Posts

Showing posts from June, 2018

இன மத பேதம் ஏற்படுத்தும் பச்சோந்திகளாக பல அரசியல்வாதிகள்;

Image
ஏறாவூர் ஸம் ஸம் ஸகாத் கிராம வீடுகள் கையளிக்கும் நிகழ்வில் அமைச்சர் சஜித் பிரேமதாஸ -------------------------------------------------------------------- இந்த நாட்டில் இன மத பேதங்களை ஏற்படுத்தி உள்ளொன்று வைத்து புறமொன்று பேசி நிறம்மாறித் திரியும் பச்சோந்திகளாக பல அரசியல்வாதிகள் இருப்பதாக வீடமைப்பு நிருமாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். அப்படியானோர் பலாத்காரமாக இப்தார் நிகழ்விலும் கலந்து கொள்கின்றார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். செமட்ட செவண' (அனைவருக்கும் நிழல்) திட்டத்தின் கீழ் ஏறாவூரில் 43 நவோதய வீடுகளும் நலனோம்புத் திட்டங்களும் கையளிக்கும் நிகழ்வு  (28) வியாழக்கிழமை கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த ஆண்டு முடிவதற்குள் இருநூறு வீடமைப்பு மாதிரிக்கிராமங்கள் நிர்மாணிக்கப்படும் எனவும் அவர் இதன்போது உறுதியளித்தார். இதன்போது மேலும் தெரிவித்த அவர்இ இனஇ மதஇ மொழி பிரதேச வேறுபாடுகளை ஏற்படுத்தி இந்த நாட்டுக்குத் தீவைத்து அரசியல் பிழைப்பு நடாத்துபவர்கள் இருக்கின்றார்கள். மக்களால் விரட்டப்பட்டவர்கள் மீண்டும் ஆ

Sri Lanka tobacco farmers light up against 2020 ban with first report from the frontlines

Image
Dr. Chatura Rodrigo of Green Space Consultancies (right) presents his report titled Farmer Perspectives on Proposed Tobacco Ban to  Minister of Industry and Commerce Rishad Bathiudeen on 26 June in Colombo. Ahead of Sri Lanka’s tobacco industry ban of 2020, the determined industry struck back with its first ever research report directly from its frontlines-the farmer community- unveiling it in Colombo on 26 June. “About 200,000 farmers are directly involved in tobacco cultivation and they will be required to change to alternative crops” said the Minister of Industry and Commerce Rishad Bathiudeen on 26 June in Colombo. Minister Bathiudeen was addressing the launch event of tobacco farmer research report titled “Farmer Perspectives on Proposed Tobacco Growing Ban and Opportunity to Diversify” by Dr. Chatura Rodrigo of Green Space Consultancies (GSC).   The ban on tobacco cultivation in Sri Lanka is expected to start from 2020. Importation of cigarettes, and tobacco als

இளம் தலைவர்களை கௌரவிக்கும் நிகழ்வு

Image
பாறுக் ஷிஹான் அல்-மீஸான் பெளண்டேசன் ஸ்ரீலங்கா அமைப்பின் 14 வருட நிறைவினை முன்னிட்டு நடாத்தப்பட்ட  இளம் தலைவர்களை கௌரவிக்கும் நிகழ்வு கல்முனை மஹ்மூத் பாலிகா மகளிர் கல்லூரி மண்டபத்தில் நேற்று(25) மாலை அமைப்பின்  தவிசாளர் நூறுல் ஹூதா உமர் தலைமையில் ஆரம்பமானது. இதன் போது   பிரதம அதிதிகளாக கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.இராதாகிருஷ்ணன் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின்  முஸ்லிம் விவகார பணிப்பாளர் சிராஸ் யூனுஸ் ஆகியோரும் சர்வதேச மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தூதுவர் கலாநிதி அன்வர் எம். முஸ்தபா  காரைதீவு பிரதேச சபை தவிசாளர்  ஜெயசிரில்  மீஸான் பௌண்டசன் நிகழ்ச்சி திட்டமிடல் அதிகாரி சமாதான நீதவான் அகமட் புர்கான் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் பல திறமைகளை வெளிக்காட்டிய பல மாணவர்கள் அதிதிகளால் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மன்சூர் MP அப்படி என்னதான் பாராளுமன்றத்தில் பேசினார் ஒரு விமர்சனப் பார்வை... Inbox x

