Skip to main content

Posts

Showing posts from July, 2018

சிங்களவரும் தமிழரும் இலங்கை வருமுன் யாழ்ப்பாணத்தில் 2700 முன் வாழ்ந்த மக்கள்

பாறுக் ஷிஹான் யாழ்ப்பாணம் கோட்டைக்குள் உள்ள சிறைச்சாலைக்கு அண்மையாக நடத்தப்பட்ட அகழ்வு ஆய்வுப் பணிகளில் அங்கு 2 ஆயிரத்து 700 ஆண்டுகளுக்கு முன்னர், ஆதி இரும்புக் கால மக்கள் வாழ்ந்ததற்கான நம்பகரமான உறுதியான சான்று கண்டுபிடிக்கப்பட்டது இவ்வாறு தொல்லியல் பேராசிரியர் ப.புஷ்பரட்ணம் தெரிவித்தார். கோட்டைப் பகுதியில் வாழ்ந்த மக்கள், தென்கிழக்கு ஆசியா, மேற்கு ஆசியா மற்றும் ஆபிரிக்கா நாடுகளுடன் வணிக உறவு கொண்டிருந்தமையையும் அதன் முக்கிய நிலையமாக யாழ்ப்பாணம் கோட்டைப் பிரதேசம் அமைந்திருந்தது என்பதையும் உறுதிப்படுத்தும் சான்றுகளும் உள்ளன என்று அவர் சுட்டிக்காட்டினார். யாழ்ப்பாணம் கோட்டைப் பகுதியில் கடந்த 2 வருடங்களாக முன்னெடுக்கப்பட்ட அகழ்வு ஆராய்ச்சிப் பணிகள் தொடர்பில் விளக்கமளிக்கும் செய்தியாளர் சந்திப்பு சனிக்கிழமை(28) தொல்பொருள் திணைக்களத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.  அவர் மேலும் தெரிவித்ததாவது, 2017ஆம் ஆண்டு போருக்குப் பிந்திய தொல்லியல் ஆய்வுப் பணிகள் யாழ்ப்பாணம் கோட்டைப் பகுதியில் முன்னெடுக்கப்பட்டன. யாழ்ப்பாணக் கோட்

புதிய தேர்தல் முறைமையை முஸ்லிம் காங்கிரஸ் ஆதரித்தது ஏன்?

பிரதி அமைச்சர் பைசல் காசீம் விளக்கம் ========================================== ''மாகாண சபைகளில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படாதவாறு தொகுதிகள் பிரிக்கப்படும்  என்று பிரதமரும் ஜனாதிபதியும் எமக்கு வாக்குறுதி வழங்கியதன் காரணத்தாலேயே நாம் மாகாண சபை திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களித்தோம்.ஆனால், அந்த வாக்குறுதி மீறப்பட்டு முஸ்லிம்களுக்கு ஆபத்து ஏற்படும் வகையில் தொகுதிகள் பிரிக்கப்பட்டுள்ளதால் புதிய முறைமையின்கீழ் தேர்தலை நடத்துவதற்கு நாம் இணங்கமாட்டோம்.பழைய முறைமையின் படியே தேர்தல் நடத்தப்பட வேண்டும்.'' இவ்வாறு சுகாதார,போசாக்கு மற்றும் சுதேச வைத்திய பிரதி அமைச்சர் பைசல் காசீம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு: மாகாண சபைத் தேர்தலை புதிய முறையில் நடத்துவதிலோ அல்லது பழைய முறையில் நடத்துவதிலோ எங்களுக்கு எதுவிதப் பிரச்சினையும் இல்லை.எங்களது குறி  எல்லாம் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தின் மீதுதான் உள்ளது.எங்களது பிரதிநிதித்துவம் பாதிக்கப்படக்கூடாது என்பதில் நாம் கவனமா

அரசியல் சித்துவிளையாட்டில் அனாதையாக மாறிவரும் அம்பாறை மாவட்டம்.

