்டியதன் தேவையும் வலியுறுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கூறினார். எனினும், துரதிர்ஷ்டவசமாக பிரதமர் விக்ரமசிங்க உள்ள
முஸ்லிம் பெண்கள் விவகரத்து - முஸ்லிம் பெண்கள் சட்டத்தரணிகள் அமைப்பினரையும் கலந்தாலோசித்தல் வேண்டுமாம்
அஷ்ரப் ஏ சமத்)
முஸ்லிம் விவாகரத்துச் சட்ட மறுசீரமைப்பு தொடர்பாக முஸ்லீம் அமைச்சர்கள் மற்றும் பாரளுமன்ற உறுப்பிணர்கள் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவுடன் நாளை(24) கலந்துரையாடும்போது முஸ்லிம் பெண்கள் அமைப்பினர், மற்றும் இத்துரையில் முஸ்லிம் பெண்கள் விவகரத்து விடயமாக பாடுபடுகின்ற முஸ்லிம் பெண்கள் சட்டத்தரணிகள் அமைப்பினரையும் கலந்தாலோசித்தல் வேண்டும். என முஸ்லிம் பெண்கள் அமைப்பினர் இன்று(23) வெள்ளவத்தையில் பெண்கள் அபிவிருத்தி நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலே மேற்கண்டவாறு தெரிவித்தனர்.
இவ் ஊடக மாநாட்டில் சட்டத்தரணி சபானா குரைஸ் பேகம், சட்டத்தரணி கசானா சேகு இஸ்ஸதீன், சட்டத்தரணி பிஸ்லியா பூட்டோ மற்றும் புத்தளம் முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கையகம்,பிரநிதி ஜூவைரியாஈ, மன்னார் மத்திய அபிவிருத்தி ஒன்றியம் என். றஸ்மியா ஆகியோறும் கருத்து தெரிவித்தனர்.
30 ஆண்டுகளுக்கு மேலாகப் பெண்கள் அமைப்புக்களும் முஸ்லிம் விவாக விவகாரத்துச் சட்டத்தினால் பாதிக்க்பட்ட பெண்களும் பல கட்டங்களிலும் பல தளங்களிலும் அச்சட்டத்தின் குறைபாடு பக்கசார்பு மற்றும் பாரபட்சம், சார்;ந்து குரல் எழுப்பியவர்கள் என்ற வகையில் கடந்த 9 வருடங்களாகக் கிடப்பிலிருந்து அறிக்கை வெளிக் கொண்டு வரப்பட்டுள்ளது. எனினும் பல தளங்களில் முஸ்லிம் பெண்களாகிய நாங்கள் “இது அரசின் கடப்பாடு மற்றும் பொறுப்பு என்பதோடு அவர்களினாலேயே மறுசீரமைபபினை நீதியமைச்சர் மூலம் சட்டவாக்கம் செய்ய வேண்டும். என்று கோரிக்கை விடுத்த போதும் நீதியமைச்சர் ஒரு பெண்ணாக இருந்தபோதிலும் முஸ்லிம் ஆண் பராளுமன்ற அங்கத்தவர்களது தீர்மானத்திற்கு மட்டும் இம் மறுசீரமைப்பினைக் கையளித்தமை மிகவும் மன வருத்தத்திற்குரிய விடயமாகும். 24ஆம் திகதி ஜூலை மாதம் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவும் மட்டு;ம் கலந்துரையாடுவதனால் பெண்கள் சார்பாக எவ்வகையான முடிவுகளும் எடுக்க்பபடும் என்பது எங்களுக்கு கேள்வியாக உள்ளது.
மலேசியா மற்றும் முஸ்லீம் நாடுகளில் பெண் காலியாhகள் பதவி வகிக்கின்றனர். அத்துடன் முஸ்லீம் பெண்கள் உயர் நீதி மன்ற மாவட்ட நீதிபதியாகவும் இலங்கையில் பதவி வகிக்கின்றனர் ஏன இதுவரை முஸ்லீம் பெண் சட்டத்தரணிகள் காதிநீதிபதியாக வரமுடியாது? அத்துடன் காதி மன்றத்தில் பெண்கள் சார்பாக அவர்களது பிரச்சினைகளை முன்வைப்பதற்கு சட்டத்தரணிக்ள ஆஜராக வேண்டும். பெண்களுக்கு போதிய பாதுகாப்பு இச் சட்டத்தில் போதிய நிவாரணம் இல்லை. அத்துடன் முஸ்லிம் பெண்களது திருமன வயது ஆக்ககுறைந்தது 18வயது நிர்ணயிக்கப்படல் வேண்டும்.
நீதியரசர் சலீம் மர்சூக் அவர்களினால் வெளியிடப்பட்ட அறிக்கை முஸ்லிம் நியாயாதிக்கம் மற்றும் இஸ்லாமிய வரைமுறைகளையும் ஏனைய முஸ்லிம் நாடுகளின் ஷரிஆ சட்டத்து நடைமுறைகளையும் உள்வாங்கியே காணப்படுகின்றது.
ஆகையால் நீதியமைச்சர் அவர்களிடம் வேண்டி கொள்வது யாதெனில்
பல வருடங்களாகக் கிடப்பிலிருந்த மறுசீரமைபபை முன்நோக்கிச் செல்வதற்கான நடவடிக்கையும் காலவரையறையையும் துரித கதியில் வெளிப்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
முஸ்லிம் பெண்களாகிய நாங்கள் நீதியரசர் சலீம் மர்சூக்கின் அறிக்கையில் உள்ள பரிந்துரைகளை எவ்வகையிலும் பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் அநீதி இழைக்காத முறையில் துரித கதியில் இவ் முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்தினை முஸ்லிம் பெண்களுக்கு சிறந்த பாதுகாப்பு நிவாரணம் அளிக்கும் வகையில் சட்டத்தினை மறுசீரமைத்து பாராளுமன்றததில் சமர்ப்பிக்குமாறு கோரிக்கை விடுக்கின்றோம்.
Comments
Post a comment