Image
றிம்சி ஜலீல்- கடந்த 21ம் திகதி மன்சூர் MP பாராளுமன்றத்தில் ஆவேசமாகப் பேசியதாக முஸ்லிம் காங்கிரஸ் மஞ்சள் கவர் போராளிகளினால் ஒரு போலியான கருத்தையும் விம்பத்தையும் இந்த சமூகத்துக்கு நடித்துக்காட்ட முனைகின்றதை புரிந்துகொள்ள முடிகின்றது. பாராளுமன்றத்தில் மன்சூர் MP எடுத்துக் கொண்ட விடையம் தலைவர் அஷ்ரப் அவர்களின் காலம் முதல் அன்மையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வரை அதிகமாக பேசப்பட்டு வரக்கூடிய ஒரு விடையம் என்பதை அரசியல் மட்டத்தில் உள்ள அனைவரும் அறிவார்கள். ஆனால் இங்கு முஸ்லிம் காங்கிரஸ் போராளிகளினால் மன்சூர் MP மட்டும்தான் இந்த விடையத்தை ஆவேசமாகப் பேசினார் அதுவும் அரசாங்கத்திற்க்குள்ளே இருந்து கொண்டு இப்படி பேச முடியுமா..? என்ற கேள்வியை கேட்டு அதை புகழ்ந்து அது மன்சூர் MP யினால் மட்டுமே முடியும் என்று போராளிகள் எழுதுவது மிகவும் கோமாளித்தனமான விடையமாகும். உண்மையான விடையம் என்னவென்றால் முஸ்லிம்களுக்கு குரல் கொடுத்த தலைவர் அஷ்ரபாக இருக்கட்டும் அல்லது அன்மையில் இந்த விடையம் தொடர்பாக குரல் கொடுத்து வருகின்ற அமைச்சர் ரிஷாட் பதியுதீனாக இருக்கட்டும் இ

பேலியகொடை மெனிங் மரக்கறி சந்தையின் பணிகள் பூர்த்தி;

2019 இல் திறந்து வைப்பு ( மினுவாங்கொடை நிருபர் ) பேலியகொடையில் தற்போது நிர்மாணிக்கப்பட்டு வரும் மெனிங் மரக்கறி சந்தையின் பணிகள் யாவும் பூர்த்தியடைந்து வரும் நிலையில், எதிர்வரும் 2019 ஆம் ஆண்டின் நடுப்பகுதில் இதனை மக்கள் பாவனைக்காகத் திறந்து வைக்க முடியும் என, நகர அபிவிருத்தி அதிகார சபை நம்பிக்கை தெரிவித்துள்ளது.    பேலியகொடையில் அமைக்கப்பட்டு வரும் மரக்கறி சந்தையின் கட்டுமான வேலைகளில் 75 வீதமான பணிகள், தற்போது  பூர்த்தியடைந்துள்ளன. இதற்காக, 4600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நவீன தொழில் நுட்ப முறைமையினைப் பயன்படுத்தி, இரண்டு மாடிகளைக் கொண்ட அதி விசால கட்டிடமாக இச்சந்தைத் தொகுதி  அமைக்கப்பட்டு வருகிறது.    கொழும்பு நகருக்குள் ஏற்பட்டுள்ள வாகன நெறிசலைக் கட்டுப்படுத்தும் நோக்கிலும், மரக்கறி பாவனையாளர்களுக்கு அதி கூடிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கிலுமே, இந்தப் பாரிய செயற்திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, நகர அபிவிருத்தி அதிகார சபையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அமைச்சரினால் நியமிக்கப்பட்ட ஹஜ் கமிட்டியும் ஹஜ்ஜூக்கு அனுப்பும் விடயத்தில் தவரிழைத்த வருகின்றது

Image
(அஷ்ரப் ஏ சமத்) இ ந்த ஆட்சியிலும் கடந்த 3 வருடங்களாக  முஸ்லீம் சமய விவகார அமைச்சரினால் நியமிக்கப்பட்ட ஹஜ் கமிட்டியும்   இலங்கையிலிருந்து வருடா வருடம்  3000 ஹாஜிமாா்களை ஹஜ்ஜூக்கு அனுப்பும் விடயத்தில் தவரிழைத்த வருகின்றது. இது சம்பந்தமாக எமது மூன்று ஹஜ் முகவா்கள் சங்கங்கள் இணைந்து இவ் ஊழல் மோசடிகளை  ஜனாதிபதியின் கீழ் உள்ள  ஊழல் மோசடி விசாரனைக் ஆனைக் குழுவுக்கு அறிவித்திருந்தோம். அதற்கமைவாக ஜனாதிபதி விசரனைக் குழு எதிா்வரும் செவ்வாய்க்கிழமை (26)ம் திகதி எங்களது பிரநிதிகளை  சகல தஜ்தாவேஜூக்களுடன் விசாரனைக்கு வருமாறு அழைத்துள்ளது.  அதற்கமைவாக எமது பிரநிதிகள் உரிய தகவல்கள் தங்களிடம் உள்ளன. விசாரனையின்போது இவற்றினை அவா்கள்முன்  சமா்ப்பிப்போம்.  இந்த நாட்டில் சிறந்த சீரானதொரு   ஹஜ் முறைமையை நாம் எதிா்பாாக்கின்றோம். என  ஹஜ் முகவா்கள் அமைப்பின் பிரதித் தலைவா் எம். முஹம்மத் தெரிவித்தாா். இன்று கொழும்பு 2 நிப்போன் ஹோட்டலில் நடைபெற்ற ஊடகவியலாளா் சந்திப்பிலேயே  முஹம்மத் இத் தகவல்களைத் தெரிவித்தாா்.  இச சந்திப்பில் மேலும் ஹஜ் முகவா்களின் முகாமைத்துவ பணிப்பாளா்களான,  என் எஸ் சுபையில், மொஹம்ம