இலங்கையில் அதிக முஸ்லிங்கள் வாழும் மாவட்டத்தில் முதன்மையானதும், அதிக முஸ்லிம் எம்.பிக்கள் இருக்கின்றதுமான மாவட்டமே இந்த அம்பாறை மாவட்டம். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஆணிவேராகவும், அந்த கட்சியின் அதிமுக்கிய பதவிநிலை தலைவர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் வாழும் இடமாகவும் இருக்கும் இந்த மாவட்டம் இன்றும் அரசியல் அனாதையாகவே இருக்கின்றது. 1. சுனாமியால் சகலதையும் இழந்த மக்களுக்கு  சவூதி அரேபியா மக்களின் நன்கொடையாக வழங்கப்பட்ட நுரைச்சோலை வீட்டுத்திட்டம் காடாகி பாவனைக்கு உகந்த தன்மையை இழந்து நிற்கிறது. 2. சிலரின் தூர நோக்கு இல்லாத துறைமுக  திட்டத்தின் மூலம் ஒலுவில் எனும் கிராமம் சில வருடங்களில் கடலுடன் சங்கமித்து விடும் நிலைக்கு மாறி விட்டது. 3. கல்முனை, சாய்ந்தமருது, மருதமுனை, சம்மாந்துறை,அட்டாளைச்சேனை, நிந்தவூரின் அபிவிருத்தி திட்டங்கள் இன்றும் கனவாகவே இருந்து வருகிறது. 4. பொத்துவில் மக்களின் குடிநீர் தட்டுப்பாடு , வட்டமடு காணி பிரச்சினை 5. இறக்காமத்தின் மத்தியில் சில வருடங்களுக்கு முன்னர் முஸ்லிங்கள் வாழும் பிரதேசத்தில் நடைபெற்ற அத்துமீறல் சம்பவங்கள் என பட்டியல் நீண

உல‌மா ச‌பையின் முர‌ண்ப‌ட்ட‌ கொள்கையை காட்டுகிற‌து

வானிய‌லின் அறிவிப்பை ஏற்று இன்று ச‌ந்திர‌ கிர‌க‌ண‌ம் ஏற்ப‌டும் என்றும் அத‌ன்ப‌டி ச‌ந்திரகிர‌க‌ர‌ண‌ தொழுகை தொழும்ப‌டியும் அகில‌ இல‌ங்கை ஜ‌ம்மிய்ய‌த்துல் உல‌மா கூறிவிட்டு பிறை விட‌ய‌த்தில் ம‌ட்டும் வானிய‌ல் அறிவிப்பை ஏற்க‌ முடியாது என‌ சொல்வ‌து உல‌மா ச‌பையின் முர‌ண்ப‌ட்ட‌ கொள்கையை காட்டுகிற‌து என‌ உல‌மா க‌ட்சி தெரிவித்துள்ள‌து. ச‌ந்திர‌ன், பிறை போன்ற‌ விட‌ய‌த்தில் முஸ்லிம்க‌ளுக்கு தெளிவான‌ வ‌ழிகாட்ட‌லை செய்ய‌ வேண்டிய‌ உல‌மா ச‌பை தொட‌ர்ந்தும் தாமும் குழ‌ம்பி ம‌க்க‌ளையும் குழ‌ப்பிக்கொண்டிருப்ப‌து க‌வ‌லையான‌ விட‌ய‌ம். ச‌ந்திர‌ன் என்ப‌து பிறை என்ப‌தும் முழு உல‌குக்கும் ஒன்றுதான். அந்த‌ வ‌கையில் இன்று பிறை 14 பூர‌ண‌ ச‌ந்திர‌னின் நாளாகும் என்ப‌தை முழு உல‌கும் ஏற்றுக்கொண்டுள்ள‌து.  இத‌னை உல‌மா ச‌பையும் ஏற்றுக்கொண்டு இன்றைய‌ பௌர்ண‌மியில் ஏற்ப‌டும் ச‌ந்திர‌ கிர‌க‌ண‌ம் ச‌ம்ப‌ந்த‌மாக‌ வானிய‌ல் அறிவிப்பை தேவ‌ வாக்காக‌ ஏற்று கிர‌க‌ர‌ண‌ தொழுகை தொழும்ப‌டி அறிவித்தும் உள்ள‌து. அதே வேளை உல‌மா ச‌பையால் வெளியிட‌ப்ப‌ட்டுள்ள இம்மாத‌த்துக்கான‌ பிறைக்க‌ல‌ண்ட‌ரில் இன்றைய‌ ச‌ந்திர‌ திக‌தி 13 என‌ குறிப்

ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியால் அளுத்கம கலவரத்தில் பெருமளவு சொத்துக்களை இழந்த 128 பேருக்கு நட்டஈடு

நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியால் 2014ஆம் ஆண்டு இடம்பெற்ற அளுத்கம கலவரத்தில் பெருமளவு சொத்துக்களை இழந்த 128 பேருக்கான 182 மில்லியன் ரூபாய் நட்டஈடு நாளை வியாழக்கிழமை வழங்கி வைக்கப்படவுள்ளது.  இந்நிகழ்வு நாளை வியாழக்கிழமை மாலை 3 மணிக்கு தர்கா நகர் ஸாஹிரா கல்லூரி பிரதான மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. சுகாதாரம், போசைனைகள் மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரட்ன பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ள இந்நிகழ்வில், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மற்றும் பிரதியமைச்சர் காதர் மஸ்தான் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.  இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சராக பதவி வகித்த போது 2014ஆம் ஆண்டு பேருவளை, அளுத்கம மற்றும் தர்கா நகர் ஆகிய பகுதிகளில்  இடம்பெற்ற இனக்கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நட்

தமிழ் நாடு கடையநல்லூர் சட்ட மன்ற உறுப்பினர் கே. எம்.ஏ.முஹம்மத் அபூபக்கர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம்

பாறுக் ஷிஹான்- இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில பொதுச் செயலாளரும் தமிழ் நாடு கடையநல்லூர் சட்ட மன்ற உறுப்பினருமான கே. எம்.ஏ.முஹம்மத் அபூபக்கர் யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் (23) விஜயம் செய்ததுடன் பல்வேறு தரப்பினரையும் சந்தித்துள்ளார்.   யாழ்ப்பாணம் வருகை தந்த அவர்  மஸ்ஜிதுல் முஹம்மதியா  பள்ளிவாசலில் யாழ்ப்பாணம் முஸ்லீம் பிரதிநிதிகள் சிலருடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தார். பின்னர் ஒஸ்மானியாக் கல்லூரி, யாழ் வணிகர் கழகம் ,உதயன் காரியாலயம், நல்லூர் பகுதி , மற்றும் யாழில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் பல தரப்பினரையும் சந்தித்துள்ளார். இவரது இக் கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா வட மாகாண சபை அவைத்தலைவர்  சி.வி.கே.சிவஞானம், வடக்கு மாகாண எதிர்கட்சி தலைவர்   அ.தவராசா  மாகாணசபை உறுப்பினரான அய்யூப் அஸ்மின் சயந்தன்    ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் பொதுச் செயலாளராக என்.ஏ. எம். ஸாதிக் ஷிஹான்  மற்றும் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்

சிங்களவர்களுக்கு முன்னர் தமிழர்கள்?

இந்நாட்டில் சிங்களவர்களுக்கு முன்னர் தமிழர்கள் குடியிருந்துள்ளார்கள் என்பதை முடியுமானால் நிரூபிக்குமாறு வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு சவால் விடுத்துள்ளார் பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மம்பில. இந்நாட்டில் சிங்களவர்களுக்கு முன்னர் தமிழ் மக்களே குடியிருந்துள்ளதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்த கருத்து பத்திரிகைகளில் வெளியாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்தக் கருத்தை முடியுமாயின் நிரூபிக்குமாறு அவருக்கு சவால் விடுக்கின்றேன் எனவும் கம்மம்பில எம்.பி. மேலும் கூறினார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைத் தெரிவித்தார்.

