Skip to main content

ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் வருடாந்த பொதுக் கூட்டம்


( மினுவாங்கொடை நிருபர் )
   ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் வருடாந்த பொதுக் கூட்டம்,  எதிர்வரும் 21 ஆம் திகதி சனிக்கிழமை காலை 9  மணிக்கு,  கொழும்பு – 05 நாரஹேன்பிட்டி, பொல்ஹேன்கொட, இலக்கம் 163, கிருலப்பனை  எவன்யூவில் அமைந்துள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தின் புதிய கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.
   போரத்தின் தலைவர் என்.எம். அமீன் தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில், நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாஷிம் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பிக்கிறார்.  நிதி மற்றும் வெகுசன ஊடக பிரதியமைச்சர் லசந்த அழகியவன்ன, முன்னாள் வெளிவிவகார அமைச்சரும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், துருக்கி நாட்டின் இலங்கைக்கான தூதுவர் துன்கா ஓஸ்சுஹதார் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில பொதுச் செயலாளரும் தமிழ் நாடு கடையநல்லூர் சட்ட மன்ற உறுப்பினருமான கே. எம்.ஏ.முஹம்மத் அபூபக்கர், சமூக விஞ்ஞான அறிவியல் அறிஞரும், எழுத்தாளருமான புரவலர் எம். ஜே. முஹம்மத் இக்பால் மற்றும் அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி சுதர்ஷன குணவர்தன ஆகியோர் விஷேட அதிதிகளாகவும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
பொதுக்கூட்டத்தின் போது ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 2018/2020 ஆம் ஆண்டிற்கான புதிய நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் தெரிவு இடம்பெறும்.
   இதேவேளை,  மேற்படி நிர்வாக ஆண்டிற்கான தலைவராக சிரேஷ்ட ஊடகவியலாளர் என்.எம். அமீன், பொதுச் செயலாளராக என்.ஏ. எம். ஸாதிக் ஷிஹான், பொருளாளராக அஷ்ஷெய்க் ஜெம்ஸித் அஸீஸ் ஆகியோர்,  குறித்த மூன்று பதவிகளுக்கும் போட்டிகள் இன்றி ஏகமனதாக மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இது தவிர,  நிறைவேற்றுக் குழுவிற்கு பதினைந்து பேர் கொண்ட  உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ள நிலையில், இத்தெரிவிற்காக 32 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர். இதற்கான தெரிவு, பொதுக் கூட்டத்தின் போது வாக்களிப்பு மூலம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
  
நிறைவேற்றுக் குழுவிற்குப்  போட்டியிடுவோர் விபரங்கள் பின்வருமாறு :-
அல்ஹாஜ் எம். ஏ. எம். நிலாம் (லேக் ஹவுஸ்),
அல்ஹாஜ் எம். இஸட். அஹமத் முனவ்வர் (வானொலி),
எஸ். ஏ. அஸ்கர் கான் (நொலேட்ஜ் பொக்ஸ்),
அல்ஹாஜ் ஹில்மி மொஹம்மட் (அமைச்சு ஊடகப்  பிரிவு),
மௌலவி எஸ். எம். எம். முஸ்தபா (பிராந்திய ஊடகவியலாளர்), அல்ஹாஜ் ஜாவிட் முனவ்வர் (வானொலி), அல்ஹாஜ் கலைவாதி கலீல் (நவமணி),
எம். பி. எம். பைறூஸ் (விடிவெள்ளி),
புர்கான் பீ. இப்திகார் (வானொலி),
பியாஸ் முஹம்மட் (மீள்பார்வை),
ஏ. ஜே. எம். பிரோஸ் (நவமணி/அமைச்சு ஊடகப்  பிரிவு),
நுஸ்கி முக்தார் (டெய்லி சிலோன்),
எம்.எப். ரிபாஸ் (பிராந்திய ஊடகவியலாளர்), எஸ். எம். சர்ஜான் (டெய்லி சிலோன்),
ஸமீஹா ஸபீர் (தொலைக்காட்சி),  ஷாமிலா ஷெரீப் (வானொலி),
அல்ஹாஜ் சுஐப் எம். காசிம் (அமைச்சு ஊடகப்  பிரிவு),
அல்ஹாஜ் ரிப்தி அலி (விடியல் -  இணையத் தளம்),
எஸ். ஏல். அஸீஸ் (பிராந்திய ஊடகவியலாளர்),  பிஸ்ரின் மொஹம்மட் (யூ.ரி.வி. -  தொலைக்காட்சி), அஷ்ஷெய்க் ஆதில் அலி சப்ரி (நவமணி),
ஏ. ஆர். பரீட் (தினகரன்),
பஸ்ஹான் நவாஸ் (இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்),
எம். எஸ். எம். ஸாஹிர் (நவமணி),
ஏ. மொஹம்மட் பாயிஸ் (அரசாங்க தகவல் திணைக்களம்),
ஐ. எம். இர்ஷாத் (எங்கள் தேசம்),
ஐ. ரியாஸ் (பிராந்திய ஊடகவியலாளர்),  அனஸ் அப்பாஸ் (தேசிய ஊடக மையம்),
எம். லாபிர் (பிராந்திய ஊடகவியலாளர்),  ஏ. ஆர். முஹம்மட் ரிபாஸ் (வானொலி), டாக்டர் ஏ. ஆர். ஏ. ஹபீஸ் (அமைச்சு ஊடகப் பிரிவு),
பலீலுர் ரஹ்மான் (பிராந்திய ஊடகவியலாளர்)
ஆகியோரே இம்முறை போட்டியிடுகின்றவர்களாவர். 
( ஐ. ஏ. காதிர் கான் )