யாழ் பல்கலை சிங்கள மாணவர்களுக்கு இடையே கைகலப்பு- 2 மாணவர் மீது கத்திக்குத்து

Image
பாறுக் ஷிஹான் யாழ்ப்பாண பல்கலைக்கழக முகாமைத்துவ வணிக பீட இறுதி வருட சிங்கள மாணவர்களுக்கு இடையே கைகலப்பில் கத்திக் குத்துக்கு இலக்காகி இரண்டு மாணவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் இன்று (24) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் இடம்பெற்றது. ஜயசூர்ய (வயது -26), சண்றுவான் (வயது – 26) ஆகிய இருவரே கத்திக் குத்துக்கு இலக்காகி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஒருவருக்கு தலையிலும் மற்றயவருக்கு முதுகிலும் கத்திக் குத்து காயம் உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. “யாழ்ப்பாண பல்கலைக்கழக முகாமைத்துவ வணிக பீட இறுதி சிங்கள மாணவர்கள் இரண்டு தரப்புகளாக நீண்ட நாள்களாக செயற்படுகின்றனர். ஒரு தரப்பினர் இன்று விளையாடிக் கொண்டிருந்தனர். அந்த இடத்துக்கு வந்த மற்றய தரப்பினர் பகிடிவதை தொடர்பில் பேச்சுக்களை ஆரம்பிக்க இரண்டு தரப்புகளுக்கு இடையேயும் கைகலப்பு ஏற்பட்டது. இதன்போது மாணவர் ஒருவர் கத்தி எடுத்து இருவரைக் குத்தினார்” என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. கைகலப்பில் மேலும் சில மாணவர்கள் காயமடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது. சம

ஐந்து வல்லரசுகள் சேர்ந்து புலிகளை அழித்தார்கள்- இனியும் பிரிந்தால் அழிவோம்; ஒற்றுமையே பலம்: முதலமைச்சரின் நூல் வெளியீட்டில் இரா.சம்பந்தன்

Image
பாறுக் ஷிஹான்- தமிழீழ விடுதலைப்புலிகளை அழிக்க சர்வதேச நாடுகள் உதவியதாலேயே இலங்கை அரசாங்கம் வெற்றிபெற்றது. இப்போது நமது தேவை. ஒற்றுமையின்றி பிரிந்தால் நிச்சயம் அழிந்துவிடுவோம் என எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.  இன்று (24) இடம்பெற்ற  முதலமைச்சரின் நூல் வெளியீட்டில் உரையாற்றிய போதே இதனை தெரிவித்தார். “கனடா, அவுஸ்திரேலியா, பிரித்தானியா, அமெரிக்கா, இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகள் புலிகளை அழிக்க உதவினார்கள். இந்த நாடுகள் புலிகளை தடை செய்து, செய்த உதவியினாலேயே இலங்கை வெற்றிபெற்றது. விடுதலைப்புலிகளை அழிக்கும்போது, தமிழ் மக்களின் இனப்பிரச்சனையை தீர்ப்பதாக சர்வதேச சமூகம் வாக்களித்திருந்தது. ஆனால் இலங்கை அரசு இனப்பிரச்சனை தீர்விற்கு முயற்சிக்கவில்லை. தனது பொறுப்பில் இருந்து சர்வதேச சமூகம் நீங்க  முடியாது. இந்த நாட்டின் ஆட்சிமுறை சிறுபான்மையினருக்கு உதந்ததல்ல. அதை மாற்ற வேண்டுமென மக்கள் வாக்களித்துள்ளனர். இவற்றை நாம் அடைவதாக இருந்தால் நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும். நாம் ஒரு தூணாக நிற்க வேண்டும். தமிழ் மக்கள் ஒற்றுமையின் மூலமா