ஷரீஅத்தோடு விளையாடுவதை, முஸ்லிம் பெண் சட்டத்தரணிகள் நிறுத்த வேண்டும்

Arafath ALM Monday, July 23, 2018  இன்று -23- பகல் கொழும்பில் மேற் குறிப்பிட்ட அமைப்புக்களின் பிரதி நிதிகள் என கூறிக்கொள்ளும் சுமார் ஒரு டசினுக்குற்பட்ட பெண்கள் கூடியிருந்தனர். அங்கு பத்திரிகையாளர்களும் சமூகமளித்திருந்தனர். அக் கூட்டத்தில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவை குற்றம் சுமத்தி பலர் கருத்து வெளியிட்டனர். தாம் பெண்கள் விவகாரமாக நீண்ட காலம் சம்பந்தப்பட்டிருந்ததாக கருத்து வெளியிட்ட அவர்கள் தமக்கு முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டம் சம்பந்தமாக உலமாக்களை அடக்கிய குழு சமர்பித்த அறிக்கையில் திருப்தி காணாமையினால் உலமா சபையை மிகவும் மோசமாக விமர்சித்தனர். முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டம் என்பது முஸ்லிம்களுக்கென்றே ஏற்படுத்தப்பட்ட ஒன்று என்பதை புரியாத அவர்கள் மற்ற சமூகத்தவர்களுக்கு உள்ளது போல் பெண்களுக்கான வயதெல்லை பதினெட்டாக அமைய வேண்டும் என்று கூறியதோடு அவர்கள் வெளியிட்ட கூட்டறிக்கையிலும் குறிப்பிட்டுள்ளனர். இஸ்லாத்தில் மாத்திரமே பருவமடைந்த பெண் பிள்ளைக்கு திருமணம் பேசலாம் என்ற அணுமதியுள்ளது. இந்த ஒழுங்கு இல்லாதததனால் பருவமடைய முன்பே காதலில் ஈடுபடும் சிறுவர்கள் பிள்ளை பெற்றெ

முஸ்லிம் பெண்கள் விவகரத்து - முஸ்லிம் பெண்கள் சட்டத்தரணிகள் அமைப்பினரையும் கலந்தாலோசித்தல் வேண்டுமாம்

அஷ்ரப் ஏ சமத்) முஸ்லிம் விவாகரத்துச் சட்ட மறுசீரமைப்பு தொடர்பாக முஸ்லீம் அமைச்சர்கள் மற்றும் பாரளுமன்ற உறுப்பிணர்கள் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவுடன் நாளை(24) கலந்துரையாடும்போது முஸ்லிம் பெண்கள் அமைப்பினர், மற்றும் இத்துரையில் முஸ்லிம் பெண்கள் விவகரத்து விடயமாக பாடுபடுகின்ற முஸ்லிம் பெண்கள் சட்டத்தரணிகள் அமைப்பினரையும் கலந்தாலோசித்தல் வேண்டும்.  என முஸ்லிம் பெண்கள் அமைப்பினர் இன்று(23) வெள்ளவத்தையில் பெண்கள் அபிவிருத்தி நிலையத்தில்  நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலே மேற்கண்டவாறு தெரிவித்தனர். இவ் ஊடக மாநாட்டில் சட்டத்தரணி சபானா குரைஸ் பேகம், சட்டத்தரணி கசானா சேகு இஸ்ஸதீன், சட்டத்தரணி பிஸ்லியா பூட்டோ மற்றும் புத்தளம் முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி  நம்பிக்கையகம்,பிரநிதி ஜூவைரியாஈ,  மன்னார் மத்திய அபிவிருத்தி ஒன்றியம் என். றஸ்மியா ஆகியோறும் கருத்து தெரிவித்தனர். 30 ஆண்டுகளுக்கு மேலாகப் பெண்கள் அமைப்புக்களும் முஸ்லிம் விவாக விவகாரத்துச் சட்டத்தினால் பாதிக்க்பட்ட பெண்களும் பல கட்டங்களிலும் பல தளங்களிலும் அச்சட்டத்தின் குறைபாடு பக்கசார்பு மற்றும் பாரபட்சம், சார்;ந்து குரல்

