ஜின்னாஹ் ஷரிபுத்தீனின் காப்பிய வெளியீட்டு விழா
( மினுவாங்கொடை நிருபர் )
   "காப்பியக்கோ" டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன் எழுதிய, "அன்னை கதீஜாவும் அண்ணலார் குடும்பமும்" காப்பிய வெளியீட்டு விழா, கொழும்பு - 06, வெள்ளவத்தை, இலக்கம் 07, லில்லி அவெனியுவில் அமைந்துள்ள, சோனக இஸ்லாமிய கலாசார நிலைய அறிஞர் எஸ்.டி. சிவநாயகம் அரங்கில், (21)  சனிக்கிழமை மாலை  நடைபெற்றது.
   காரி மெளலவி அப்துல் ஜப்பார் (பஹ்ஜி) யின் இறை வாழ்த்துடன் ஆரம்பமாகிய  இச்சிறப்பு நிகழ்வில், அஷ்ஷெய்ஹ் அப்ழலுல் உலமா தைக்கா அகமது நாஸிர் ஆலிம் (பீ.ஏ.),(ஜலாலி - பாஸில் - ஜமாலி) வரவேற்புரையை நிகழ்த்தினார். இலங்கை சித்தி லெப்பை ஆய்வுப் பேரவை - தமிழ்நாடு இஸ்லாமிய இலக்கியக் கழகம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்த  இச்சிறப்பு விழா நிகழ்வுகளைப் படங்களில் காணலாம்.
( மினுவாங்கொடை நிருபர் )

Comments

popular posts

சற்றுமுன் தம்புள்ளையில் விபத்து

ACMC + SLMC இணைந்து பணியாற்ற தீர்மானம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் அனுப்பியுள்ள செய்தி