கிளிநொச்சியில் புலி அடித்து கொலை

Image
பாறுக் ஷிஹான்- கிளிநொச்சி அம்பாள்குளம் கிராமத்தில் இன்று(21) காலை ஏழு மணி முதல் மதியம் 12.30 மணி வரை வன ஜீவராசி திணைக்கள உத்தியோத்தர் ஒருவர் உட்பட பத்து பேரை தாக்கிய காயத்திற்கு உட்படுத்திய சிறுத்தை புலி பொது மக்களால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளது. இன்று காலை எழு மணியளவில் அம்பாள்குளம் விவேகானந்த வித்தியாலயத்திற்கு பின்புறமாக மக்கள் குடியிருப்பு பகுதியில் ஆட்களற்ற காணிகுள் உட்புகுந்த சிறுத்தை மாடுகட்டுவதற்கு சென்ற ஒருவரையும் மற்றொருவரையும் தாக்கியுள்ளது. இதனை தொடர்ந்து கிளிநொச்சி வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு பொது மக்களால் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வெறுங்கையுடன் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் வருகை தந்தனர். இதனால் பொது மக்களுக்கும் அவர்களுக்குமிடையே கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டது. யாழ்ப்பாணத்தில் இருந்து வனஜீவராசிகள் திணைக்கள மருத்துவர் வருவார் என அறிவிக்கப்பட்டது. மதியம் பதினொரு மணியளவில் வனஜீவராசிகள் திணைக்கள மருத்துவர் உட்பட சில அதிகாரிகள் வருகைதந்தனர் இதற்கிடையில் எட்டு பேரை சிறுத்தை தாக்கியிருந்தது. பின்னர் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சுற்

முஸ்லிம் உலமாக் கட்சியின் 12 ஆவது ஆண்டு நிறைவு விழா

Image
( மினுவாங்கொடை நிருபர் )    ஜ‌னாதிப‌தி மைத்திரிபால‌ சிறிசேன‌ த‌லைமையிலான‌ ஐக்கிய‌ ம‌க்க‌ள் சுத‌ந்திர‌ முன்ன‌ணியின் கூட்டுக் க‌ட்சிக‌ளில் ஒன்றான‌ முஸ்லிம் உல‌மாக்  க‌ட்சியின் 12 ஆவ‌து ஆண்டு நிறைவு விழா,  அண்மையில்  கொழும்பு -  ம‌ருதானையில்  ந‌டை பெற்ற‌து. இத‌ன் போது க‌ட்சியின் த‌லைவ‌ர் மெளலவி முபாற‌க் அப்துல் ம‌ஜீத் உரையாற்றுவ‌தையும், க‌ட்சியின் செய‌லாளர் மௌல‌வி அஸ்வ‌ர் பாக்க‌வி, பொருளாள‌ர் அர்ஷாத், செந்த‌மிழ் க‌விஞ‌ர் தாஜ்ம‌ஹான்,  க‌ட்சியின் உய‌ர்பீட‌ உறுப்பின‌ர்க‌ளான‌ மௌல‌வி ந‌சீர் அஹ‌ம‌த்,  மௌல‌வி ஜெஸ்மின் உள்ளிட்ட உய‌ர்பீட‌ உறுப்பின‌ர்க‌ள் கலந்து கொண்டிருப்பதையும் காண‌லாம். ( ஐ. ஏ. காதிர் கான் )

இன்று பெருநாள் எடுத்தவர்கள் நாளை எல்லோருடனும் கூடி பெருநாள் எடுப்பதில் எந்தவித தவறும் இல்லை

// ஷவ்வால் பிறை தொடர்பில் நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட மூன்று வகையான தீர்மானங்களும் இஸ்லாத்தின் அடிப்படையில் சரியானதே என இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்கள் தனது மத்ஹபில் விளக்கிக் கூறியுள்ளதாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி தெரிவித்தார். ஷவ்வால் தலைப் பிறை தொடர்பில் தீர்மானிக்கும் மாநாடு இன்று (15) மஃரிப் தொழுகையின் பின்னர் கொழும்பு பெரிய பள்ளிவாயலில் இடம்பெற்றது. இதன்போது பிறை தொடர்பான தீர்மானத்தை நாட்டு மக்களுக்கு அறிவிக்கையில் அவர் இதனைக் கூறினார். நேற்று ஷவ்வால் மாதத்தின் தலைப்பிறை தொடர்பில் கருத்து முரண்பாடுகள் எழுந்தன. இதன்போது, சிலர் இன்று பெருநாள் எடுப்பதென  தீர்மானம் எடுத்தனர். இரண்டாவது தரப்பினர் அவர்கள் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் இன்று நோன்பை விடுவதெனவும், நாளை பெருநாள் எடுப்பதெனவும் தீர்மானித்தனர். மற்றும் சிலர் ஜம்இய்யாவின் தீர்மானத்துக்கு அமைய நோன்பு நோற்றனர். இந்த மூன்று விடயங்கள் தொடர்பிலும் யாரும் குழப்பிக் கொள்ளத் தேவையில்லை. இஸ்லாத்தின் இந்த மூன்றுக்கும் அனுமதி இருப்பதை இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்கள் விளக்கிக் கூறுகின்றார்கள்.