சாய்ந்தமருதில் சயேற்சை இருந்தும் சகாதார சீர்கேடு

எம்.வை.அமீர்  சாய்ந்தமருது பொலிவேரியன் கிராமத்தை அண்டிய பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள மனித கழிவுகளை (மலசல கூட கழிவுகள்) கையாளும் நிலையத்தினால் ஏற்பட்டுவரும் சுகாதார சீர்கேடு தொடர்பில் கல்முனை மாநகர சபை சாய்ந்தமருது சுயற்சைக் குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்ட மகஜர் ஒன்றை 2018.07.20ம் திகதி வெள்ளிக்கிழமை  கையளித்துள்ளனர். மேற்படி மகஜரை சாய்ந்தமருதைச் சேர்ந்த மாநகர சபை கௌரவ உறுப்பினர்களான எம்.எஸ்.அப்துல் றபீக், எம்.வை.எம்.ஜஹ்பர், ஏ.ஆர்.எம். அஸீம், எம்.ஐ.ஏ.அஸீஸ் ஆகியோர் இணைந்து அம்பாறை மாவட்ட செயலாளர், சூழல் பாதுகாப்பு அதிகாரசபை உதவிப் பணிப்பாளர், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், கல்முனை மாநகர முதல்வர், கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஆகியோருக்கு கையளித்தனர். குறித்த நிலையம் சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல் பின்புறமாக அமைந்துள்ள பிரதேசத்தில், சாய்ந்தமருதில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்கள் வாழும் பொலிவேரியன் கிராமத்திற்கு அண்மையிலேயே உள்ளது. இந்த மனிதக் கழிவு பராமரிப்பு நிலைய கட்டிடத்துடன

கிழக்கில் அரச தொழில் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை நியமனம் செய்ய பேச்சு!

இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவிப்பு கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகளை இருக்கின்ற அரச தொழில் வெற்றிடங்களுக்கு நியமிப்பது சம்பந்தமாக கிழக்கு மாகாண ஆளுனருடன் கலந்துரையாடியுள்ளதாக நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.  காத்தான்குடி ஹிழுறியா வித்தியாலயத்தில் 8 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள வகுப்பறை கட்டிட அடிக்கல் நடும் விழா இன்று திங்கட்கிழமை பாடசாலை வளாகத்தில் பாடசாலை அதிபர் யாசீர் அரபாத் தலைமையில் இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பங்கேற்று உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.  அதேபோன்று,  காத்தான்குடி தாருஸ்ஸலாம் வித்தியாலயத்தில் 6 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள இரு மாடி வகுப்பறை கட்டிட அடிக்கல் நடும் நிகழ்வும் இன்று திங்கட்கிழமை பாடசாலை அதிபர் முனீர் அஹமட் தலைமையில் நடைபெற்றது. இதிலும் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.  இதன்போது மேலும் க

ஜின்னாஹ் ஷரிபுத்தீனின் காப்பிய வெளியீட்டு விழா

( மினுவாங்கொடை நிருபர் )    "காப்பியக்கோ" டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன் எழுதிய, "அன்னை கதீஜாவும் அண்ணலார் குடும்பமும்" காப்பிய வெளியீட்டு விழா, கொழும்பு - 06, வெள்ளவத்தை, இலக்கம் 07, லில்லி அவெனியுவில் அமைந்துள்ள, சோனக இஸ்லாமிய கலாசார நிலைய அறிஞர் எஸ்.டி. சிவநாயகம் அரங்கில், (21)  சனிக்கிழமை மாலை  நடைபெற்றது.    காரி மெளலவி அப்துல் ஜப்பார் (பஹ்ஜி) யின் இறை வாழ்த்துடன் ஆரம்பமாகிய  இச்சிறப்பு நிகழ்வில், அஷ்ஷெய்ஹ் அப்ழலுல் உலமா தைக்கா அகமது நாஸிர் ஆலிம் (பீ.ஏ.),(ஜலாலி - பாஸில் - ஜமாலி) வரவேற்புரையை நிகழ்த்தினார். இலங்கை சித்தி லெப்பை ஆய்வுப் பேரவை - தமிழ்நாடு இஸ்லாமிய இலக்கியக் கழகம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்த  இச்சிறப்பு விழா நிகழ்வுகளைப் படங்களில் காணலாம். ( மினுவாங்கொடை நிருபர் )