Comments

Popular posts from this blog

அதாவுல்லாவை புக‌ழும் ஹ‌ரீஸ்

ஒவ்வொரு நிமிடமும் நம்மை நோக்கி எறிகணைகள் வந்த வண்ணமே இருக்கிறது. நாங்கள் ஒற்றுமைப்பட்டு இனி செயலாற்ற முன்வர வேண்டும். அம்பாறை மாவட்டத்தில் உள்ள சகல அரசியல் கட்சி முக்கியஸ்தர்களும் ஒன்றிணைந்து எதிர்வரும் பொதுத்தேர்தலை சந்தித்து நாங்கள் ஒற்றுமையாக வாக்களித்தால் அம்பாறை மாவட்டத்தில் இருந்து ஐந்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாவார்கள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி  எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.

 தொடர்ந்தும் அங்கு பேசும் போது,

கல்முனை பிரதேச விவகாரம் பற்றிய பிரதமருடனான கலந்துரையாடலுக்கு குறித்த தொகுதியின் மக்கள் பிரதிநிதியாகிய எனக்கு எவ்வித அழைப்புக்களும் விடுக்கப்பட்டிருக்க வில்லை. நான் நேரடியாக பிரதமர் மஹிந்தவை சந்தித்து மக்களின் பிரச்சினையை பற்றி தெளிவாக விளக்கியவுடன் அன்று மாலை என்னையும் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறும் அதற்கான ஏற்பாடுகளை தான் செய்வதாகவும் வாக்குறுதியளித்தார். அதன் பிரகாரமே நான் அக்கூட்டத்திற்க்கு சென்று வரவேற்பறையில் காத்திருந்தேன். அங்கு கலந்து கொண்டிருந்த முக்கிய பிரமுகர்கள் பலரும் அதிருப்தியுடன…

Sri Lanka COSMI Founder President appointed to London’s Peace Institute

The Founder President of Sri Lanka’s Confederation of Micro, Small and Medium Industries (COSMI) has been appointed as the Co-Chairperson of theLondon based Global Peace Institute (GPI)which conducts interdisciplinary research in several thematic fields including international relations and politics. By this high profile appointment made on 15 January, GPI seeks COSMI Founder President Nawaz Rajabdeen’s contributions to improve its training and research efforts. GPI is a think tank run by the UK based Global Peace Ins. (GPI) CIC, an independent non-profit, non-governmental organization. GPI works for global peace and resilience through peace education, dialogue, training, creating awareness and research. COSMI Founder President Rajabdeen, as an honorary member, is also tasked by GPI to promote its programs, add value to research work, and also will be required to attend various GPI events. “I am thankful to GPI for enlisting me for their ongoing and vast efforts” said COSMI Founder Pres…

மைத்திரிபால ஒரு புத்திஜீவியாகவோ, அறிஞராகவோ அவருடைய ஆட்சிக் காலத்தில் செயற்படவில்லை.

சிறுபான்மையினரின் வாக்குகளே
பிரதமர் யார் என்பதை தீர்மானிக்கும் !

சஜீத் − ரணில் பிரச்சினை
கூட்டனிக்கு பாதிப்பில்லை !!

நான் நிரபராதி என்பதை
சிங்கள மக்கள் உணர்வர் !!!

ஆட்சியில் இணையுமாறு அழைப்பு
வந்தால் தீர்மானிக்கலாம் !!!!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத் தலைவர் ரிஷாத் பதியுதீன் பி.பி.சிக்கு பரபரப்பு பேட்டி....

அப் பேட்டியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது...;

கேள்வி:
தற்போது நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் தலைவர்களை தமது அரசாங்கத்தில் சேர்த்துக் கொள்வதில்லை என்றுகூறி ஆளுந்தரப்பு நிராகரித்திருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பதில்:
ஆளுங்கட்சியில்தான் இருக்க வேண்டும் என்கிற நிலைப்பாட்டுடன் நாம் அரசியல் செய்யவில்லை.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கிடைத்த 69 லட்சம் வாக்குகளை எதிர்வரும் பொதுத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ அணியினர் ஒட்டுமொத்தமாகப் பெற்றாலும், அவற்றினைக் கொண்டு நாடாளுமன்றத்திலுள்ள 225 ஆசனங்களில் 105 ஆசனங்களை மட்டுமே கைப்பற்ற முடியும். அதேவேளை, எதிர்த்தரப்பினருக்கு 119 ஆசனங்கள் கிடைக்கும். எனவே, எதிர்வரும் பொதுத் தேர்தல் சவால் மிகுந்ததாகவே அமையும்…