Hon Wijedasa Rajapakse’s comments: Sacrilegious Outburst in the Sanctimonious, August Assembly

Image
The All Ceylon Makkal Congress (ACMC) vehemently and bitterly protest and oppose the malicious comments   made by Hon. Wijedasa Rajapaksha   against freshly appointed National list MP. Prof. Dr.Ismail about which we are dismayed and astonished. The tarnishing comments made by  Hon.W.Rajapaksha last Friday on the 8th June at the inaugural   Oath taking ceremony by the newly appointed U.N.P Member of Parliament on behalf of A.C.M.C. is highly    deplorable. Ignoring the very fact that it was customary to welcome the newly appointed    MP with greeting    during his      Oath taking ceremony ,contrary to this noble practice,   Hon.W.Rajapaksha      burst out at and    criticized the former Vice chancellor M.S.M Ismail. which was highly unparliamentarily   and uncivilized behaviour, that tantamount to a character assassination of VC Ismail.     By heaping and harping   allegations, in a mud siling way against the national list MP     Hon.Ismail, the Hon.W. Rajapaksha has tarni

தேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின்(நுஜா) வருடாந்த இப்தார்

Image
பாறுக் ஷிஹான் தேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் (நுஜா) வருடாந்த இப்தார் , ஊடகவியலாளர் களுக்கான அன்பளிப்பு பொருட்கள் வழங்கும் நிகழ்வும் அமைப்பின் தேசிய தவிசாளர் றியாத் ஏ. மஜீட் தலைமையில் நேற்று(12) பாலமுனை கஸமாறா ரெஸ்டூரன்டில் இடம்பெற்றது. இந்த இப்தார் நிகழ்வில் அமைப்பின் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் எஸ்.எம்.அறூஸ், அமைப்பின் செயலாளர் பைசல் இஸ்மாயில், அரசியல் பிரமுகர்கள், இலக்கியவாதிகள், வைத்தியர்கள், கல்விப் புலத்தின் உயர் அதிகாரிகள், ஊடகவியலாளர்கள் பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர். மார்க்கசொற்பொழிவை மௌலவி என்.எம்.அப்துல் ஹபீல் நிகழ்த்தினார்.   இதன் போது சாய்ந்தமருது முபாறக் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் முபாறக் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்ட பிரயாணப் பை மற்றும் கிப்ட் பவுச்சர் போன்றவைகளை ஊடகவியலாளர்களிற்கு வழங்கப்பட்டன.

பிரதி விவசாய அமைச்சராக அங்கஜன் இராமநாதன் ஜனாதிபதியினால் நியமனம்

Image
பாறுக் ஷிஹான் பிரதி விவசாய அமைச்சராக இன்று பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துள்ளார். இந்த பதவிப்பிரமாணத்தின் போது 2 இராஜாங்க அமைச்சர்கள் 6 பிரதி அமைச்சர்களும் பதவி ஏற்கின்றனர்.

இந்து சமய அலுவல்கள் பிரதி அமைச்சராக காதர் மஸ்தான்

Image
பாறுக் ஷிஹான் மீள்குடியேற்றம் புனர்வாழ்வளிப்பு வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து சமய அலுவல்கள் பிரதி அமைச்சராக காதர் மஸ்தான் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனவினால் இன்று  நியமிக்கப்பட்டுள்ளார். இவர் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராகவும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முக்கியஸ்தராகவும் கடந்த காலங்களில் அப்பகுதி மக்களிற்கு சேவையாற்றியுள்ளார்.