World Bank supported Trade Information

Sri Lanka’s TIP is to be unveiled on the morning of July 20 at Kingsbury Hotel jointly by Minister Bathiudeen, (HE) Australian High Commissioner Bryce Hutchesson, World Bank Senior Trade Specialist Marcus Bartley Johns and many top officials from the government. It is hosted by the Department of Commerce in collaboration with the National Trade Facilitation Committee, and developed with support from the World Bank and Australian High Commission in Sri Lanka. World Bank supported Trade Information Portals (TIP) across the world provide information that traders need to import and export goods, including information on permits, laws and taxes. TIP provides the much needed transparency which leads to lower trade costs and improved predictability, and it is a key objective of international agreements like the World Trade Organization’s Trade Facilitation Agreement (TFA). The World Bank Group has supported TIPs in more than a dozen countries (Vietnam, was the last country to join

அம்பாறை மாவட்ட பள்ளிவாசல்களுக்கு ஐம்பது லட்சம் ரூபா நிதி

அம்பாறை மாவட்ட பள்ளிவாசல்களுக்கு ஐம்பது லட்சம்  ரூபா நிதி  - பிரதி அமைச்சர் பைஸல் காஸீம்   ஒதுக்கீடு - - ============================== ==================== அம்பாறை மாவட்டத்தில் உள்ள பத்து பள்ளிவாசல்களின் திருத்த வேலைகளுக்காக சுகாதார , போசாக்கு மற்றும் சுதேச வைத்திய பிரதி அமைச்சர் பைஸல் காஸீம் தலா ஐந்து லட்சம் ரூபா வீதம்  50  லட்சம் ரூபாவை ஒதுக்கியுள்ளார். அந்த பள்ளிவாசல்களின் நிர்வாக சபைகள்    பிரதி அமைச்சரிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாகவே இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி , நிந்தவூர் மஸ்ஜிதுல் முஜாஹிதீன் பள்ளிவாசல் , நிந்தவூர் மஸ்ஜிதுல் காஸிமி பள்ளிவாசல் , நிந்தவூர் மஸ்ஜிதுல் ஹுதா ஜூம்ஆ பள்ளிவாசல் , நிந்தவூர் மஸ்ஜிதுல் புர்கான் பள்ளிவாசல் , நிந்தவூர் ஜாமியுத் தஹ்ஹீத் பள்ளிவாசல் , ஒலுவில் ஜூம்ஆ பெரிய பள்ளிவாசல் , பாலமுனை தானே அல்-புசைரி ஜூம்ஆ பள்ளிவாசல் , பொத்துவில் ரஹ்மானியா நகர் பள்ளிவாசல் , இறக்காமம் ஜூம்ஆ பெரிய பள்ளிவாசல் மற்றும் மாவடிப்பள்ளி புதிய ஜூம்ஆ பள்ளிவாசல் ஆகிய பத்து பள்ளிவாசல்களுக்கே இந்த நிதி ஒதுக்கப்பட்டது. இந்த நிதி தற்போது பிரதி    அமைச்சரால்

வடபுல வாழ்வியல் மீள் எழுச்சி நூலின் மறு வெளியீட்டு விழா அக்கரைப்பற்றில்

பத்திரிகையாளர் சுஐப் எம் .காசிம் எழுதிய   " வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்ற சவால்கள்" என்ற நூலின்     அறிமுக விழா எதிர்வரும் திங்கட் கிழமை 23   ம் திகதி மாலை   4;00   மணிக்கு அக்கரைப்பற்று பிரதான வீதி   ,   ரி .எப் .சி மண்டபத்தில் இடம்பெறவுள்ளது .   அஷ்ஷெய்க்   எஸ் .எல்.எம்.ஹனிபா மதனி தலைமையில் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில் மீன்பிடித்துறை   , கடல்வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் அமீர் அலி பிரதம அதிதியாக கலந்து கொள்கின்றார். கெளரவ அதிதிகளாக வேதாந்தி சேகு இஸ்ஸதீன்   ,   முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.ரி ஹசன் அலி   ,   பாராளுமன்ற உறுப்பினர்களான அப்துல்லா மஹ்ரூப்   ,   ஏ   . எல் .எம். நசீர் கலாநிதி எம் எஸ் எம் இஸ்மாயில் , முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கிரபைட் நிறுவன தலைவருமான       எம் .ஏ .அப்துல் மஜீத்   ,   முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான எம் .எஸ் .உதுமாலெவ்வை   , கே .எம் .அப்துல் ரசாக்   ,   எம்.ஏ .எம் .அமீர்   ,   ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இந்த நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் எம்.எம். தாஹிர்   ,   அக்கரைப்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் வருடாந்த பொதுக் கூட்டம்

( மினுவாங்கொடை நிருபர் )    ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் வருடாந்த பொதுக் கூட்டம்,  எதிர்வரும் 21 ஆம் திகதி சனிக்கிழமை காலை 9  மணிக்கு,  கொழும்பு – 05 நாரஹேன்பிட்டி, பொல்ஹேன்கொட, இலக்கம் 163, கிருலப்பனை  எவன்யூவில் அமைந்துள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தின் புதிய கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.    போரத்தின் தலைவர் என்.எம். அமீன் தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில், நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாஷிம் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பிக்கிறார்.  நிதி மற்றும் வெகுசன ஊடக பிரதியமைச்சர் லசந்த அழகியவன்ன, முன்னாள் வெளிவிவகார அமைச்சரும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், துருக்கி நாட்டின் இலங்கைக்கான தூதுவர் துன்கா ஓஸ்சுஹதார் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில பொதுச் செயலாளரும் தமிழ் நாடு கடையநல்லூர் சட்ட மன்ற உறுப்பினருமான கே. எம்.ஏ.முஹம்மத் அபூபக்கர், சமூக விஞ்ஞான அறிவியல் அறிஞரும், எழுத்தாளருமான புரவலர் எம். ஜே. முஹம்மத் இக்பால் மற்றும் அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி

حزب العلماء المسلمين بسريلانكا

حزب العلماء المسلمين بسريلانكا. هو دعوة المسلمين وحدتهم سياسيا ودينيا على كتاب الله وسنة رسوله  و السعي لحصول حقوق المسلمين وحمايتهم تحت دستور الدولة ورفع صوت المسلمين في مجلس البرلمان والجلسات الاخرى داخليا ودوليا 

ரயில்களில் வர்த்தகத்தில் மற்றும் யாசகத்தில் ஈடுபட்ட 15 பேர் கைது

( மினுவாங்கொடை நிருபர் )    ரயில்களில் அனுமதியின்றி வர்த்தகத்தில் ஈடுபட்டமை மற்றும் யாசகம் கோரியமைக்காக 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.    கொழும்பு மற்றும் கம்பஹா போன்ற பிரதேசங்களில் ஒரு வார காலமாக முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.    பயணிகளுக்கு அசௌகரியம் ஏற்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, ரயில்வேத்  திணைக்களம் தெரிவித்துள்ளது.    கொழும்பு - கோட்டை மற்றும் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றங்களில் சந்தேகநபர்கள் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.    ரயில்களில் வர்த்தகத்தில் ஈடுபடல், யாசகம் கேட்டல் போன்ற செயற்பாடுகள்,  கடந்த முதலாம் திகதி முதல் தடை செய்யப்பட்டுள்ள நிலையிலேயே இக்குற்றங்களைப் புரிந்ததற்காக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.    இது தொடர்பிலான சகல முறைப்பாடுகளையும் 011 23 36 614 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக முன்வைக்க முடியும் என, ரயில்வேத் திணைக்களம்  அறிவித்துள்ளது. ( ஐ. ஏ. காதிர் கான் )

வல்லரசுகளின் சதியால் முஸ்லிம்களுக்கு பிரச்சினை! இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்

வல்லரசுகளின் சதியால் முஸ்லிம்களுக்கு பிரச்சினை! இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவிப்பு  ++++++++++++++++++++++++++++++ +++++++++++++++++++++++++ இலங்கையில் மாத்திரமல்லாது சர்வதேச ரீதியில் முஸ்லிம்கள் மிகவும் நெருக்கடிகளுக்கும் - பிரச்சினைகளுக்கும் மத்தியில் வாழந்து வருவதாகவும், வல்லரசு நாடுகளின் சதித்திட்டத்தினாலேயே அந்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.  அகில இலங்கை முஸ்லிம் வாலிபர் சங்கப் பேரவையின் 68ஆவது மாநாடு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை அட்டாளைச்சேனை கல்வியியற் கல்லூரியில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.  அவர் அங்கு மேலும் கூறியதாவது:-  இலங்கையில் முஸ்லிம்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கும் - நெருக்கடிகளுக்கும் மத்தியிலேயே வாழ்ந்து கொண்டுள்ளனர். இலங்கையில் மாத்திரமல்லாது  உலகம் முழுவதும் முஸ்லிம்களுக்கு இந்நிலை தான் உள்ளது.  நாங்கள் சர்வதேச மாநாடுகளுக்கு செல்கின்ற போது மிக மோசமான காலகட்டத்தில் நாங