விரிவுரையாளர்கள் மாணவிகளிடம் பாலியல் லஞ்சம்

Image
தெ.கி.பல்கலைக்கழகத்தில் பாலியல் லஞ்சம்: உயர் கல்வி அமைச்சரின் உரைக்கு பின்னணியில் உபவேந்தரே உள்ளார்: ஆசிரியர் சங்க தலைவர் குற்றச்சாட்டு!! தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் சில விரிவுரையாளர்கள் மாணவிகளிடம் பாலியல் லஞ்சம் கேட்பதாக, உயர் கல்வி அமைச்சர் கூறிய விடயம், பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் வழங்கிய தகவலின் அடிப்படையில் வெளியிடப்பட்டதாக இருக்க வேண்டும் என்று, தாம் சந்தேகம் கொள்வதாக, அந்தப் பல்லைக்கழகத்தின் ஆசிரியர் சங்கத் தலைவர் எம். அப்துல் ஜப்பார் தெரிவித்துள்ளார். தென்கிழக்கு பல்கலைக்கழகத்திலுள்ள சில விரிவுரையாளர்கள், அங்குள்ள மாணவிகளிடம் பாலியல் லஞ்சம் கோருவதாகவும், பாலியல் லஞ்சம் வழங்காமல் சில பாடங்களில் அங்குள்ள மாணவிகள் சித்தியடைய முடியாது என்றும், உயர் கல்வி அமைச்சர் விஜேதாஸ ராஷபக்ஷ நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை நாடாளுமன்றில் உரையாற்றும் போது கூறினார். இவ்விடயம் தொடர்பில், ஊடகவியலாளர் சித்தீக் காரியப்பருக்கு கருத்து தெரிவிக்கும் போதே, தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் சங்க தலைவர் ஜப்பார் மேற்படி சந்தேகத்தை வெளியிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்; “அண்மைய

මහනුවර මහා නගර සභාවට දේශීය ණය හා සංවර්ධන අරමුදලින් රුපියල් මිලියන 1000ක සහන ණයක්

Image
මහනුවර නගරයේ වාහන තදබදයට විසදුමක් ලෙස මහනුවර නගර සභාව මගින් කටුකැලේ ප්‍රදේශයේ ඉදිකිරීමට යෝජිත මහල් නවයකින් යුත් රථගාල සහිත වෙළද සංකීර්ණය ඉදිකිරීම සදහා  පළාත් සභා   පළාත් පාලන සහ ක්‍රීඩා අමාත්‍යාංශය යටතේ ඇති  දේශීය ණය හා සංවර්ධන අරමුදලින්    රුපියල් මිලියන 1000ක සහන ණය  මුදලක් ලබා දීමට නියමිතය. ඊට අදාල ගිවිසුම අත්සන් කිරීම  පළාත් සභා    පළාත් පාලන සහ ක්‍රීඩා අමාත්‍ය ෆයිසර් මුස්තෆා රාජ්‍ය අමාත්‍ය ශ්‍රියාණී විජේවික්‍රම මහත්ම මහත්මීන්ගේ ප්‍රධානත්වයෙන් අද උදෑසන පළාත් සභා    පළාත් පාලන සහ ක්‍රීඩා අමාත්‍යාංශයේ දී සිදුකෙරිණි. දේශීය ණය හා සංවර්ධන අරමුදලේ සභාපති අමාත්‍යාංශ ලේකම් කමල් පත්මසිරි මහනුවර නගරාධිපති කේසර ඩී සේනානායක යන මහත්වරු මෙම ගිවිසුම අත්සන් කළහ. 150 , 000 පමණ නාගරික ජනගහනයක්    හා දිනකට ලක්ෂ 06ක් පමණ දෙස් විදෙස් සංචාරකයින්   පැමිණෙන මහනුවර නගරයේ වාහන තදබදය අවම කිරීම සදහා    මහනුවර කටුකැලේ ප්‍රදේශයේ    මෙම රථගාල සහිත වෙළද සංකීර්ණය ඉදි කෙරේ. වසර 100ක් පැරණි මූල්‍ය ආයතනයක් වන දේශීය ණය හා සංවර්ධන අරමුදලින්    ලබා දෙන විශාලතම ණය මුදල වන මෙම ණය මුදල වසර 05ක සහන ණය වාරික