மரண தண்டனைதான் ஒரே வழி;

மரண தண்டனைதான் ஒரே வழி; ஜனாதிபதியின் தீர்மானம் சரியானதே  ============================== =========  ''இலங்கையில் போதைப் பொருள் பாவனை மற்றும் வர்த்தகத்தை முற்றாக ஒழிக்கும் நோக்கில் மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கு ஜனாதிபதி  தீர்மானித்திருப்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.மரண தண்டனையே போதைப் பொருளின் கோரப் பிடியில் இருந்து இந்த நாட்டைக் காப்பாற்றும். இந்தத் தீர்மானம் அரசியல் நோக்கம் கொண்டதாக இல்லாமல் நாட்டின் எதிர்காலம் மீது அக்கறைகொண்டதாக இருக்க வேண்டும்.இதன் மூலம் போதைப் பொருள் வர்த்தகமும் பாவனையும் முற்றாக ஒழிந்து நாடு நிச்சயம்  வளம் பெறும்''  -இவ்வாறு சுகாதார,போசணை மற்றும் சுதேச வைத்திய பிரதி அமைச்சர் பைஸல் காஸீம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளவை வருமாறு: இந்த நாட்டின் உண்மையான பிரஜை என்ற வகையிலும் ,சுகாதாரப் பிரதி அமைச்சர் என்ற வகையிலும் போதைப் பொருள் பாவனையற்ற -நல்லொழுக்ககொண்ட மனிதர்களைக் கொண்ட நாடாக இலங்கை இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.ஆனால்,அந்த விருப்பம் நிறைவேறுவதாக இல

முன்னாள் அமைச்ச‌ர் அதாவுள்ளாவின் உத‌வியுட‌ன் முத‌லில் நிறைவேற்ற‌ப்ப‌ட்ட‌ தேர்த‌ல் திருத்த‌ ச‌ட்ட‌ம்.

உள்ளூராட்சி தேர்தல் சட்டம் A.P.Mathan /  2012 ஒக்டோபர் 15 திங்கட்கிழமை, பி.ப. 03:29 Comments -  0 Views -  1019 கடந்த வாரம் வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட உள்ளூராட்சி மன்ற தேர்தல் திருத்த சட்ட மூலமானது இதுகாலவரை தேர்தல்களின் போது இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் மற்றும் அநீதிகளை ஒழிப்பதை அல்லது குறைப்பதை நோக்கமாக கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இலங்கை தேர்தல் வரலாற்றில் இரண்டு தேர்தல் முறைகள் அமுலில் இருந்துள்ளன. சுதந்திரத்தின் பின்னர் 1978ஆம் ஆண்டு வரையில் அமுலில் இருந்த தொகுதிவாரி தேர்தல் முறையும் 1978ஆம் ஆண்டு முதல் இன்று வரை அமுலில் இருக்கும் விகிதாசார தேர்தல் முறையுமே அவைகளாகும். இந்த இரண்டு முறையினதும் கலப்பு தேர்தல் முறையொன்றையே கடந்த வாரம் கொண்டு வரப்பட்ட சட்ட திருத்தத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தொகுதிவாரி தேர்தல் முறையினதும் விகிதாசார தேர்தல் முறையினதும் நல்ல அம்சங்களை பயன்படுத்திக் கொள்வதே புதிய சட்ட திருத்தத்தின் நோக்கமென கூறப்படுகிறது. ஆனால் கலப்பு தேர்தல் முறைக்குள் அவ்விரண்டு தேர்தல் முறைகளினதும் நல்ல அம்சங்கள் மட்டுமன்றி மோசமான அம்சங்களும் பு