தந்தி கம்பத்தில் மோதி இளைஞன் யுசுப் உயிா் இழப்பு

(அஷ்ரப் ஏ சமத்)     தெஹிவளையைச் சோ்ந்த இன்சாப் இப்றாகீம் 21 வயது இளைஞனும் 13வயதுடைய சிறுவன் இருவரும் தலைக்கவசம் அனியாமல் தெஹிவளை வைத்திய வீதியால் தனது நண்பனின் மோட்டா் பைசிக்களை எடுத்துக் கொண்டு இரவு நேர தொழுகைக்காக நடு நிசியில் பள்ளிவாசலை நோக்கிச் சென்று கொண்டிருந்தனா். அதிக வேகத்தில் சென்றதால் மோட்டாா் பைசிச்களின் வேகத்தினை அவரால் கட்டுப்படுத்த முடியாமல் பாதையில் இருந்த தந்தி கம்பத்தில் மோதி இளைஞன் யுசுப் வயது 21 அவ்விடத்திலேயே உயிா் இழப்பு மற்றைய சிறுவன் யுசுப் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே வபாத்தாணா்கள். தற்பொழுது களுபோவிலை வைத்தியசாலையில் ஜனாசாக்கள் வைக்கப்பட்டுள்ளன உரிய பரிசோதனை, பொலிசாரின் விசாரனைகள் முடிந்தவுடன் ஜானசாக்கள் கையளிக்கப்படும். 

அமைச்சர் ரிஷாத் பதியூதீனுக்கும் – ரவூப் ஹக்கீமிற்கும் இடையில் கடும் வாக்குவாதம்..!

Image
அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர் ரிஷாத் பதியூதீனுக்கும் – ரவூப் ஹக்கீமிற்கும் இடையில் கடும் வாக்குவாதம்..! நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீமிற்கும், கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் ரிஷாத் பதியூதீனுக்கும் இடையில் நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தின்போது கடும் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளதாக அறியமுடிகின்றது. வடக்கின் மீள்க்குடியேற்றம் தொடர்பில் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடு கடும் வாக்குவாதமாக இடம்பெற்றதாக மேலும் தெரிய வருகிறது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று முற்பகல் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்து கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. வடக்கின் மீள்க்குடியேற்றத்துக்காக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் குழுவில் தம்மையும் இணைத்துக்கொள்ளுமாறு அமைச்சர் ரவூப் ஹக்கீம் இதன்போது விடுத்த கோரிக்கைக்கு அமைச்சர் ரிஷாத் பதியூதீன் எதிர்ப்பு வெளியிட்டுள்ளார். அமைச்சர் ரவூப் ஹக்கீமை அந்தக் குழுவில் உள்வாங்கினால், தாம் அதிலிருந்து விலகுவதாக அமைச்சர் ரிஷாத் பதியூதீன் கூற

கொழும்பு காக்கைதீவு வாழ்மக்களின் பிரச்சினைக்கு தீர்வுகாண அமைச்சர்ரிஷாட் நடவடிக்கை

Image
அகிலஇலங்கைமக்கள்காங்கிரஸின்மேல்மாகாணசபைஉறுப்பினர்பாயிஸின்அழைப்பைஏற்றுகட்சியின்தலைவரும்அமைச்சமானரிஷாட்பதியுதீன் , கொழும்பு , மட்டக்குளிகாக்கைத்தீவுபிரதேசத்திற்குவிஜயம்செய்துஅங்குவாழும்மக்களின்பிரச்சினைகள்தொடர்பில்நேரடியாகக்கேட்டறிந்துகொண்டார் . அமைச்சருடனானஇச்சந்திப்பின்போது , மன்னார் , மட்டக்களப்புஇன்னும்பிறமாவட்டங்களிலிருந்துஇடம்பெயர்ந்துமட்டக்குளி , காக்கைதீவில்வாழும் 130 குடும்பங்கள்எந்தவிதஅடிப்படைவசதியும்இன்றிவாழ்வதாகவும் , நீண்டகாலமாகபெரும்அசௌகரியங்களைசந்திப்பதாகவும்அந்தமக்கள்அமைச்சருக்குத்தெரியப்படுத்தினர் .   மேலும்சுகாதாரமற்றகழிவறைகளைப்பயன்படுத்துவதின்மூலம்சிறுவர்களும்முதியோர்களும்பல்வேறுசுகாதாரசீர்கேடுகளுக்குஆளாகுவதாகவும்அம்மக்களால்சுட்டிக்காட்டப்பட்டது . இதுவரையாரும்தம்மைசந்தித்து , தமதுபிரச்சினைகள்தொடர்பில்கேட்டறிந்துதமக்குவிடிவைப்பெற்றுக்கொடுக்கநடவடிக்கைஎடுக்கவில்லையெனவும்ஆதங்கப்பட்டனர் . இந்தமக்களின்பிரச்சினைகளைகேட்டுஅறிந்துகொண்டஅமைச்சர்ரிஷாட்பதியுதீன் , வீட்டுப்பிரச்சினைகளைதீர்க்கும்முகமாக , அமைச்சர்சஜித்பிரேமதாசவுடன்கலந்துரையாடிவீடுகள்அமைத்துக்கொடுக்க

ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் ஊடாக கொழும்பு மட்டக்குளிய பதுறியா பள்ளிவாசலுக்கு நிதி உதவி

Image
++++++++++++++++++++++++++++++ ++++++++++++++++++ கொழும்பு -15, மட்டக்குளிய பதுறியா ஜும்ஆ பள்ளிவாசலின் நீண்ட கால தேவையாக இருந்த ஒலிபெருக்கி சாதனங்களைக் கொள்வனவு செய்வதற்குத் தேவையான நிதியை ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் வழங்கி வைத்தது.  ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் தலைவரும் நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வி டம் மட்டக்குளிய பதுறியா பள்ளிவாசல் நிர்வாகம் மேற்படி கோரிக்கையை விடுத்திருந்தது.  அதற்கமைய இராஜாங்க அமைச்சரின் பிரத்தியேக உதவியாளர் எம்.றிஸ்லி ஊடாக குறித்த ஒலிபெருக்கி சாதனங்களைப் பெற்றுக்கொள்ளவற்கு தேவையான ஒரு இலட்சத்தி முப்பது ஆயிரம் ரூபாய் பொறுமதியான காசோலை பள்ளிவாசல் நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டது. 

கல்முனை வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் வருடாந்த இப்தார் நிகழ்வு.

Image
(எஸ்.அஷ்ரப்கான்) கல்முனை வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில்    வருடாந்த இப்தார் நிகழ்வு கல்முனை அமானா வங்கி வளாகத்தில் இன்று (04) திங்கட் கிழமை, சங்கத்தின் தலைவர் கே.எம்.ஏ. சித்தீக் தலைமையில் நடைபெற்றது. கல்முனை சனிமௌண்ட் விளையாட்டுக் கழகத்தினரின் விசேட ஒத்துழைப்புடன் நடந்த   இந்த இப்தார் நிகழ்வில் மௌலவி    செய்னுடீன் காபிஸி (முப்தி) அவர்களின் விசேட மார்க்கச் சொற்பொழிவு இடம்பெற்றது. அத்துடன் மௌலவி ஏ.ஆர்.ஸபா முஹம்மது (நஜாயி) அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.​ இந்த இப்தார் நிகழ்விற்கு கல்முனை பிரதேசத்தின் வர்த்தகர்கள், உலமாக்கள், கல்முனை பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர்கள், திணைக்களங்களின் உயர் அதிகாரிகள், வைத்தியர்கள், பொறியிலாளர்கள், விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளிவாயில்களின் நிர்வாகத்தினர்    என பல தரப்பினையும் சேர்ந்த நுாற்றுக்கணக்கான மக்கள் கலந்து சிறப்பித்தமை விசேட அம்சமாகும்.

“பின்கதவால் சென்று அரசியல் செயற்பாடுகளை நாம் ஒருபோதும் மேற்கொள்வதில்லை”

Image
“பின்கதவால் சென்று அரசியல் செயற்பாடுகளை நாம் ஒருபோதும் மேற்கொள்வதில்லை” அம்பாறை கட்சி முக்கியஸ்தர்களுடனான சந்திப்பில் அமைச்சர் ரிஷாட்! -சுஐப் எம்.காசிம்- முஸ்லிம்களின்பாரிய பங்களிப்புடனும், எமது கட்சியின் முதன்மைப் பங்களிப்புடனும் உருவாக்கப்பட்டநல்லாட்சி அரசாங்கம், இந்த மூன்று வருட காலப் பகுதியில் நமது சமூகத்துக்கு குறிப்பிடத்தக்க அளவு எந்தவொருநன்மையையும் மேற்கொள்ளாத போது, நாங்கள் அரசாங்கத்துக்குள்ளேயே இருந்து, முடிந்தளவு சமூகத்தின்நன்மைக்காக போராடி வருகின்றோம் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அம்பாறை மாவட்டத்தின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அமைப்பாளர்கள், உள்ளூராட்சித் தேர்தல் பிரதிநிதிகள் மற்றும் உள்ளூராட்சித் தேர்தல் வேட்பாளர்கள் ஆகியோரை, இன்று காலை ( 04 ) கொழும்பில் சந்தித்துக் கலந்துரையாடிய போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது, மஹிந்தவின் அரசாங்கத்தில் நாம் பலமானஅமைச்சராக இருந்த போதும், சமூகத்துக்கு பாரிய துன்பங்கள் ஏற்பட்ட போது, பதவிகளைத் தூக்கியெறிந்துவிட்டு அந்த அரசை விட்